பந்துல குணவர்த்தன

அமைச்சரவை இணை  ஊடகப்பேச்சாளர் பந்துல  குணவர்த்தன:  தனியார் வைப்பு பாதுகாப்பு குறித்து  சரியாகத் தெரிவிக்கின்றார்.

"

நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வைப்பிலிடப்படும் போது, இலங்கை மத்திய வங்கி 600,000 ரூபா வரை மாத்திரமே பொறுப்பாகின்றது.

அரச தகவல் திணைக்கள பேஸ்புக் பக்கம் | ஜூன் 4, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, நாணய விதிச் சட்டம், நிதி நிறுவனங்கள் சட்டம் மற்றும் இலங்கை வைப்பு காப்புறுதி திட்ட விதிமுறைகளை FactCheck ஆராய்ந்தது. இலங்கையில் வைப்பு காப்புறுதி சட்டக் கட்டமைப்பானது நாணய விதிச் சட்டத்தின் 32ஏ முதல் 32ஈ பிரிவுகள் மற்றும் நிதி நிறுவன சட்டத்தின் 27 முதல் 30 பிரிவுகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது – இவை இரண்டும் இலங்கை மத்திய வங்கியிடம் வைப்புக் காப்புறுதிக்கான பொறுப்பினை கையளித்துள்ளன. இதேவேளை, திருத்தப்பட்ட 2010 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்ட விதிமுறைகளின் கீழ் வைப்புக் காப்புறுதிக்கான செயல்பாட்டுக் கட்டமைப்பு காணப்படுகின்றது.

விதிமுறைகளின் பிரிவு 4.1 ‘அனைத்து வர்த்தக வங்கிகளும், உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளும், பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள்’ எனக் குறிப்பிடுகின்றது.

விதிமுறைகளின் பிரிவு 9.6 ‘வைப்பிலிட்டவருக்கு செலுத்தக்கூடிய நட்டஈட்டு தொகையானது மேலே கணக்கிடப்பட்டவாறு மொத்த காப்புறுதி செய்யப்பட்ட தொகைக்கு மட்டுப்படுத்தப்படும், அதிகபட்சமாக ரூ. 600,000 அல்லது அதற்கு சமமான 

தற்போதுள்ள விதிமுறைகளின் பிரகாரம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்படும் தொகைக்கு இலங்கை வைப்பு காப்புறுதி நிதியத்தின் கீழ் ரூ.600,000 மாத்திரமே உத்தரவாதமளிக்கப்படுகின்றது. இது இலங்கை மத்திய வங்கியினால் நிர்வகிக்கப்படுவதுடன், 65.1 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் காணப்படுகின்றன. ‘இலங்கை மத்திய வங்கி பொறுப்பு’ என குணவர்த்தன குறிப்பிடுவதை, வைப்பு காப்புறுதி தொடர்பில் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் ஊடாக இலங்கை மத்திய வங்கியிடம் உள்ள பொறுப்புத்தன்மையை குறிப்பிடுகின்றார் என FactCheck அனுமானிக்கின்றது.

எனவே அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளரின் கூற்றினை ‘உண்மையானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

குறிப்பு

2010 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இலங்கை வைப்பு காப்புறுதி திட்டத்தின் விதிமுறைகளின் பிரிவு 9.9 பின்வருமாறு குறிப்பிடுகின்றது: நட்டஈட்டை வழங்குவதில் நாணய சபையோ அல்லது இலங்கை மத்திய வங்கியோ பொறுப்பாகாதுஇது கிடைக்கக்கூடிய அல்லது அனுமதிக்கப்பட்ட கடன்கள் அல்லது பெறப்பட்ட பங்களிப்புக்கள் உள்ளிட்ட வைப்பு காப்புறுதி நிதியத்தில் சேர்க்கப்பட்ட நிதிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதுநிதியத்திலுள்ள மொத்த தொகைக்கு மேற்பட்ட எந்தவொரு தொகைக்கும் நாணய சபையோ அல்லது மத்திய வங்கியோ பொறுப்பேற்காது. 

ஆகவே, இலங்கை மத்திய வங்கியினால் வைப்புக் காப்புறுதி திட்டம் நிர்வகிக்கப்பட்டாலும், அதன் கீழான கொடுப்பனவுகள் வைப்புக் காப்புறுதி நிதியத்தின் ஊடாகக் கிடைக்கும் தொகைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

இலங்கை மத்திய வங்கியின் ஏப்ரல் மாத பொருளாதார குறிகாட்டிகளின் பிரகாரம், வணிக வங்கிகளின் ‘மொத்த வைப்புக்கள்’ மாத்திரம் 7.7 ட்ரில்லியன் ரூபா ஆகும். அதேவேளை, வைப்புக் காப்புறுதி நிதியத்தில் 65.1 மில்லியன் ரூபா சொத்துக்கள் உள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் 2019 ஆண்டறிக்கை குறிப்பிடுகின்றது.



மூலம்