ஹரினி அமரசூரிய

பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாக உள்ளதென குறிப்பிடுகின்றார்.

"

...மத்திய வங்கியின் 2009 [sic, 2019] ஆண்டறிக்கையின் பிரகாரம், இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் 34.5% ஆகும். இது ஆண்களுக்கு 73 சதவீதமாக உள்ளது... உலகிலேயே மிகக் குறைந்த பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தை கொண்டுள்ள ஒரு நாடாக நாங்கள் இருக்கின்றோம்.

உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 10, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

குறிப்புமத்திய வங்கியின் 2019 ஆண்டறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய 2009 என தவறுதலாக குறிப்பிடுகின்றார் என்பதை முழுமையான உரை மற்றும் சூழல் சுட்டிக்காட்டுகின்றதுஉண்மை சரிபார்ப்பானது 2019 தரவுகளை அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, இலங்கையின் தொழிற்படை கணக்கெடுப்பு தரவுகள் மற்றும் 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதத்தினை பிற நாடுகளுடன் ஒப்பிடுவதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILOSTAT தரவுகளை FactCheck பயன்படுத்தியது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய குறிப்பிடுவது போன்று, 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் 34.5% என்பதுடன் ஆண்களின் பங்கேற்பு 73% ஆகும்.

தெற்காசியாவில் நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாகும். எனினும், தெற்காசியாவின் எடையிடப்பட்ட சராசரி வீதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் அதிகமாகும். அதிக சனத்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாகக் காணப்படுவதே இதற்கு காரணமாகும்.

எடையிடப்பட்ட சராசரியைக் கணக்கில் கொள்ளும் போதும், குறைந்த வருமானம் பெறும் நாடுகள், உயர் வருமானம் பெறும் நாடுகள், நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் (இலங்கை இந்த வருமானக் குழுவில் உள்ளது) மற்றும் உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் குறைவாகக் காணப்படுகின்றது (அட்டவணை 1 ஐ பார்க்கவும்).

ILOSTAT தரவுகளில் இடம்பெற்றுள்ள மொத்தம் 187 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இலங்கையானது 161 ஆவதாக நிரல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இலங்கையின் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் உலகின் கீழ்மட்ட 15 சதவீதத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் உலகிலேயே மிகக் குறைவானது என்ற பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவின் கூற்றினை இந்தக் குறிகாட்டிகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

மேலேயுள்ள மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு நாடுகளுக்கான பெண் தொழிற்படை பங்கேற்பு வீதம் அந்தந்த நாடுகளின் தேசிய மதிப்பீட்டுடன் சற்று வித்தியாசப்படலாம். ஏனென்றால் அவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. அதில் தரவு மூலங்கள், உள்ளடக்கும் முழுப்பகுதியின் நோக்கம், ஆய்வுமுறை மற்றும் பிற நாடுகளுக்கான குறிப்பிட்ட காரணிகளின் வித்தியாசங்களை கருத்தில் கொண்டு நாடுகள் மற்றும் காலப்பகுதிகளுக்கு இடையே ஒப்பிடுவதை உறுதிப்படுத்தும் வகையில் மதிப்பீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. மதிப்பீடுகள் முக்கியமாக தேசிய ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தொழிற்படை புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டவை, புள்ளிவிபரத் தரவுகள் கிடைக்காத சந்தர்ப்பத்தில், பிற மூலங்கள் (சனத்தொகை கணக்கெடுப்புக்கள் மற்றும் தேசிய ரீதியாக அறிக்கையிடப்பட்ட மதிப்பீடுகள்) பயன்படுத்தப்பட்டன. தொழிற்படை கணக்கெடுப்புக்கள் அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்புக்களில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட காலப்பகுதிகள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடலாம். வேலைவாய்ப்பு வயதுக்கான மாறுபட்ட வரையறைகளும் நாடுகளுக்கு இடையிலான தரவுகளை ஒப்பிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.



மூலம்

பாராளுமன்ற உறுப்பினரின் முழுமையான அறிக்கையைப் பார்வையிட: https://www.facebook.com/236859640989713/posts/260817228593954/?vh=e&extid=wIJfwzNn4QRfXjMU&d=n

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், தொழிற்படை கணக்கெடுப்பு 2019,  பார்வையிட: http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation [last accessed: 21 September 2020]

உலக வங்கி, தரவுதளம்: உலக அபிவிருத்தி குறிகாட்டிகள் 2020, பார்வையிட: https://databank.worldbank.org/reports.aspx?source=2&series=SL.TLF.CACT.FE.ZS&country= [last accessed: 27 September 2020]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன