கெஹெலிய ரம்புக்வெல்ல

அமைச்சர் ரம்புக்வெல்ல கோவிட் தடுப்பூசிகள் தொடர்பில் தேவையற்ற பெருமை கொள்கிறார்

"

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் வழங்குவதில், நேற்றைய நிலவரப்படி [ஜனவரி 1], நாங்கள் உலகளவில் 4வதுஇடத்தில் இருக்கிறோம்; தகுதியான மக்கள்தொகையில் அதிகசதவீதமாக, உலகளவில் 194 நாடுகளில் நான்காவதாக நாங்கள் இருக்கிறோம்

டெய்லி மிரர் ஒன்லைன் | ஜனவரி 2, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு இலங்கை சுகாதார அமைச்சு, கோவிட் – 19 தடுப்பூசிகள் தொடர்பான அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data) புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

அமைச்சர் குறிப்பிடும் தகுதிபெற்ற சனத்தொகை என்பது இலங்கையில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனக் கருதப்படுகிறது. எனவே 16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் குறைந்தது தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டவர்களின் சதவீதத்தில் உலகளவில் இலங்கை நான்காவது இடத்தில் இருப்பதாக அமைச்சரின் அறிக்கை குறிப்பிடுகிறது.

மொத்த சனத்தொகை அல்லது 14 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகை ஆகியவற்றுக்கு எதிராகவே உலகளாவிய ரீதியில் ஒப்பிட முடியும். அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டபோது (ஜனவரி 1, 2022) 16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் 85.25 சதவீதத்தினருக்கு இலங்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இது மொத்த சனத்தொகையில் 66.41% ஆகும். அதேவேளை மொத்த சனத்தொகையைக் கணக்கில் கொள்ளும்போது, இலங்கையை விட அதிக சதவீதத்தினருக்குத் தடுப்பூசியை வழங்கிய 56 நாடுகள் காணப்படுகின்றன. 16 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையைக் கருத்தில் கொள்ளும்போது, குறைந்தது 45 நாடுகள் இலங்கையை விட அதிக சதவீதத்தினருக்குத் தடுப்பூசியை வழங்கியுள்ளன. 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி அளித்த நாடானது, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி அளித்த நாட்டை விட நிச்சயமாக அதிக சதவீதத்தினருக்குத் தடுப்பூசியை அளித்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் இந்தத் தகவல் பெறப்படுகிறது.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்ற மொத்த சனத்தொகை மற்றும் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இலங்கை முதல் ஐந்து இடங்களில் இடம்பெறவில்லை என்பதுடன், முதன்மையான 45 நாடுகளை விட தரப்படுத்தலில் பின்தங்கியே உள்ளது. ஆகவே நாங்கள் அமைச்சரின் அறிக்கையை ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

அவர் வேர்ல்ட் இன் டேட்டா, புள்ளிவிபரங்கள் மற்றும் ஆராய்ச்சி, கொரோனா வைரஸ், தடுப்பூசிகள் தொடர்பான தரவு, பார்வையிட:   https://github.com/owid/covid-19-data/tree/master/public/data/vaccinations  [இறுதியாக அணுகியது பெப்ரவரி 9, 2022]

அவர் வேர்ல்ட் இன் டேட்டா, புள்ளிவிபரங்கள் மற்றும் ஆராய்ச்சி, வயதின் அடிப்படையில் சனத்தொகை, பார்வையிட: https://ourworldindata.org/grapher/population-by-broad-age-group?country=~OWID_WRL  [இறுதியாக அணுகியது பெப்ரவரி 9, 2022]

தொற்றுநோயியல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளம், சுகாதார அமைச்சு, கோவிட் – 19 தடுப்பூசி செலுத்துவதில் முன்னேற்றம் (ஜனவரி 1, 2022 நிலவரப்படி), பார்வையிட: https://www.epid.gov.lk/web/images/pdf/corona_vaccination/covid_vaccination_2022-01_01.pdf [இறுதியாக அணுகியது பெப்ரவரி 9, 2022].

கோவிட் – 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், தடுப்பூசி புள்ளிவிபரங்கள், மாவட்ட வாரியாகத் தடுப்பூசி விபரங்கள், பார்வையிட: https://covid19.gov.lk/vaccination-statistics.html [இறுதியாக அணுகியது பெப்ரவரி 8, 2022]

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன