அநுர குமார திஸாநாயக்க

பணம் அச்சிடுவதை அனுர குமார திசாநாயக்க மிகை மதிப்பிடுகிறார்.

"

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை ரூ. 831 பில்லியன் பெறுமதியான பணம் அச்சிடப்பட்டுள்ளது.

மவ்பிம | மே 3, 2021

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த செயற்பாடுகள் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

இதற்கு முன்னர் FactCheck.lk குறிப்பிட்டது போன்று, பணம் அச்சிடுதல் என்பது பற்றாக்குறை நிதியளிப்பு எனப் பரவலாக அறியப்படுகிறது. அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைக்கு மத்திய வங்கி நிதியளிப்பதற்காக புதிதாகப் பணத்தை அச்சிட்டு திறைசேரியினால் வழங்கப்படும் அரசாங்க பிணையங்களை நேரடியாக வாங்குவதையே இது குறிக்கிறது. மத்திய வங்கி கொள்வனவு செய்யும் திறைசேரி பிணையங்களின் மதிப்பானது அவற்றின் முகப்பெறுமதி அல்லது ஏட்டுப் பெறுமதியில் (சந்தை மதிப்பு) குறிப்பிடப்படுகிறது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

நொவம்பர் 28, 2019 இல் ரூ. 88 பில்லியனாகக் காணப்பட்ட ஏட்டு நிலுவைத் தொகை மார்ச் 31, 2020 இல் ரூ. 919 பில்லியனாக உயர்ந்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் தரவு காட்டுகிறது. இது பாராளுமன்ற உறுப்பினர் ரூ.831 பில்லியன் எனக் கணக்கிடுவதற்குக் காரணமாக இருக்கலாம்.

பாராளுமன்ற உறுப்பினரின் பணம் அச்சிடப்பட்ட தொகைக் கணக்கீட்டில் இரண்டு தவறுகள் உள்ளன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). முதலாவது தவறு, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் என அவர் குறிப்பிடும் நொவம்பர் 28, 2019க்குப் பதிலாக நொவம்பர் 21, 2019 (புதிய பிரதமர் பொறுப்பேற்றுக்கொண்ட நாள்) என இருக்க வேண்டும். இரண்டாவது திறைசேரி உண்டியல் உடைமைகளின் ஏட்டுப் பெறுமதியை விட முகப் பெறுமதியே பணம் அச்சிடப்பட்ட தொகையை ஒரளவு சரியாகக் கணிக்கிறது. நொவம்பர் 21, 2019 முதல் மார்ச் 31, 2021 வரை முகப்பெறுமதி ரூ.80 பில்லியனிலிருந்து ரூ.842 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆகவே இந்தக் காலப்பகுதியில் ரூ.762 பில்லியன் பெறுமதியான பணம் அச்சிடப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட தொகையை விட 9% குறைவாகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைப் ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

 



மூலம்

இலங்கை மத்திய வங்கி, தரவு நூலகம், நாளாந்த செயற்பாடுகள், பார்வையிட: https://www.cbsl.lk/eResearch/Modules/RD/SearchPages/Indicators_DailyOperationsNew.aspx

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை, 2020, விசேட புள்ளிவிபரப் பின்னிணைப்பு, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2020/en/16_S_Appendix.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன