அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்

இலங்கையில் கோவிட் 19 வளர்ச்சி வீதம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம்: தரவு மற்றும் கணிப்பு ஆகிய இரண்டிலும் தவறு

"

கோவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட முதலாவது உள்ளுர் நபரை கண்டறிந்ததில் இருந்து அடுத்த ஏழு நாட்களில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | மார்ச் 19, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்த அறிக்கையில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் இரண்டு கூற்றுக்களை முன்வைக்கின்றது. (1) கோவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட முதலாவது உள்ளுர் நபரை கண்டறிந்ததில் இருந்து அடுத்த ஏழு நாட்களில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இத்தாலியை விட அதிகமாகும். (2)  தடுப்பு நடவடிக்கைகள் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைகளுக்கமைய தீவிரமாக்கப்படாவிட்டால் புத்தாண்டு காலப்பகுதியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும்.

முதலாவது கூற்றுக்கு ஆதாரமாக அதாவது முதல் 7 நாட்களில் இலங்கையில் கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இத்தாலியை விட அதிகம் என்பதற்கு அரச வைத்திய அதிகாரிகளின்  சங்கம் முன்வைத்த வரைபடம் அட்டவணை 1 இல் மீள் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தாலியுடன் இலங்கையை ஒப்பிடும் போது, முதலாவதாக ‘உள்ளுரில்’ கண்டறியப்பட்ட நபரை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் குறிப்பிடுகின்றது. வெளிநாடுகளில் வைரசினால் பாதிக்கப்பட்டு நாட்டிற்குள் வந்தவர்களை ‘இறக்குமதி’யான தொற்றாளர்கள் எனவும், நாட்டிற்குள்ளே வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை ‘உள்ளுர்’ எனவும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கிடுவதில் நிலையான வேறுபாடு காணப்படுகின்றது.

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் முதலாவது கூற்றினை ஆராய்வதற்கு FactCheck ஜோன் ஹொப்கின்ஸ் கொரொனா வைரஸ் நிலையத்தின் தரவுகளைப் பயன்படுத்தியது. இது அனைத்து நாடுகளிலும் கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நாளாந்தம் கண்காணிக்கின்றது. அத்துடன் இலங்கை மற்றும் இத்தாலியில் கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு FactCheck உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்தி அறிக்கைகளையும் ஆராய்ந்தது.

அட்டவணை இரண்டில் இலங்கை மற்றும் இத்தாலியில் நாளாந்தம் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை காட்டப்படுகின்றது. வேறு நாடுகளில் இருந்து நோய்த்தொற்றைக் கொண்டு வந்தவர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை. அதாவது இலங்கையில் முதலாவது நோய்த்தொற்றுடைய நபர் ஜனவரி 27 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அதேபோன்று இத்தாலியில் முதல் 3 நபர்களும் ஜனவரி 31 – பெப்ரவரி 7 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கண்டறியப்பட்டனர். இவர்கள் அனைவரும் வேறு நாடுகளில் இருந்து நோய்த்தொற்றுடன் நாடு திரும்பியவர்கள். உள்ளுரிலேயே நோய்த்தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் இத்தாலியில் பெப்ரவரி 21 ஆம் திகதியே கண்டறியப்பட்டார்.

அரச வைத்திய அதிகாரிகளின்  சங்கம் அறிக்கை வழங்கிய நாள் மற்றும் தற்போதும் கூட இத்தாலியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதை அட்டவணை 2 காட்டுகின்றது. அரச வைத்திய அதிகாரிகளின்  சங்கத்தின் தரவுகளில் உள்ள பிழையானது, உள்ளுரில் தொற்றுக்கு இலக்கான முதலாவது நபரின் திகதியைக் கண்டறிவதில் அல்லது வெளிநாட்டில் இருந்து இத்தாலிக்கு நோய்த்தொற்றைக் கொண்டுவந்த மூன்றாவது நபரை முதலாவது உள்ளுர் தொற்றாக தவறாக பயன்படுத்தியதால் ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே, முதல் 7 நாட்களில் இத்தாலியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தொற்றுக்கு இலக்கானவர்களை கண்டறிதலின் ஒப்பீட்டு வளர்ச்சி தொடர்பில் தவறான முடிவுக்கு அரச வைத்திய அதிகாரிகளின்  சங்கம் வருகின்றது. எனவே அரச வைத்திய அதிகாரிகளின்  சங்கத்தின் முதலாவது கூற்றை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக் காலப்பகுதியில் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் என அரச வைத்திய அதிகாரிகளின்  சங்கத்தின் இரண்டாவது கூற்று குறிப்பிடுகின்றது. இது இலங்கையில் வைரஸ் பரவலின் ஆரம்பகால கணிப்பினை மாத்திரம் அன்றி எதிர்கால கணிப்பு தொடர்பிலும் கேள்விகளை எழுப்புகின்றது.

எனவே இரண்டாவது கூற்றின் உண்மையை சரிபார்ப்பதன் மூலம் (1) பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையில் உள்ள வளர்ச்சி (2) தற்போது கிடைக்கக்கூடிய மதிப்பீடுகள் மற்றும் நோய்ப்பரவலின் மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் எப்போது நோய்த்தொற்றின் பரவல் உச்சத்தை அடையும் என்பது குறித்த தெளிவை ஏற்படுத்த முயல்கின்றது. இந்த மாதிரியானது ஆரம்பக் கட்டத்தில் உள்ளதுடன், பல விடயங்கள் தெரியாத நிலையில் கிடைக்கக்கூடிய சிறந்த மதிப்பீடாக வழங்கப்படுகின்றது. ஆனால் இது உண்மையான எண்ணிக்கை கிடையாது.

