அநுர குமார திஸாநாயக்க

மலையகத் தொழிலாளர்களின் வறுமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சரியாகவே தெரிவித்துள்ளார்.

"

அவர்கள் (மலையகத் தொழிலாளர்கள்) தங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தினை உணவுக்காக செலவிடுகின்றார்கள்.

டெய்லி நியூஸ் | ஜனவரி 25, 2019

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த பின்வரும் கூற்றினை, டெய்லி நியூஸ்  ஜனவரி 25 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு  வெளியிட்டிருந்தது.

“அவர்கள் (மலையகத் தொழிலாளர்கள்) தங்களது வருமானத்தில் 50 சதவீதத்தினை உணவுக்காக செலவிடுகின்றார்கள்.”

இந்தக் கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர் மலையக மக்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு பிரேரணையின் போது 24 ஆம் திகதி ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்.

அவருடைய கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு நாங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வீட்டு வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பின் (HIES) முடிவுகளை ஆராய்ந்தோம்.

அட்டவணை 1 இல் குறிப்பிட்டுள்ளது போன்று, மலையகத்தில் சராசரி வீட்டு வருமானம் ரூ. 34,804 ஆகும். சராசரி உணவுச்செலவு ரூ. 16,890 ஆகும். எனவே சமீபத்திய தரவுகளுக்கு அமைய, வருமானத்தில் உணவுக்காக 48.5 வீதத்தை மலையக மக்கள் செலவிடுகின்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க குறிப்பிட்ட வீதமானது உத்தியோகபூர்வ தரவுகளுக்கு அண்மையில் இருப்பதனால் அவருடைய கூற்றினை நாங்கள் “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: ஒவ்வொரு துறைகளுக்குமான உணவுக்கான சரசாரி செலவு, வருமானம் மற்றும் வருமானத்தில் உணவுக்காக செலவிடப்படும் வீதம்மூலம்

  • தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு, வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு 2016க்கான இறுதி அறிக்கை,பார்வையிட: http://www.statistics.gov.lk/HIES/HIES2016/HIES2016_FinalReport.pdf