அநுர குமார திஸாநாயக்க

ராஜபக்ஷ வரவு செலவுத் திட்டத்தை மதிப்பிடுவதில் அனுர குமார திசாநாயக்க செலவினத்தைத் தவறாக வகைப்படுத்துகிறார்

"

அமைச்சரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ராஜபக்ஷக்கள் உள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஒருவரும் உள்ளார். அந்தக் குடும்பத்துக்கு – அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுக்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? மொத்த செலவினம் ரூ.5,200 பில்லியன் அல்லது 5.2 ட்ரில்லியன் ஆகும்.

நியூஸ் பெர்ஸ்ட்.lk | நவம்பர் 20, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

ராஜபக்ஷ குடும்பம் மற்றும் உறவினர்களின் தலைமையின் கீழுள்ள அமைச்சுக்களின் ஊடாகச் செலவிடப்படும் தொகையைப் பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார். பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்ப்பதற்கு முழுமையான செலவின முன்மொழிவுகளை வழங்கும் 2022 வரவு செலவுத்திட்ட உரை மற்றும் அமைச்சரவை மட்ட செலவின ஒதுக்கீடுகளை வழங்கும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடு ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 6 உறுப்பினர்களின் தலைமையின் கீழ்வரும் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் ரூ.1,827 பில்லியன் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). இது அரச செலவினமான ரூ.3,921 பில்லியனின் 46.7% ஆகும் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 64% என்பது இரண்டு காரணங்களால் தவறு ஆகும். அதில் திருப்பிச் செலுத்த வேண்டிய பொதுக்கடன் (கடன்களின் மூலதன மீள்கொடுப்பனவுகள்) உள்ளடக்கப்பட்டுள்ளமை முதலாவதும் பாரதூரமுமான தவறு ஆகும். பொதுக் கணக்கு தரங்களின் பிரகாரம் இதைச் செலவினமாகக் கருதமுடியாது. இரண்டாவது, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்ட தொகைகளை இது அடிப்படையாகக் கொண்டது. பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கைக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பொதுக்கடன் மீள்கொடுப்பனவு சேர்க்கப்பட்ட மொத்த ஒதுக்கீடு (ரூ.5,452 பில்லியன்) கணக்கில் கொள்ளப்பட்டால், ராஜபக்ஷ  குடும்பத்தின் கீழுள்ள அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்கு (ரூ.3,359 பில்லியன்) மீள்கொடுப்பனவுகளுடனான மொத்த ஒதுக்கீட்டின் 61.6% ஆகும். ஏனென்றால் செலவினமாகக் கருதப்பட முடியாத பொதுக் கடன் மீள்கொடுப்பனவு ஒதுக்கீடு (ரூ.1,531 பில்லியன்) நிதியமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

*FactCheck.lk முடிவு பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கும் சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு சரிபார்ப்பையும் பொறுத்தவரையில் புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் FactCheck.lk மதிப்பீட்டை மீண்டும் சரிபார்க்கும்.

ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தை மதிப்பிடுவதில் அனுர குமார திசாநாயக்க செலவினத்தைத் தவறாக வகைப்படுத்துகிறார்

டெய்லி மிரர் (இலங்கை), டிசம்பர் 6, 2021

டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட மேற்படி மதிப்பீட்டின் பிரகாரம், நான் பாராளுமன்றத்தில் தெரிவித்த அறிக்கையில் தவறுகள் உள்ளன.

அதற்கான எனது விளக்கம் மற்றும் திருத்தம் பின்வருமாறு:

2022 வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் ரூ.2,763 பில்லியன் செலவினத்தில் ரூ.1,531 பில்லியன் கடன் தவணைக் கொடுப்பனவு உள்ளடக்கப்பட்டுள்ளது.

2022 வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது இணைப்பிலுள்ள கடன் தவணை தவிர்த்து (வரவு செலவுத்திட்டத்தின் முதலாவது இணைப்பிற்கு அமைய) அரசாங்கத்தின் மொத்த செலவினம் ரூ.5,245 பில்லியன் ஆகும்.

2022 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உட்பட ராஜபக்ஷ குடும்பத்தினருக்கான மொத்த செலவினம் ரூ.3,470 பில்லியன் ஆகும். இந்தத் தொகையில் கடன் தவணையான ரூ.1,531 பில்லியனும் அடங்கியுள்ளது.

இதன் பிரகாரம் அரச செலவினம் ரூ.5,245 பில்லியனில், ரூ.3470 பில்லியன் என்பது 64 சதவீதத்தை விட அதிகமாகும்.

நீண்ட காலமாக அரச செலவினத்தில் கடன் தவணைக் கொடுப்பனவு உள்ளடக்கப்படாமல் தவிர்க்கப்பட்டு வருகிறது. கடன் தவணையானது நிதியமைச்சின் செலவினத்தில் சேர்க்கப்படுவதால் அது மொத்த அரச செலவினத்திலும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே எமது வாதமாகும்.

நன்றி

அனுர குமார திசாநாயக்க, பா.உ

 

பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவிற்கு Factcheck.lk இன் எதிர் பதில்

பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் பதிலை FactCheck.lk வரவேற்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க குறிப்பிட்ட 64% என்பதில் FactCheck.lk ஒன்றல்ல இரண்டு தவறுகளைச் சுட்டிக்காட்டியிருந்தது. கடன் தவணைக் கொடுப்பனவைச் செலவினமாகத் தவறாக வகைப்படுத்தியிருந்தது முதலாவது தவறு ஆகும். தவறாக வகைப்படுத்தியிருந்தது மட்டுமன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்துடன் ஒப்பிடுகையில் தொகையையும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தமை இரண்டாவது தவறு ஆகும். முடிவுகளை விளக்குவதில் FactCheck.lk இந்த இரண்டு காரணங்களையும் குறிப்பிட்டிருந்தது.

சரிபார்ப்புக்குப் பதிலளிக்கும்போது பா.உ திசாநாயக்க முதலாவது தவறு தொடர்பில் மட்டுமே விளக்கமளிக்கிறார்: கடன் மீள்கொடுப்பனவுத் தொகை நிதியமைச்சின் கீழ் வருவதால் அரசாங்கத்தின் மொத்த செலவினத்தை மதிப்பிடுவதில் கடன் தவணையை உள்ளடக்குவது நியாயமானது என அவர் குறிப்பிடுகிறார்.

இது ஏற்கனவே வெளியிடப்பட்ட உண்மைச் சரிபார்ப்பில் விளக்கப்பட்டுள்ளது:

http://www.factcheck.lk/claim/anura-kumara-dissanayake-7

 

பாராளுமன்றத்தில் அரச செலவினங்கள் குறித்து மேற்கோள் காட்டும்போது (உதாரணம், சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கான செலவின சதவீதம் தொடர்பில்) செலவினத்தைக் கணக்கிடுவதில் மீள்கொடுப்பனவை (கடன் மூலதன மீள்கொடுப்பனவு) தவிர்க்கும் பொது நிதி அறிக்கையிடல் நியமங்களே வழமையாகப் பின்பற்றப்படுகின்றன. அதேபோன்று பொது நிதிக் கணக்கியலில் கடன்களில் இருந்து பெறப்படும் காசு உள்பாய்ச்சல்களும் வருமானமாகக் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

பொது நிதி அறிக்கையிடுதல் தொடர்பான இந்தக் கொள்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை சர்வதேச நாணய நிதியத்தினால் (பக்கம் 71 ஐப் பார்க்கவும்) வெளியிடப்படும் அரச நிதி புள்ளிவிபரக் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க செலவினத்துடன் மீள்கொடுப்பனவுகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாக அர்த்தம் கொண்டாலும் கூட, அவரது அறிக்கை ராஜபக்ஷ குடும்பத்தின் வரவு செலவுத்திட்டத்தை 2.4 சதவீதத்தினால் அதிகரித்துக் குறிப்பிடுகிறது. இதுவும் வெளியிடப்பட்ட உண்மைச் சரிபார்ப்பில் விளக்கப்பட்டுள்ளது.

மேலேயுள்ளவற்றைக் கருத்தில் கொள்ளும்போது பாராளுமன்ற உறுப்பினரின் பதிலை FactCheck.lk வரவேற்றாலும், முடிவைப் புதுப்பிப்பதை நியாயப்படுத்தும் வகையில் எந்தப் புதிய தகவல்களும் அவரால் வழங்கப்படவில்லை.மூலம்

நிதியமைச்சு, வரவு செலவுத்திட்ட உரை 2022 (பின்னிணைப்புகள்), பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/0c3639d9-cb0a-4f9d-b4f9-5571c2d16a8b [last accessed 25 November 2021]

நிதியமைச்சு, வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் 2022 (வரைபு), தொகுதி 1, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/6b6d5c7f-d62b-42cf-b54a-b1c62ac9ec30 [last accessed 25 November 2021]

நிதியமைச்சு, வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் 2022 (வரைபு), தொகுதி 2, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/8e523e18-ad76-4b1a-9c05-88ed6f167cd1 [last accessed 25 November 2021]

நிதியமைச்சு, வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் 2022 (வரைபு), தொகுதி 3, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/266de2d8-ac85-4dde-99ac-4a3d2e59932c [last accessed 25 November 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது