உண்மைச் சரிபார்ப்புகளும்
அவருடைய இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு நாங்கள் இலங்கை மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை ஆராய்ந்தோம்.இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பில் தரவூகளைப் பெறுவதற்கு, நாங்கள் இலங்கை மத்திய வங்கியின் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை* ஆராய்ந்தோம். அந்த அறிக்கையில் உள்ள தரவுகள், அமைச்சர் கூறிய 2017 ஆம் ஆண்டுக்கான தனிநபர் வருமானம் தொடர்பில் தெரிவித்த கூற்றுடன் முரண்படுகின்றது. தனிநபர் வருமானம் 13,000 அமெரிக்க டொலர்கள் என அமைச்சர் தெரிவித்த போதும், இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் அதை விட குறைவாக 4,065 அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியப் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான தரவூகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் உலக வங்கியின் அறிக்கையினை** பார்வையிட்டோம். புpராந்தியத்தில் இலங்கையே அதிகபட்ச தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்த கூற்றுடன் இந்த தரவுகளும் முரண்படுகின்றன. தெற்காசியாவில் மாலைதீவு அதிக தனிநபர் வருமானத்தைக் கொண்டிருப்பதுடன், இலங்கை இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது.
அமைச்சர் ரணவக்கவின் இரண்டு கூற்றுக்களும் உத்தியோகபூர்வ தரவுகளுடன் முரண்படுவதால், அவரின் கூற்றினை “தவறானது” என வகைப்படுகின்றோம்.
அமைச்சர் எவ்வாறு தனது அறிக்கையில் தவறியிருக்கலாம் என்பதை புரிந்துகொள்வதற்கு தயவுசெய்து மேலும் வாசிக்கவும்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13,000 அமெரிக்க டொலர்கள் என அமைச்சர் குறிப்பிட்டது உத்தியோகபூர்வ தரவுகளுடன் முரண்படுகின்றது. எனினும், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருள் வாங்குதிறன் சமநிலை 12,810 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
இது அமைச்சர் குறிப்பிட்ட 13,000 அமெரிக்க டொலர்களுக்கு அருகில் காணப்படுகின்றது. எனவே அமைச்சர் ரணவக்க, இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானத்திற்கு பதிலாக மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருள் வாங்குதிறனின் தனிநபர் வருமானத்தை தவறுதலாக தெரிவித்திருக்கலாம் என கருதமுடியும்.
எனினும், அமைச்சர் மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருள் வாங்குதிறன் தரவினை தெரிவித்திருந்தாலும், பிராந்தியத்தில் இலங்கை முதலிடத்தில் இல்லை. மாலைதீவு முதலாவதிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலுமே உள்ளது.
வரைவிலக்கணங்களுக்கு தயவுசெய்து பின்வரும் இணைப்புக்களை பார்வையிடவும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி: https://www.investopedia.com/terms/p/per-capita-gdp.asp
மொத்த உள்நாட்டு உற்பத்தி பொருள் வாங்குதிறன் சமநிலை: https://www.investopedia.com/u…/purchasing-power-parity-ppp/
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
மூலம்
- இலங்கை மத்திய வங்கி, வருடாந்த அறிக்கை 2017, மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானம், https://www.cbsl.gov.lk/…/p…/annual_report/2017/en/3_KEI.pdf
- **உலக வங்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானம், https://data.worldbank.org/indicator/NY.GDP.PCAP.CD…
- ***உலக வங்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தி தனிநபர் வருமானம், பொருள் வாங்குதிறன் சமநிலை, https://data.worldbank.org/indicator/NY.GDP.PCAP.PP.CD…