தினேஷ் குணவர்த்தன

அமைச்சர் குணவர்த்தன தவறான  புள்ளிவிபரங்களுடன், உள்ளக இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றத்தை  சரியாகத் தெரிவித்துள்ளார்.

"

“440,000 க்கும் மேற்பட்ட உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளான மக்களை மீள்குடியேற்றுவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது... இது தற்போது 93.76 வீதமாக அதிகரித்துள்ளது.”

டெய்லி FT | பிப்ரவரி 28, 2020

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிக்கின்றார். தற்போது வரையில் இடம்பெயர்ந்த 440,000 பேரில் 93.76 சதவீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சமீபத்திய தரவுகளைப் பயன்படுத்தி அமைச்சரின் கூற்றினை FactCheck ஆராய்ந்தது. 2019 ஆம் ஆண்டு ஜுலை 31 ஆம் திகதி வரை மீள்குடியேற்றப்பட்ட இடம்பெயர்ந்தோர் (894,449) மற்றும் மீள்குடியேற்றப்பட வேண்டியர்கள் (27,317) பற்றிய குறித்த தரவுகள் அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளன. 440,000 பேரில் மீள்குடியேற்றப்பட வேண்டியர்களின் சதவீதம் 6.21 ஆகும்.  அமைச்சர் குறிப்பிடும் புள்ளிவிபரமானது, 100 சதவீதத்திலிருந்து 6.21 வீதத்தை கழித்து, அதாவது 93.79 சதவீதம் என பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் 440,000 பேர் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்ற தவறான புள்ளிவிபரத்தை அமைச்சர் பயன்படுத்துவதால், மீள்குடியேற்றப்பட்டவர்களின் சதவீதத்தை குறைவாக குறிப்பிடுகின்றார். உண்மையில் அந்த வீதம் 97.04 சதவீதம் ஆகும். (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

அமைச்சருடைய நோக்கம் என்னவென்றால் உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்களில் அதிகளவானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்பதாகும். அந்த வகையில் அவரது கூற்று சரியானதாகும். ஆனால், மீள்குடியேற்றம் தேவைப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கைக்கு தவறான குறைந்த புள்ளிவிபரத்தை பயன்படுத்தியதால், உண்மையான பிரச்சினையை தவறாக வெளிப்படுத்துவதுடன், இதுவரை அடைந்த முன்னேற்றத்தையும் அமைச்சர் குறைவாக குறிப்பிடுகின்றார். எனவே அமைச்சரின் கூற்றினை நாங்கள் பகுதியளவில் சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு  பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது,  ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது,  FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்

  • நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, 2019 ஜனவரி 31 அன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்தின் முன்னேற்றம், click here to access the data.
  • நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு, 2019 மார்ச் 31 அன்று மீள்குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களின் விபரம், click here to access the data.