அஜித் நிவாட் கப்ரால்

சுற்றுலாத்துறை தொடர்பான ஆளுநர் கப்ராலின் கருத்துகள் தவறானவை

"

சுற்றுலா 10 பில்லியன் டொலர் பெறுமதியான தொழில்துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதன் பலன்களை எங்களால் அனுபவிக்க முடியவில்லை

ப்ளூம்பெர்க் | பிப்ரவரி 18, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையின் குறைந்துவரும் ஒதுக்குகளை அதிகரிக்கப் போதுமான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை இலங்கையினால் பெற முடியுமா என ப்ளூம்பெர்க் பேட்டியின்போது ஆளுநர் கப்ராலிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஆளுநர், தற்போதுள்ள வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை தற்காலிகமானது எனவும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதன் மூலம் இது சரியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதன் போது அவர் சுற்றுலாத் துறையை ”10 பில்லியன் டொலர் பெறுமதியான தொழில்துறை” எனத் தெரிவித்திருந்தார். மேலும் கோவிட் – 19 பெருந்தொற்றினால் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கவேண்டிய ஐ.அ.டொலர் 10 பில்லியன் இழக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA – Sri Lanka Tourism Devlopment Authority) ஆகியவை வெளியிட்ட சுற்றுலா வருமானம் தொடர்பான உத்தியோகபூர்வப் புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

அட்டவணை 1ல் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட 2011 முதல் 2021 வரையான வருடாந்த சுற்றுலாத்துறை வருமானங்கள் காட்டப்படுகின்றன (இந்தப் பெறுமதிகள் ஏன் மிகைமதிப்பிடப்பட்டவையாக இருக்கின்றன என்பதைக் குறிப்பில் பார்க்கவும்). இந்தப் பெறுமதி அதிகபட்சமாக 2018ம் ஆண்டில் ஐ.அ.டொ 4.4 பில்லியனாகக் காணப்படுகிறது. 2016 – 2018 வரையான மூன்றாண்டு காலப்பகுதியில் சுற்றுலா மூலமான வருமானத்தின் வருடாந்த வளர்ச்சி 11.6% என உயர்வில் உள்ளது.* 2018ம் ஆண்டில் உச்சத்தில் இருந்த சுற்றுலாத்துறை 2022ம் ஆண்டில் மீண்டும் 11.6 சதவீதத்துடன் மீண்டெழுந்தாலும், சுற்றுலா மூலமான வருமானம் ஐ.அ.டொ 4.9 பில்லியனாக மட்டுமே இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

சுற்றுலாத்துறை மீண்டுவந்தால் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல் அதிகரிக்கும் என ஆளுநர் முன்வைக்கும் எதிர்பார்ப்பானது, கணிக்கப்பட்ட பெறுமதியின் இரு மடங்கை விட அதிகமாகும். ஆகவே ஆளுநரின் கருத்தை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

குறிப்பு: நாளாந்த சராசரி செலவினத்தை மிகைமதிப்பிடுவதன் மூலம் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் சுற்றுலாத்துறை வருமானங்களை அதிகரித்துக் குறிப்பிடுவதாக வெரிட்டே ரிசேர்ச்சின் Publicfinance.lk தளம் கண்டறிகிறது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வெறும் 11 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே தங்கும் நிலையில், 2019ம் ஆண்டில் நாளொன்றுக்கான சராசரி செலவு ஐ.அ.டொலர் 181 என  பிராந்தியத்திலேயே அதிகமாக உள்ளது. மேலதிக விபரங்களுக்கு: https://publicfinance.lk/en/topics/earnings-from-tourism-are-we-getting-it-right-1646204834

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

**2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்ததனால் 2019ம் ஆண்டுக்குரிய வருமானங்களை நாங்கள் கணக்கில் எடுக்கவில்லை.

 



மூலம்

  1. இலங்கை மத்திய வங்கி
  2. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA), சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப்போக்கு – 1985 முதல் 2020

https://sltda.gov.lk/storage/common_media/Tourism_Growth_Trends_1985-2020.pdf

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன