காமினி லக்ஷ்மன் பீரிஸ்

அமைச்சர் பீரிஸ் சரியாகத் தெரிவிக்கின்றார்: 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதியிடம் தடையற்ற அதிகாரம் காணப்பட்டது

"

“19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர், புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது, பாராளுமன்றத்தை கலைப்பதற்கும், அவரது கொள்கைகளுக்கு இணங்கும் பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்காக தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதற்கும் அவருக்கு அதிகாரம் காணப்பட்டது...

லங்காதீப | ஆகஸ்ட் 10, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்காக, 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னரும், பின்னருமான அரசியலமைப்பின் உறுப்புரை 70 இன் விதிகளை FactCheck ஆராய்ந்தது.

அரசியலமைப்பின் விதிகள் பின்வருவற்றைக் குறிப்பிடுகின்றன:

(அ) 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னர், முந்தைய பாராளுமன்றம் ஜனாதிபதியால் முன்கூட்டியே கலைக்கப்பட்டதன் விளைவு மாத்திரமே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தில் காணப்பட்ட ஒரேயொரு தடை. அந்த சந்தர்ப்பத்திலும், தேர்தல் திகதியில் இருந்து ஒரு வருடத்திற்கு மாத்திரமே பாராளுமன்றதைக் கலைப்பதில் இருந்து ஜனாதிபதி தடை செய்யப்பட்டார். இந்த மட்டுப்படுத்தப்பட்ட தடையும் பாராளுமன்றத்தின் தீர்மானத்தினால் முறியடிக்கப்பட முடியும்.

(ஆ) 19 ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி மீது தடைகளை அதிகரித்துள்ளது. அதாவது முதலாவது சந்திப்பில் இருந்து நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அவ்வாறு செய்யுமாறு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தீர்மானத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டால் மாத்திரமே கலைக்கப்பட முடியும்.

ஆகவே, அரசியலமைப்பின் உரையில் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர் கூட பாராளுமன்றத்தைக் கலைக்கவும், புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்பட்டது. 19 ஆவது திருத்தச் சட்டம் இந்த அதிகாரத்தைக் குறைத்துள்ளது. *

எனவே, இந்தக் கூற்றினை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*குறிப்பு – இந்தக் கூற்றினை ஆராய்ந்த போது, அமைச்சர் பீரிஸ் குறிப்பிடும் ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ‘அதிகாரம்’ என்பது அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பிரகாரம் என்ற அடிப்படையில் FactCheck செயற்பட்டது (அதாவது – பாராளுமன்றதைக் கலைக்குமாறு பாராளுமன்ற தீர்மானம் ஜனாதிபதியிடம் கோரியதன் மூலம் அன்றி, சுயாதீனமாக பாராளுமன்றதைக் கலைப்பதற்கான அவரது அதிகாரம்).

**பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

 



மூலம்