அலி சப்ரி

நீதி அமைச்சர் அலி சப்ரி: 19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.

"

ஈஸ்டர் தாக்குதல்களில், அப்போதைய பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தவறு செய்யாதிருந்திருக்கலாம். இருப்பினும், ஜனாதிபதி அவரை நீக்க விரும்பினால், இந்த அரசியலமைப்பின் கீழ் அவரால் அவ்வாறு செய்ய முடியாது.

லங்காதீப | ஆகஸ்ட் 16, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

நீதி அமைச்சர் அலி சப்ரி19 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பாதுகாப்புக்களை பலவீனங்களாக தவறாகச் சித்தரிக்கின்றார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு தனது எதிர்ப்பினை விளக்கும் வகையில் அமைச்சர் சப்ரி இந்தக் கூற்றினைத் தெரிவித்துள்ளார். இந்த கூற்றின் மூலமாக பொலிஸ் மா அதிபரை பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான அழுத்தம் ஜனாதிபதிக்கு 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்துகின்றார்.

பொலிஸ் மா அதிபரை நீக்குவதில் ஜனாதிபதியின் அதிகாரத்தில் 19 ஆவது திருத்தச் சட்டம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு, 2015 ஆம் ஆண்டில் 19 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னரும், பின்னரும் அரசியலமைப்பு மற்றும் சட்ட நிலைப்பாடுகளை FactCheck ஆராய்ந்தது. 19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அரசியலமைப்பின் உறுப்புரை 41c(3), அரசியலமைப்பு அல்லது சட்டத்தினால் அன்றி பொலிஸ் மா அதிபரை நீக்க முடியாது எனக் குறிப்பிடுகின்றது. பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகள் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னரும், பின்னரும் அரசியலமைப்பின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கான பொருத்தமான தேவைப்பாடுகள் அரசியலமைப்பினால் அன்றி சட்டத்தினாலேயே வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இல. அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டம், இது 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்தின் கீழ், பொலிஸ் மா அதிபரை கீழ்வரும் சந்தர்ப்பங்களில் நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது:

அ) சில குற்றங்களுக்கு தண்டனை பெறுதல் அல்லது கடனிறுக்கவகையற்றவர் என அறிவிக்கப்படுதல்,

ஆ) சுகவீனம் காரணமாக தகுதியிழத்தல்,

இ) குடியுரிமையை இழத்தல், அல்லது

ஈ) இலஞ்சம், அதிகாரத்தை துஷ்பிரயோகப்படுத்துதல், கடமையை அலட்சியப்படுத்துதல், அல்லது பதவியில் பக்கச்சார்பாக செயற்படுதல்.

முதல் மூன்று காரணங்களில், ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எந்தவித விசாரணையும் இன்றி பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அனுமதியளிக்கின்றது. எனினும், பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு காரணம் (ஈ) அடிப்படையாக இருந்தால், பொலிஸ் மா அதிபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணைக் குழுவை அமைக்குமாறு குறைந்தது 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் தீர்மானம் ஒன்றை வழங்கி கோரிக்கை விடுக்க வேண்டும். இந்த விசாரணைக் குழு பொலிஸ் மா அதிபர் குற்றமிழைத்தவர் எனக் கண்டறிந்தால், பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பார். பிரேரணைக்கு ஆதரவாக பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால், பொலிஸ் மா அதிபரை பொறுப்பிலிருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும்.

இந்த உண்மைகள் பொலிஸ் மா அதிபரை நீக்குவதற்கு ஜனாதிபதி பூர்த்திசெய்ய வேண்டிய தேவைப்பாடுகள் 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்படவில்லை, ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு முன்னரே 2002 ஆம் ஆண்டில் பாராளுமன்ற சட்டத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது.

எனவே, அமைச்சர் சப்ரியின் கூற்றினை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீமூலம்