விமல் வீரவன்ச

கைத்தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச ஏற்றுமதி வருமானம் தொடர்பில் தவறான கருத்தை மீண்டும் தெரிவிக்கின்றார்.

"

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், முதன் முறையாக நாட்டின் ஏற்றுமதி வருமானம் இறக்குமதி செலவினத்தை விட அதிகரித்துள்ளது.

மவ்பிம | ஜூலை 13, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2020 ஜுன் மாதத்தில் தெரிவித்த வர்த்தகத் தரவு தொடர்பான கூற்றினை அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு மீண்டும் தெரிவிக்கின்றார். அந்தக் கருத்தும் தனியாக ஊடகங்களில் வெளியானது. இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் இலங்கையின் மாதாந்த மற்றும் வருடாந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் தரவுகளை FactCheck ஆராய்ந்தது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான வெளிநாட்டுத்துறை தரவுகளை இலங்கை மத்திய வங்கியின் சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு வழங்குகின்றது. 1977 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வருடாந்த நிகர ஏற்றுமதி உபரி காணப்படவில்லை என்பதை இது காட்டுகின்றது – அதாவது இறக்குமதி செலவினத்தை விட ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கவில்லை. 2006 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான மாதாந்த தரவுகள், எந்தவொரு மாதத்திலும் ஏற்றுமதி வருமானம் இறக்குமதி செலவினத்தை விட அதிகரிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

அமைச்சர் மீண்டும் மீண்டும் தெரிவிக்கும் கூற்றுக்கு முரணாக, 2020 ஆம் ஆண்டிலும் கடந்த காலங்களைப் போன்றே ஜனவரி முதல் ஜுன் வரையான மாதாந்த தரவுகள், மொத்த ஏற்றுமதி வருமானங்கள் மொத்த இறக்குமதி செலவினங்களை விட அதிகரிக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

எனவே, அமைச்சர் வீரவன்சவினால் மீண்டும் மீண்டும் கூறப்படும் கூற்றினை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்