ரணில் விக்கிரமசிங்க

ராஜபக்ஷ ஆட்சிக்கால ஏற்றுமதி தொடர்பில் பிரதமர்: வீழ்ச்சி தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் விபரங்கள் தவறு.

"

ராஜபக்க்ஷவின் பத்து வருட ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 30 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

திவயின | ஆகஸ்ட் 12, 2019

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

மேலேயுள்ள கூற்றில், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஏற்றுமதி பங்கு 12 சதவீத புள்ளிகளினால் சரிவடைந்துள்ளது, அதாவது 30 வீதத்திலிருந்து 18 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது என பிரதமர் தெரிவிக்கின்றார்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை FactCheck  ஆராய்ந்தது. அட்டவணை 1, 2000 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக ஏற்றுமதி வருமானத்தை காட்டுகின்றது.

ஏற்றுமதியானது பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கியது. பிரதமர் தனது அறிக்கையில் எதனைக் குறிப்பிடுகின்றார் என்பதை குறிப்பாகத் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பதிப்பில், பொருட்களின் ஏற்றுமதிக்கு எதிரான பிரதமரின் கூற்று மதிப்பிடப்பட்டது. ஆனால் இந்த பதிப்பில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மதிப்பிடப்படுகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருட்களின் ஏற்றுமதி 2005 ஆம் ஆண்டில் 26 வீதத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டில் 14 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பிரதமர் பொருட்களின் ஏற்றுமதி தொடர்பில் மாத்திரம் குறிப்பிடுகின்றார் என்றால், இந்தக் காலப்பகுதியில் 12 சதவீத புள்ளிகளினால் ஏற்றுமதி சரிந்துள்ளது என அவர் சரியாகவே தெரிவித்துள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்ட 30 மற்றும் 18 சதவீதங்கள் தவறானவை, அவர் இரண்டிலும் 4 சதவீதத்தை அதிகமாகவே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 2005 ஆம் ஆண்டில் 32.3 வீதத்தில் இருந்து 2015 ஆம் ஆண்டில் 21.2 வீதமாக சரிவடைந்துள்ளது. அதாவது 11.2 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்;ச்சியானது பிரதமர் குறிப்பிட்ட சதவீதத்துடன் ஓரளவு பொருந்திப் போகின்ற போதிலும், அவர் குறிப்பிட்ட சதவீதம் 2.3 வீதத்தினாலும், 3.1 வீதத்தினாலும் வித்தியாசப்படுகின்றது.

முழுமையாக நோக்கும் போது பிரதமர் தெரிவித்த கருத்து சரியாகவே உள்ளது. அதாவது ஏற்றுமதி வருமானத்தில் 12 சதவீத புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் மேற்கோள் காட்டிய சதவீதங்கள் தவறாக உள்ளன. எனவே நாங்கள் அவரது கூற்றினை ‘பகுதியளவு சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

இந்தக் கூற்றினை மதிப்பிடும் போது, ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்ட சரிவு ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திற்கு முன்னரும் காணப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2000 ஆம் ஆண்டில் 33.3 வீதமாக காணப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி 2004 ஆம் ஆண்டில் 27.9 வீதமாக குறைவடைந்துள்ளது. அதே காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி 39 வீதத்தில் இருந்து 35.3 வீதமாக சரிவடைந்துள்ளது.

அட்டவணை 1ஏற்றுமதி செயற்திறன் (2000 – 2018) மூலம்