உண்மைச் சரிபார்ப்புகளும்
சுற்றுலாத் துறையின் வருமானத்தை அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சரியாகத் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்னவின் இந்தக் கூற்றினை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தினமின வெளியிட்டிருந்தது.
இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக, நாங்கள் இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை ஆராய்ந்தோம். மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 4,381 மில்லியன் அமெரிக்க டொலர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தி 88,901 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
எனவே, 2018 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு 4.9 வீதமாகும்.
எனவே, நிதி இராஜாங்க அமைச்சரின் கூற்றினை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
மூலம்
இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆண்டறிக்கை
சுற்றுலாத்துறை மூலமான வருமானம் (2018), பக்கம் 164, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/en/9_Chapter_05.pdf
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2018), பார்வையிட, https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/en/15_S_Appendix.pdf