எரான் விக்கிரமரத்ன

பங்கு பரிவர்த்தனையில் இருந்து வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்களை பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சரியாகக் குறிப்பிடுகின்றார்.

"

பங்கு பரிவர்த்தனையில் இருந்து பாரிய அளவிலான வெளிநாட்டு முதலீடு வெளியே சென்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ரூபாயின் மதிப்பில் ரூ.51 பில்லியன் வெளிப்பாய்ச்சல் பதிவாகியுள்ளது…

லங்கா பிசினஸ் ஒன்லைன் | ஜனவரி 18, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் காலாண்டு அறிக்கை, இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் ஆண்டறிக்கையின் தரவுகளையும் FactCheck ஆராய்ந்தது.

ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2020 வரையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமான பங்குகளின் மொத்த விற்பனைப் பெறுமதி (வெளிப்பாய்ச்சல்) ரூ.104 பில்லியன் எனப் பதிவாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வெளிநாட்டவர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட பங்குகளின் மொத்த கொள்வனவுப் பெறுமதி (உட்பாய்ச்சல்) ரூ.53 பில்லியன் எனப் பதிவாகியுள்ளது.

மேலே பதிவாகியுள்ள விற்பனை மற்றும் கொள்வனவுகளுக்கு இடையிலான வித்தியாசம் ரூ.51 பில்லியன் (சரியாகக் குறிப்பிட வேண்டும் என்றால், ரூ. 51,355,712,983) – பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன குறிப்பிட்டது போன்று, இலங்கையின் பங்குப் பரிவர்த்தனையில் இருந்து வெளிநாட்டு முதலீடுகளின் நிகர வெளிப்பாய்ச்சல் இதுவாகும்.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.மூலம்

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை, காலாண்டு அறிக்கை 31 டிசம்பர் 2020, பக்கம் 3, பார்வையிட: https://cdn.cse.lk/cmt/upload_cse_report_file/quarterly_report_473_31-12-2020.pdf [Last accessed: 23 February 2021]

இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், ஆண்டறிக்கைகள் (பல்வேறு ஆண்டுகள்), பார்வையிட: https://www.sec.gov.lk/index.php/annual-reports/ [Last accessed: 23 February 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது