தலதா அத்துக்கோரள

அமைச்சர் தலதா அத்துக்கோரள சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் தவறாகத் தெரிவித்துள்ள போதும், சிறைத்தண்டனை தொடர்பில் சரியாகத் தெரிவித்துள்ளார்.

"

சிறையில் சுமார் 22,000 கைதிகள் உள்ளனர்.

தினமின | ஏப்ரல் 10, 2019

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

முதலாவது கூற்றில்: 2017 ஆம் ஆண்டு வரையான தகவல்களைக் கொண்ட சமீபத்திய இலங்கை சிறைச்சாலைகள் புள்ளிவிபர அறிக்கையின் பிரகாரம், சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் நாளாந்த சராசரி 19,278. இது அமைச்சர் குறிப்பிட்ட தொகையை விட 15..5 வீதம் குறைவாகும். இந்த 19,278 கைதிகளில் 9,036 பேர் தண்டனைக் கைதிகள், மீதமுள்ள 10,242 பேர் தண்டனை பெறாதவர்கள் (தடுத்து வைக்கப்பட்டவர்கள்).

2017 ஆம் ஆண்டுக்கான தரவுகளின் பிரகாரம், அந்த ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்ட தண்டனைக் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 22,83 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையையே அமைச்சர் குறிப்பிட்டிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. எனினும், ஒரு வருடத்தில் சிறையில் அடைக்கப்பட்ட தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையானது, எந்த நேரத்திலும் சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இருந்து வித்தியாசமானதாகும். ஏனென்றால் சிறையில் அடைக்கப்படுபவர்கள் பலரும் குறுகிய காலம் மாத்திரமே சிறையில் இருப்பார்கள்.

இரண்டாவது கூற்றில்: 2017 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்ட தண்டனைக் கைதிகளில் 93 சதவீதமானவர்கள் (21,241) இரண்டு வருடத்திற்கும் குறைவான சிறைத்தண்டனையைப் பெற்றவர்கள்.

சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் அமைச்சர் தவறாகத் தெரிவித்துள்ள போதும், கைதிகளில் பலரும் இரண்டு வருடங்களுக்கும் குறைவான சிறைத்தண்டனையைப் பெற்றுள்ளார்கள் என சரியாகத் தெரிவித்துள்ளார்.

எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: தண்டனை பெற்ற கைதிகளின் தண்டனைக் காலம் – 2017



மூலம்