ரணில் விக்கிரமசிங்க

பயங்கரவாதிகளை கைது செய்வதற்கான உள்ளூர் சட்டம் தொடர்பில் பிரதமர் தவறாகத் தெரிவித்துள்ளார்.

"

வெளிநாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் பங்குபெறுவது இங்கு குற்றம் அல்ல... அவ்வாறு நீங்கள் ஈடுபவதை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை

ஸ்கை நியூஸ் (ஐக்கிய இராச்சியம்) செவ்வி | ஏப்ரல் 26, 2019

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி ஸ்கை நியூஸ் (ஐக்கிய இராச்சியம்) தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியின் போது பின்வரும் கருத்தினை தெரிவித்திருந்தார்.

‘வெளிநாட்டில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் பங்குபெறுவது இங்கு குற்றம் அல்ல… அவ்வாறு நீங்கள் ஈடுபடுவதை தடுப்பதற்கு எந்த சட்டமும் இல்லை’

முழுமையான அறிக்கையினை பார்வையிடுவதற்கு: http://bit.do/ranilwskynews

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கு தற்போதுள்ள சட்டத்தில் இடம் இல்லை எனவும், புதிய சட்டங்கள் தேவை என்பதையுமே பிரதமரின் கருத்து குறிப்பிடுகின்றது. வெளிநாடுகளில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் சிலர் பங்குபற்றியுள்ளார்கள் என்பது தெரிந்தாலும், எந்த முன்நடவடிக்கைகளுக்கும் சாத்தியமில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

வெளிநாடுகளில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் பங்குபற்றியவர்களை கைது செய்வதற்கு இலங்கையில் தற்போதுள்ள சட்டத்தில் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய்ந்தோம்.

தண்டனைச் சட்டம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

சரத்து 121: அரசாங்கத்திற்கு எதிராக எவராவது யுத்தத்தை அறிவித்தால், அரசாங்கத்திற்கு எதிராக             நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால் அவர்களை சிறை தண்டனை மூலம் தண்டிக்க அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களில் தொடர்புபடுதல், போருக்கு உதவி வழங்குதல்> உடந்தையாக இருப்பதற்கு சமம் என்பதை சரத்து 114 விளக்குகின்றது.

யார் எந்தவொரு சக்தியின் பிரதேசங்களிலும் நாசகார வேலைகளில் ஈடுபடுகின்றார்களோ அல்லது நாசகார வேலைகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்கின்றார்களோ… என 122 ஆவது சரத்தும் குறிப்பிடுகின்றது.

இலங்கையர்கள் சிரியா சென்று, இஸ்லாமிய தேசத்தில் இணைந்து ஆயுதம் ஏந்தியது அறிந்திருந்தும் அவர்களை இலங்கை சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முடியாது என பிரதமர் அவரது செவ்வியில் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். பிரதமர் இந்தக் கூற்றை மீண்டும் வலியறுத்தும் பத்திரிகைச் செய்திகளும் ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் வெளிவந்துள்ளன. மேலும், தண்டனைச் சட்டமானது இலங்கைக்குள் இடம்பெறும் குற்றங்களை மாத்திரமே உள்ளடக்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனினும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைச் சட்டத்தின் சரத்துக்கள் பிரமரின் கூற்றுடன் முரண்படுகின்றன. தண்டனைச் சட்டத்தின் இந்த சரத்துக்களை இரத்துச் செய்யும் வேறு எந்த சட்டத்தையும் எங்களால் கண்டறிய முடியவில்லை.

எனவே, பிரதமரின் கூற்றினை நாங்கள் ‘தவறு’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.மூலம்

இலங்கையின் தண்டனைச் சட்டம் கட்டளைச் சட்டம், அரசுக்கு எதிரான குற்றங்களின் VI அத்தியாயம்