உண்மைச் சரிபார்ப்புகளும்
நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வருமான வளர்ச்சியினை பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்துகின்றார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2018 மற்றும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வாராந்த பொருளாதார குறிகாட்டிகளைப் பயன்படுத்தி FactCheck ஆராய்ந்தது. பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கூற்றினை தெரிவித்திருந்த காலப்பகுதியில், 2019 ஆம் ஆண்டுக்கான முதல் 9 மாதங்களுக்கான தரவுகள் மாத்திரமே கிடைத்திருந்தன (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).
நல்லாட்சி அரசாங்கம் அரச வருமானத்தை இருமடங்காக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு தொகைளை தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார்: 2014 ஆம் ஆண்டில் ஆரம்பத் தொகையாக 1.05 ட்ரில்லியன் ரூபாவையும், 2015-2019 காலப்பகுதியில் அதிகபட்சமாக 2.1 ட்ரில்லியன் ரூபாவையும் குறிப்பிடுகின்றார். ஆரம்பத் தொகையை குறிப்பிடுவதில் பாராளுமன்ற உறுப்பினர் தவறிழைக்கின்றார் – 2014 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட மொத்த வருமானம் 1.20 ட்ரில்லியன் ரூபா ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் ஆரம்பத்தொகையை தவறாகக் குறிப்பிடுவதற்கு அவர் மொத்த வருமானத்தை (வரி மற்றும் வரி தவிர்த்த வருமானங்கள் இரண்டையும் உள்ளடக்கியது) குறிப்பிடுவதை விடுத்து வரி வருமானத்தை (2014 ஆம் ஆண்டில் 1.05 ட்ரில்லியன் ரூபா) மாத்திரம் குறிப்பிட்டது காரணமாக இருக்கலாம்.
2015 – 2019 காலப்பகுதியில் அதிகபட்ச வருமானமான 1.92 ட்ரில்லியன் ரூபா 2018 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர் மேற்கோள் காட்டுவதை விடக் குறைவாகும். எனவே பாராளுமன்ற உறுப்பினர் தனது கூற்றில் 2019 ஆம் ஆண்டினை சுட்டிக்காட்டுவதாகக் கருதமுடியும். பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கூற்றினை தெரிவித்த காலப்பகுதியில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி 2019 ஆம் ஆண்டுக்கான வருமானத்தை மதிப்பிடுவதற்கு, அதற்கு முன்னரான ஆண்டுகளின் (2015-2018) இறுதி மூன்று மாதங்களில் சேகரிக்கப்பட்ட வருமானத்தின் பங்கினை FactCheck பயன்படுத்திக் கொள்கின்றது. அட்டவணை 1 இல் காட்டப்படுவது போன்று, 2015 – 2018 (29.5%) காலப்பகுதியின் இறுதி மூன்று மாதங்களில் சேகரிக்கப்பட்ட வருமானத்தின் சராசரியின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டுக்கான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் 2 ட்ரில்லியன் ரூபா ஆகும். எனவே, அவர் இந்தக் கூற்றினை தெரிவித்த காலத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இது சரியாக இருக்கின்றது.
ஆரம்பத் தொகையை குறைத்து மதிப்பிடுவதால் பாராளுமன்ற உறுப்பினர் 2015 – 2019 காலப்பகுதியில் வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பினை மிகைப்படுத்துகின்றார். மொத்த அரச வருமானம் 1.67 மடங்கினால் மாத்திரமே அதிகரித்துள்ளது (மதிப்பீட்டின் அடிப்படையில்) மாறாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று இரண்டு மடங்காக அல்ல.
எனவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “பகுதியளவில் உண்மையானது” என வகைப்படுத்துகின்றோம்.
குறிப்பு: இந்த அறிக்கை வெளிவந்ததன் பின்னர், 2019 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2020 ஏப்ரல் 28 ஆம் திகதி வெளியானது. அதில் 2019 ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட வருமானமானது 1.90 ட்ரில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
மூலம்
- இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் – 9 ஜனவரி 2020, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200109_e.pdf.
- இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் – 18 ஏப்ரல் 2019, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20190418_e.pdf.
- இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் – 12 ஏப்ரல் 2018, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20180412_e_1.pdf.
- இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் – 21 ஏப்ரல் 2017, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/wei_2017.04.21.pdf
- இலங்கை மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் – 29 ஏப்ரல் 2016, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/wei_20160429.pdf.
- இலங்கை மத்திய வங்கி, சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு – ஆண்டறிக்கை 2018, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/en/15_S_Appendix.pdf.
- இலங்கை மத்திய வங்கி, நிதிக்கொள்கை மற்றும் அரச நிதி – ஆண்டறிக்கை 2019, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2019/en/10_Chapter_06.pdf.