உண்மைச் சரிபார்ப்புகளும்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்புடன் ஒப்பிடுகையில் அதில் தங்கியிருக்கும் சனத்தொகையின் சதவீதம் அதிகம் என இராஜாங்க அமைச்சர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார். விவசாயத் துறையால் கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தின் மூன்று மடங்குக்கும் அதிகமாக அந்தத் துறையில் தங்கியிருக்கும் சனத்தொகையின் சதவீதம் இருப்பதை அவர் குறிப்பிடும் பெறுமதிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிடும் இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் அறிக்கை மற்றும் சமீபத்திய தொழிற்படை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.
2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத் துறை 7% பங்களிப்பை வழங்கியிருந்தது. விவசாயத் துறையில் தங்கியிருப்பவர்களைக் கணக்கிடுவதற்கு விவசாயத்தில் ஈடுபடும் தொழிற்படையின் சதவீதத்தை மாற்று அளவீடாக FactCheck.lk பயன்படுத்தியது. வருடாந்தப் புள்ளிவிபரங்கள் கிடைக்கும் இறுதி ஆண்டான 2019 ஆம் ஆண்டில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த தொழிற்படையின் சதவீதம் 25.3%. பருவ கால ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்குரிய தொழிற்படை கணக்கெடுப்பின் காலாண்டு தரவில் இறுதி காலாண்டுக்குரிய பெறுமதி 29.0% ஆகும். இது இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்ட விவசாயத்தில் தங்கியுள்ளவர்களின் சதவீதம் 30 சதவீதத்தை விட அதிகம் என்ற கூற்றுக்கு மிக அண்மைய தரவாகும்.. ஆகவே விவசாயத்தில் தங்கியுள்ளவர்களின் சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு விவசாயத்தின் பங்களிப்பு மற்றும் அதில் தங்கியிருக்கும் சனத்தொகையின் சதவீதத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஒரளவு அதிகரித்துக் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் பெறுமதிகளில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பை விட அதில் தங்கியிருப்பவர்கள் அதிகமாக உள்ளனர் என்ற ஒட்டுமொத்தக் கூற்று தரவினால் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2020, ப.16, பார்வையிட:
https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/otherpub/ess_2020_e1.pdf [last accessed 12 August 2021]
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், நிதியமைச்சு, இலங்கை தொழிற்படை கணக்கெடுப்பு காலாண்டு அறிக்கை, நான்காவது காலாண்டு – காலாண்டு அறிக்கை – 2020, ப.7, பார்வையிட:
http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/QuarterlyReports/4thQuarter2020 [last accessed 12 August 2021]
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், நிதியமைச்சு, தொழிற்படை கணக்கெடுப்பு ஆண்டறிக்கை – 2019, ப.8, பார்வையிட:
http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/AnnualReports/2019 [last accessed 12 August 2021]