பாட்டலி சம்பிக்க ரணவக்க

விமான நிறுவனங்களின் கடன் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.

"

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்காவினால் நாட்டிலுள்ள நபர்கள் ஒவ்வொருவரும் 12,500 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளார்கள்.

திவயின | ஆகஸ்ட் 28, 2019

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் மூலம் ஏற்பட்ட மொத்த நட்டத்தை கணக்கிடுவதுடன், அதன் மூலம் ஏற்பட்ட தேசிய கடனையும் பாராளுமன்ற உறுப்பினர் தனது அறிக்கையில் குறிப்பிட முற்படுகின்றார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட 2018/19 ஆண்டறிக்கையில் நட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சனத்தொகை தொடர்பான தரவுகளையும் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை FactCheck ஆராய்ந்தது.  2016 ஆம் ஆண்டில் மிஹின் லங்கா கலைக்கப்பட்டதனால் அது தொடர்பான குறிப்பிட்ட தரவுகள் கிடைக்கவில்லை. அந்தக் காலப்பகுதியில் மிஹின் லங்காவின் மொத்த நட்டமாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட 17.27 பில்லியன் ரூபாவை நாங்கள் எங்களது கணக்கீடுகளில் பயன்படுத்தியிருக்கின்றோம்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிக உரிமை அரசாங்கத்திடம் உள்ளது (99.11%). ஊழியர் சேமலாப நிதியில் 0.36% உள்ளது.  2012 ஆம் ஆண்டுக்குரிய சனத்தொகை கணக்கெடுப்பு (20.36 மில்லியன்) மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மொத்த இழப்பு (250,359 மில்லியன் ரூபா) ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் தொகையை மதிப்பிட முடியும். ஆனால் கணக்கிடப்பட்ட முறை மற்றும் அதன் முடிவு சரியானதாக இல்லை.

நிகர இழப்பு என்பது மொத்தப் பொறுப்புக்களுக்கு சமமானது அல்ல. மொத்தக் கடன்களில் மூன்றாம் தரப்பின் குறுங்கால மற்றும் நீண்டகால கடன்கள் அடங்கும். அதில் முன்னுரிமைப் பங்குகள், வட்டி தாங்கிய பொறுப்புக்கள், வியாபாரக் கடனீந்தோர், முன்கூட்டிய விற்பனை மற்றும் பல அடங்கும். ஆனால் மூலதனத்தில் இருந்து சொத்துக்களின் மதிப்பினை கழித்தால் நிகர இழப்பு கிடைக்கும். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விமான நிறுவனங்களின் நிகர இழப்பு 236,998 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட சனத்தொகை 21.8 மில்லியன். இவை இரண்டையும் கருத்தில் கொண்டு கணக்கிட்டால், பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று தனிநபரின் கடன் ரூ.12,500 அல்ல, மாறாக ரூ.10,871 ஆகும்.

உண்மையில் பாரிய நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது, அதனால் தனிநபரின் கடனும் அதிகரித்துள்ளது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் தொகையானது, இந்தக் தரவுகளில் இருந்து கண்டறிந்த தொகையை விட சுமார் 15 வீதம் அதிகமாகும்.

எனவே நாங்கள் அவரது கூற்றினை ‘தவறு’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் மிஹின் லங்காவின் இழப்புமூலம்