உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்ற உறுப்பினர் அவரது கூற்றில் தெற்காசியப் பிராந்திய நாடுகளின் வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளை 2019 முதல் 2021 வரை ஒப்பிடுகிறார். இலங்கையில் ஒதுக்குகள் 80% வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை பிற நாடுகளில் அதிகரிப்புக் காணப்படுகிறது எனவும் குறிப்பிடுகிறார்.
பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ஆராய, இலங்கை மத்திய வங்கி, சம்பந்தப்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகள், உலக வங்கியின் அபிவிருத்திக் குறிகாட்டிகள் தரவுத்தளம் ஆகியவற்றின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.
தெற்காசிய நாடுகளின் வெளிநாட்டு ஒதுக்குகளின் ஒப்பீட்டை நவம்பர் 2021 இறுதியுடன் FactCheck.lk மட்டுப்படுத்திக்கொண்டது. இந்த அறிக்கை வெளியானபோது, ஒப்பீட்டில் இடம்பெற்றுள்ள தெற்காசிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் டிசம்பர் 2021க்கான மாத இறுதி ஒதுக்குகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
டிசம்பர் 2019 முதல் நவம்பர் 2021 வரை அனைத்து தெற்காசிய நாடுகளுக்குமான வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளில் ஏற்பட்ட மாற்றத்தை அட்டவணை 1 காட்டுகிறது. இந்தக் காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் 79.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 80% என்பதற்கு மிக அருகில் உள்ளது. அதேவேளை, பிற தெற்காசிய நாடுகளின் ஒதுக்குகளில் அதிகரிப்பு காணப்படுகிறது. எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.
குறிப்பு: இலங்கையின் ஒதுக்குகள் டிசம்பர் 2021 இறுதியில் ஓரளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஒதுக்குகள் என்பதற்கான சர்வதேச வரைவிலக்கணக்கத்துக்கு (சென்மதிநிலுவை பாடப்புத்தகம், சர்வதேச நாணய நிதியம்) உட்படாத நாணயப் பங்குகளை உள்ளடக்கியதால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிடமிருந்து பெறப்பட்ட யுவானை அடிப்படையாகக் கொண்ட பரஸ்பர பரிமாற்றலை மத்திய வங்கி ஒதுக்காக மீள் வகைப்படுத்தியதால் டிசம்பர் 2021ல் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
இலங்கை மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகளின் வெளியீடுகள், பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/weekly-indicators
தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் மத்திய வங்கிகளின் வெளியீடுகள், பார்வையிட:
உலக வங்கி குறிகாட்டிகள், மொத்த இருப்புகள் (தங்கம், ஐ.அ.டொலர்கள் உட்பட), பார்வையிட: https://data.worldbank.org/indicator/FI.RES.TOTL.CD
சென்மதிநிலுவை பாடப்புத்தகம், சர்வதேச நாணய நிதியம், 1996 ப. 129 பார்வையிட: https://www.elibrary.imf.org/view/books/069/00579-9781557755704-en/ch12.xml