மஹிந்த ராஜபக்ஷ

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ: மின்சாரம் வழங்கியதை மிகைப்படுத்திக் குறிப்பிடுகின்றார்.

"

நாட்டின் 99.9% மக்களுக்கு நாங்கள் மின்சாரத்தை வழங்கியுள்ளோம்.

திவயின | ஜூன் 24, 2020

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

நாட்டிலுள்ள அனைவருக்கும் மின்சாரத்தினை (99.9% கிடைப்பனவு) வழங்குவதில் தமது அரசாங்கம் வெற்றிகண்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மேற்குறிப்பிட்ட கூற்றினை திவயின 2020 ஜுன் 24 ஆம் திகதி வெளியிட்டது. இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு, இலங்கை மத்திய வங்கியின் 2004 முதல் 2019 வரையிலான ஆண்டறிக்கையிலுள்ள தரவுகளை FactCheck ஆராய்ந்தது.

2004 ஆம் ஆண்டில் – இலங்கை சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு முன்னர் – 74.9 சதவீதமான மக்கள் மின்சார வசதியைப் பெற்றிருந்தனர். 2014 ஆம் ஆண்டில் – இலங்கை சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் இறுதி ஆண்டு – மின்சார வசதியைப் பெற்றிருந்த மக்களின் எண்ணிக்கை 98.0 வீதமாக அதிகரித்திருந்தது.

பிரதமர் குறிப்பிட்டவாறு முழுமையான மின்சாரக் கிடைப்பனவு இலங்கை சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கிடைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில் இது 98.5 சதவீதமாக உயர்ந்தது. 2016 ஆம் ஆண்டு இது மேலும் 99.3 சதவீதமாக உயர்ந்ததுடன், தொடர்ந்தும் அந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. மிகைப்படுத்திக் குறிப்பிட்டாலும், சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே மின்சாரத்தை வழங்குவதில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது என்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் கூற்றானது தரவுகளுடன் ஒத்துப்போகின்றது.

எனவே நாங்கள் பிரதமரின் கூற்றினை ‘பகுதியளவில் உண்மையானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*வடக்கு மற்றும் கிழக்கின் பகுதிகள் உள்ளடக்கப்படவில்லை.

FactCheck வெரிட்டே ரிசேர்ச்சினால் (Verité Research) நடத்தப்படும் தளமாகும்.

மேலும் பல உண்மைச் சரிபார்ப்புக்களுக்கு, எங்களுடைய www.factcheck.lk  என்ற  இணையத்தளத்தை பார்வையிடவும்.மூலம்

  • இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2005 – 2019, முதன்மை சமூகக் குறிகாட்டிகள்
  • இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2004, சிறப்புப் புள்ளிவிபரப் பின்னிணைப்பு