சரத் வீரசேகர

தேசியக்கொடி தொடர்பான சரத் வீரசேகரவின் கருத்து தவறானது

"

தாய்நாட்டின் தேசியக் கொடியைச் சிதைக்கவோ அவமதிக்கவோ யாருக்கும் அனுமதியில்லை. அவ்வாறு யாரேனும் செய்வதைக் கண்டறிந்தால் அவர்கள் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன் தண்டனைச் சட்டக்கோவை விதிகளின் கீழ் தண்டனை அளிக்கப்படும்

சரத் வீரசேக்கரவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | பிப்ரவரி 4, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமைச்சர் சரத் வீரசேகர மேல்குறிப்பிட்ட ட்வீட்டை வெளியிட்டிருந்தார். அவரது ட்வீட்டில் தேசியக் கொடியைச் சிதைக்கும் அல்லது அவமதிக்கும் நடவடிக்கைக்கு தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் தண்டனை வழங்க முடியும் எனவும் அவ்வாறான நடத்தை சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, தண்டனைச் சட்டக்கோவையின் விதிகளையும் பிற நாடுகளில் அது தொடர்பான சட்டங்களையும் FactCheck.lk ஆராய்ந்தது. தேசியக்கொடியைச் சிதைப்பதற்கோ அவமதிப்பதற்கோ தண்டனை வழங்குவதற்குத் தண்டனைச் சட்டக்கோவையில் குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை. சில நாடுகளில் ‘கொடி அவமதிப்பு’ சட்டங்கள் அல்லது ‘கொடி விதிமுறைகள்’ கொடிகளின் பாவனை தொடர்பிலான சில நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கின்றன.

எனினும் தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவு 120ன் கீழ் இலங்கை மக்களின் ‘பல்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமை உணர்ச்சியை அல்லது எதிர்ப்பு நிலையைத் தூண்டும் வகையில்’ குறிகளை அல்லது தெரியும்படியான பிரதிபலிப்புகளைப் பயன்படுத்தும் நபர் ஒருவர் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையைப் பெற முடியும். ஆகவே இந்த நோக்கத்துடன் கொடியைச் சிதைத்தால் (இது ‘குறி’ அல்லது ‘தெரியும்படியான பிரதிபலிப்பு’ எனக் கருதப்பட்டால்) இந்தப் பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்பட முடியும். எனினும் வெறுமனே கொடியைச் சிதைக்கும் நடவடிக்கை பிரிவு 120ன் கீழ் வரவில்லை. மேலும் கொடியை ‘அவமதிக்கும்’ நடவடிக்கையும் இந்த விதிக்குள் வரவில்லை.

ஆகவே இந்த அறிக்கையை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 



மூலம்

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை

மிச்சிகன் அரச பல்லைக்கழக சட்டக் கல்லூரி, உலகம் முழுவதிலும் உள்ள கொடி அவமதிப்புச் சட்டங்களின் ஆய்வு, பார்வையிட: https://www.msuilr.org/msuilr-legalforum-blogs/2017/3/23/a-survey-of-flag-desecration-laws-around-the-world  [இறுதியாக அணுகியது 23 மார்ச் 2022]

யூரோநியூஸ், தங்கள் நாட்டின் தேசியக் கொடிகளை அவமதித்தால் உங்களுக்குத் தண்டனை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பார்வையிட: https://www.euronews.com/2017/11/09/which-country-has-the-harshest-punishments-for-disrespecting-flags-and-national [இறுதியாக அணுகியது 23 மார்ச் 2022]

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன