உதய கம்மன்பில

உதய கம்மன்பில: சிறைக்கைதிகள் தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ள போதும், செலவீனங்கள் தொடர்பில் சரியாகக் குறிப்பிடவில்லை.

"

இன்று, சிறையில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் அபராதம் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதி ஒருவரைப் பராமரிப்பதற்கு நாளாந்தம் ரூ.671 அரசாங்கம் செலவு செய்கின்றது. ரூ.100 அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதி ஒருவரினால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 20,000 ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாக

லங்காதீப | ஏப்ரல் 2, 2019

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பின்வரும் கூற்றுக்களை 2 ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

  1. சிறையில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் அபராதம் செலுத்த முடியாததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
  2. சிறிய அபராதத்தொகையை செலுத்தத் தவறி சிறையில் உள்ளவர்களினால் அரசாங்கத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.671 செலவாகின்றது. கைதி ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 20,000 ரூபாவிற்கும் அதிகமாக செலவு செய்யப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சிறைச்சாலைகள் புள்ளிவிபர அறிக்கையில் பின்வரும் தகவல்கள் காணப்படுகின்றன.

கூற்று (1) – 2017 ஆம் ஆண்டில், தண்டனை பெற்ற 22,833 கைதிகளில் அபராதத் தொகையை செலுத்தத்தவறி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 57.9 சதவீதம் ஆகும். (அட்டவணை ஒன்றைப் பார்க்கவும்) பாராளுமன்ற உறுப்பினரின் முதலாவது கூற்றுடன் இது ஒத்துப்போகின்றது.

கூற்று (2) – 2017 ஆம் ஆண்டில் ஒரு சிறைக்கைதியின் நாளாந்த சராசரி செலவு ரூ. 676. எனவே சிறைக்கைதி ஒருவரைப் பராமரிப்பதற்கு 2017 ஆம் ஆண்டில் சராசரியாக மாதாந்தம் ரூ. 20,280 செலவிடப்பட்டுள்ளது.

எனினும், ஒவ்வொரு புதிய கைதியும் சிறையில் அடைக்கப்படும் போது ஏற்படும் கூடுதல் செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. ஏனென்றால் பயன்பாடுகள், சம்பளம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் போன்ற மேலதிக செலவுகளில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. இந்தச் செலவுகள் ஒரு கைதி சிறைச்சாலைக்கு வரும்போது அதிகரிப்பதும் இல்லை, அதேபோன்று ஒரு கைதி விடுதலையாகிச் செல்லும் போது குறைவதுமில்லை. பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பது போன்று அபராதத் தொகை செலுத்தத்தவறி சிறையில் அடைக்கப்படும் கைதியினால் ஏற்படக்கூடிய செலவுகள் உணவு, சீருடை போன்றன, இவை சராசரி செலவுகளை விடக் குறைவாகும். சராசரியாக கைதி ஒருவருக்கு ஒரு நாளைக்கு உணவுக்காக ரூ.114 செலவாவதாக இலங்கை சிறைச்சாலைகள் புள்ளிவிபர அறிக்கை குறிப்பிடுகின்றது. நிதி அமைச்சினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளில், 2017 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தொடர்சியான செலவீனங்களில் 15.7 சதவீதம் மாத்திரமே உணவு மற்றும் சீருடைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மொத்த செலவீனங்களைப் பயன்படுத்தியே கைதிக்கான நாளாந்த சராசரி செலவீனம் கணக்கிடப்பட்டுள்ளது.

அபராதத் தொகை செலுத்த முடியாமல் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் சிறையில் உள்ளனர். ஒரு மாதத்திற்கு சிறைக்கைதி ஒருவரைப் பராமரிப்பதற்கான சராசரி செலவு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட தொகைக்கு நெருக்கமாக இருந்தாலும், புதிய கைதி ஒருவரை சிறையில் அடைக்கும் போது ஏற்படும் செலவு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட தொகையை விட மிகக் குறைவாகும். எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “பகுதியளவில் உண்மை” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே Factcheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை Factcheck மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: அபராதத்தொகை செலுத்தத் தவறி சிறையில் அடைக்கப்பட்டவர்களின் வீதம் (2013 – 2017)

அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

வேறு காரணங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள்



மூலம்

சிறைச்சாலைகள் திணைக்களம், சிறைச்சாலைகள் புள்ளிவிபர அறிக்கை 2018, பார்வையிட:

நிதியமைச்சு, 2018 ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட மதிப்பீடு, பக்கம் 361, பார்வையிட:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன