உண்மைச் சரிபார்ப்புகளும்
நிதி இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த மேலுள்ள கூற்றினை டெய்லி FT பத்திரிகை 2019 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் திகதி வெளியிட்டது.
இந்தக் கூற்றில் எந்தக் கால அளவும் குறிப்பிடப்படவில்லை என்பதனால், ஜனவரி 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டுக்கும் இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை FactCheck ஆராய்ந்து பார்த்தது.
இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படும் ‘முதலாந்தரக் கணக்கு’ என அழைக்கப்படும் புள்ளிவிபரத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்த கூற்று ஆராயப்படுகின்றது. இது அரசாங்கத்திற்கு கிடைக்கும் மொத்த வருமானம் மற்றும் கொடைகளில் இருந்து வட்டிக்கொடுப்பனவுகள் தவிர்த்த மற்றைய அனைத்து அரச செலவினங்களையும் கழிப்பதன் மூலம் கணக்கிடப்படுகின்றது.
அமைச்சரின் கூற்று சரியானதாக இருந்தால், கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவு மற்றும் முதல் தொகையை மீளச்செலுத்துவதற்காக மாத்திரமே புதிய அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் ஒரு ஆண்டில் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையானது, அந்த ஆண்டுக்கான வட்டிக்கொடுப்பனவை விட அதிகமாக இருக்க முடியாது. (கடனின் முதல் தொகை மீளச்செலுத்துவது ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதை தெரிந்துகொள்ள கீழேயுள்ள குறிப்பினைப் பார்க்கவும்). அவ்வாறான ஆண்டுகளில், முதலாந்தரக் கணக்கு நேர்மறையாக இருக்க வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் முதலாந்தரக் கணக்கு நேர்மறையாக உள்ளது. எனினும், முதலாந்தரக் கணக்கு எதிர்மறையாக இருந்தால், அந்த ஆண்டுக்கான வட்டிக்கொடுப்பனவுகள் தவிர்த்த அரசாங்கத்தின் செலவினங்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு கிடைத்த வருமானம் மற்றும் கொடை போதுமானதாக இல்லை எனக் கருதப்படும். அவ்வாறான சந்தர்ப்பத்தில். வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் கடன், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக தேவைப்படும் தொகையை விட அதிகமாகும். 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டுக்குமான முதலாந்தரக் கணக்கை அட்டவணை 1 காட்டுகின்றது.
குறிப்பு: பொதுத்துறை கணக்கியலில் கடனின் முதல் தொகையை திருப்பிச் செலுத்துவது அரசாங்கத்தின் செலவினமாக வகைப்படுத்தப்படவில்லை. ஏனென்றால், செலவினமாகக் கருதப்படும் வட்டிக்கொடுப்பனவுகள் போலன்றி முதல் தொகை கொடுப்பனவுகள் அரசாங்கத்தின் இருப்பு நிலைக் குறிப்பை பாதிக்கும் ஒரு பரிவர்த்தனையாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக, பழைய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பெற்றுக்கொள்ளப்படும் புதிய கடன், இருப்பு நிலைக் குறிப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே, ஒரு ஆண்டில் அனைத்துக் கடன்களும் முந்தைய கடன்களை மீளச்செலுத்துவதற்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், வரவு செலவுப் பற்றாக்குறையானது வட்டிக் கொடுப்பனவுகளை விட அதிகமாக இருக்க முடியாது.
அட்டவணை 1: அரசின் இறைத் தொழிற்பாடுகள் (2015 – 2018) ரூ.மில்லியன்
முதலாந்தரக் கணக்கு 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நேர்மறையாக இருப்பதை அட்டவணை 1 காட்டுகின்றது. எனவே எரான் விக்கிரமரத்ன நிதி இராஜாங்க அமைச்சராக (மே 2017 ஆம் ஆண்டு முதல்) இருந்த காலப்பகுதியில் அவரது கூற்று சரியானது எனத் தெரிகின்றது. எனினும் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முதலாந்தரக் கணக்கு நேர்மறையாக இருக்கவில்லை. இதுவும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்;.
எனவே, அமைச்சரின் கூற்றினை ‘பகுதியளவில் உண்மையானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
இந்தக் கூற்று பதிவானதன் பின்னர், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மாத்திரமே அரசாங்கம் பெற்றுக்கொண்ட மொத்தக் கடன்களும், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது என அமைச்சர் பாராளுமன்றத்தில் சரியாகத் தெரிவித்திருந்தார்.
(பாராளுமன்ற ஹன்சாட், 9 ஜுலை 2019)
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
மூலம்
- இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2018, சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 6: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/ta/15_S_Appendix.pdf
- இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2018, சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 108: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/ta/14_Appendix.pdf
- இலங்கை பாராளுமன்றம், 9 ஜுலை 2019 ஹன்சாட்: https://www.parliament.lk/uploads/documents/hansard/1563163804027083.pdf
- செய்தி அறிக்கையை பார்வையிடுவதற்கு, தயவுசெய்து பார்க்கவும்: http://www.ft.lk/front-page/All-borrowings-used-to-repay-debt–Eran/44-680288