உண்மைச் சரிபார்ப்புகளும்
அமைச்சரின் கூற்றைச் சரிபார்ப்பதற்கு நிதியமைச்சு வெளியிடும் ஆண்டறிக்கையிலுள்ள தரவை FactCheck.lk ஆராய்ந்தது.
மொத்தத் தேவையில் உள்நாட்டு பால் உற்பத்தி பூர்த்தி செய்யும் அளவை நிதியமைச்சு அறிக்கையிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மொத்தத் தேவையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 35.87% மட்டுமே ஆகும். இது அமைச்சர் குறிப்பிடும் சதவீதத்தை விடக் குறைவாகும். உள்நாட்டு உற்பத்தியின் கடந்த ஐந்தாண்டு கால (2016 – 2020) சராசரியையும் FactCheck.lk ஆராய்ந்தது. அது 38.42% ஆகும். இது அமைச்சர் குறிப்பிட்ட சதவீதத்துடன் ஓரளவு நெருங்கியுள்ளது.
நீண்ட கால சராசரியை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் இந்தக் கூற்றைத் தெரிவித்திருக்கலாம் என்ற அடிப்படையில் அவரது அறிக்கையை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.
Additional Note
மேலதிகக் குறிப்பு: மீதமுள்ள தேவைக்கு இலங்கை பெரும்பாலும் பால் பவுடர் வடிவில் இறக்குமதி செய்கிறது. 2020 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடரின் மொத்த மதிப்பு ஐ.அ.டொ 316 மில்லியன் ஆகும். HS குறியீடுகள் 04021000, 04022100, 04022900, 04029100, 04029910, 04029990 ஆகியவற்றிலிருந்து இந்தப் பெறுமதியை FactCheck.lk கணக்கிட்டதுடன் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்ட சராசரி வருடாந்த நாணய மாற்றுப் பெறுமதியைப் பயன்படுத்தி இலங்கை ரூபாயிலிருந்து மாற்றியுள்ளது. *பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
நிதியமைச்சு, ஆண்டறிக்கை 2020, ப.384, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/f64f9700-0402-49d0-9f38-f28629a8c379 [last accessed 31 August 2021]
இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2020, முக்கியப் பொருளாதாரக் குறிகாட்டிகள், ப.2, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2020/en/3_KEI.pdf [last accessed 31 August 2021]
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, வர்த்தகப் புள்ளிவிபரங்கள், பார்வையிட: https://stat.edb.gov.lk/index.php