ஜோன் ஹொப்கின்ஸ் கொரானா வைரஸ் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி இலங்கையில் பத்தாவது நோய்த்தொற்றுக்குப் பின்னர் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பினை அட்டவணை 3 ஒப்பீடு செய்கின்றது. இது பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட தொற்றுக்கு இலக்கானவர்களைக் கொண்ட அனைத்து நாடுகளுடனும் ஒப்பிடப்படுகின்றது. இலங்கை தீவிரமான சூழ்நிலைகளுக்கும் (இத்தாலி போன்றவை) மிகக்குறைந்த தீவிர நிலைகளுக்கும் (தாய்வான் போன்றவை) இடையில் பயணிப்பதை இது காட்டுகின்றது.

கோவிட் 19 தொடர்பில் தொடர்ச்சியாக புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அத்துடன் வைரசின் எதிர்காலப் பரவல் குறித்து உறுதியாகப் பேசுவது சந்தேகத்திற்கு இடமின்றி கடினமாகும். தொற்றுநோய் பரவலின் மாதிரியானது பரவலின் வீதம் தொடர்பான அனுமானத்திலேயே தங்கியுள்ளது. அதாவது நோய்த்தொற்றுக்கு இலக்கான ஒருவர் மூலம் எத்தனை நபர்களுக்கு புதிய நோய்த்தொற்று ஏற்படும் என்பதில் உள்ளது. இதனை நாங்கள் r என எடுத்துக்கொள்வோம். உதாரணமாக r = 3 எனக்கொண்டால் நோய்த்தொற்றுக்கு இலக்கான நபர் தனது தொற்றுக்காலப் பகுதியில் மேலும் மூவருக்கு தொற்றினை ஏற்படுத்துவார். நபர்களுக்கு இடையிலான தொடர்பினைக் குறைப்பதற்காக ஒரு நாடு முன்னெடுக்கும் தடுப்பு நடவடிக்கைகளே இந்த r இன் மதிப்பினை தீர்மானிக்கின்றன. இந்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் போது தொற்றுக்கு இலக்கானவருக்கும், ஆரோக்கியமான தனிநபர்களுக்கும் இடையிலான தொடர்பு குறைக்கப்படுகின்றது. எனவே r இன் மதிப்பும் குறைகின்றது.

2020 மார்ச் 28 நிலவரப்படி தொற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு, Verité Research இலங்கைக்கான தொற்று விகிதங்களை உருவகப்படுத்த பயன்படுத்தப்பட்ட நிலையான தொற்றுநோயியல் மாதிரிகளின் வரைபின் ஆரம்ப முடிவுகளை அட்டவணை 4 காட்டுகின்றது. வெவ்வேறான கட்டுப்பாட்டு உத்திகளைப் பயன்படுத்தும் போது r இன் வெவ்வேறு கட்டங்களில் தொற்று எவ்வாறு பரவலாம் என்பதனை இது காட்டுகின்றது. கட்டுப்பாட்டு உத்திகள் மிக லேசாக இருந்தால், இன் மதிப்பு 2 ஐ விட அதிகமானால், தொற்றுக்கு இலக்கானவர்களில் சிறு விகிதத்தினருக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படும் பட்சத்தில் சுகாதார அமைப்பினால் சமாளிக்க முடியாது. தீவிர கட்டுப்பாட்டு உத்தியை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் r இன் மதிப்பு 1.5 ஆக இருந்தால், முதல் தொற்று ஏற்பட்டதில் இருந்து 257 ஆவது நாளில் அதாவது 8.5 மாதங்களில் இந்த தொற்றில் இருந்து இலங்கை விடுபடும். இதன் மூலம் சுகாதார அமைப்பிற்கு பெரிய பாதிப்பு ஏற்படாது. அட்டவணை 4 இல் காட்டுவதைப் போன்று எந்தவிதமான கட்டுப்பாட்டு உத்திகள் இல்லாவிட்டாலும் (r = 3.5 ஆக கணிக்கப்பட்டுள்ளது. இது இத்தாலியில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதற்கு முன்னர் நோய்த்தொற்றின் பரவலை ஒத்தது) நோய்த்தொற்றின் உச்சக்கட்டம் ஜுன் மாதத்தின் ஆரம்பத்தில் ஏற்படும். இது சிங்கள தமிழ் புத்தாண்டுக் காலமான ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஆகும். எனவே, அரச வைத்திய அதிகாரிகளின்  சங்கத்தின் இரண்டாவது கூற்றும் தவறானது ஆகும்.

குறிப்பு: பரவலை அடக்குவதற்கான உத்தியானது r<1 ஐக் குறிக்கும். அதாவது ஆரோக்கியமான நபர் ஒருவரை தொற்றுக்கு உள்ளாக்குவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்றுக்குள்ளான நபர்கள் தேவை என்பதையே இது குறிக்கின்றது. உதாரணமாக r = 0.5 இருந்தால், புதிய நபர் ஒருவரை தொற்றுக்குள்ளாக்குவதற்கு இரண்டு தொற்றுக்குள்ளான நபர்கள் தேவைப்படுவார்கள். இது மாதிரிப்படுத்தப்படவில்லை. ஏனென்றால் பரவலை அடக்குவதற்கான நடவடிக்கைகள் நீக்கப்பட்டதும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்து, இலங்கை மீண்டும் தொடக்கப்புள்ளிக்கே வந்துவிடும். நோய்த்தொற்றுப் பரவலை அடக்குவதற்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிலையானதாக இருக்காது. வைரஸ் பரவுவதனால் ஏற்படும் பாதிப்புக்களுடன், பொருளாதார விளைவுகளையும் கருத்தில் கொண்டே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மதிப்பிடப்பட வேண்டும்.

*FactCheck இன் தீர்ப்பு  பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது,  ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது,  FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்

 

 



மூலம்