ஹர்ஷ டி சில்வா

நியூயோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இலங்கை கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டி சில்வா மிகைப்படுத்துகின்றார்.

"

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இறையாண்மையுடைய நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திடம் கடன் கேட்ட போது, அவர்கள் பிணையம் கேட்டுள்ளனர்

அருண | ஜூலை 20, 2020

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

கடந்த மாதம், இலங்கை மத்திய வங்கி நியூயோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியுடன் (FED) ‘வெளிநாட்டு மற்றும் சர்வதேச நாணய அதிகாரசபைகளுக்கான (FIMA) மீள்கொள்வனவு வசதியின்’ கீழ் தற்காலிக உடன்படிக்கை ஒன்றை முன்னெடுத்தது. நாட்டிற்கான பன்னாட்டு முறி ஒன்றுக்காக இலங்கையிடம் பிணையம் கேட்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைக் குறிப்பிடுகின்றார். அத்துடன் இலங்கை பொருளாதாரத்தின் எதிர்காலம் தொடர்பில் சர்வதேசத்தின் கண்ணோட்டமே இதற்கு காரணம் எனக் குறிப்பிடுகின்றார்.

சர்வதேச நிதிச் சந்தைகளில் கோவிட் – 19 நோய்த்தொற்றினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காக பெடரல் வங்கி 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த FIMA மீள்கொள்வனவு வசதியை அறிமுகப்படுத்தியது. எந்தவொரு மீள்கொள்வனவு வசதியைப் போன்றும் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளும் எந்த நாணய அதிகாரசபையும் அரசாங்க இருப்பு சொத்துக்களை பிணையாக வைக்க வேண்டியது அவசியம். ஹொங்கொங், இந்தோனேசியா மற்றும் சிலி ஆகிய நாடுகளின் நாணய அதிகாரசபைகளும் குறித்த வசதியின் கீழ் இதேபோன்ற உடன்படிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

கடந்த காலங்களில் இது போன்ற பிணையின் கீழான கடன் பெறும் வசதி பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் மற்றும் செய்தி வெளியீடுகளில் எந்தவித வெளிப்படுத்துகைகளையும் FactCheck இனால் கண்டறிய முடியவில்லை. எனவே, கடன் ஒன்றுக்காக இலங்கையிடம் பிணையம் கேட்கப்படுவது முதல் தடவையாக நடந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுவதை, பிணையம் அவசியம் எனப்படும் இவ்வாறான கடன் வசதியை முதன் முறையாக இலங்கை பயன்படுத்துகின்றது (மிகவும் பொருத்தமானது) எனக் குறிப்பிட முடியும்.

எனினும், இலங்கை அதிக ஆபத்துள்ள கடன் பெறுநர் என்ற சர்வதேச சமூகத்தின் கண்ணோட்டமே இவ்வாறான ஏற்பாட்டுக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதில் நியாயம் உள்ளது. இவ்வாறான மதிப்பீட்டுக்கான நிலையான தரமானது இலங்கையின் பன்னாட்டு முறிகளுக்கான ஆபத்து பிரிமியம் (Risk Premium) ஆகும் (அதாவது அவர்களுடைய விளைவு விகிதங்களுக்கும், ஐக்கிய அமெரிக்க திறைசேரி முறிகளின் வட்டி வீதத்திற்கும் இடையிலான வித்தியாசம்); ஜுலை மாதத்தில் சராசரி ஆபத்து பிரிமியம் 13.65% ஆகும். 2020 ஏப்ரல் மாதத்தில் ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் கடன் தரப்படுத்தலை B- எனும் நிலைக்கு குறைத்து தரப்படுத்தியுள்ளது, உயர் மறுநிதியளிப்புத் தேவைகள், நிதி கிடைப்பதைச் சுற்றியுள்ள அதிக நிச்சயமற்றதன்மை மற்றும் குறைந்த இருப்பு பாதுகாப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விபரிக்கப்படுகின்றது.

எனவே, நியூயோர்க் பெடரல் வங்கியில் இருந்து இலங்கை கடன் வாங்கிய சூழலை பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிட்டாலும், கடன் வாங்குவது குறித்த முக்கியத்துவத்தை மிகைப்படுத்துகின்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை நாங்கள் ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

 • ‘நியூயோர்க் பெடரல் வங்கியிடம் இருந்து இலங்கை பில்லியன் டொலர் மீள்கொள்வனவை கோருகின்றது’, எக்கனமி நெக்ஸ்ட் (6 ஜுலை 2020), பார்வையிட: https://economynext.com/sri-lanka-seeking-billion-dollar-repo-from-new-york-fed-71713/ [last accessed: 19 August 2020]
 • இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘பெடரல் ரிசர்வ் வங்கி, நியூயோர்க் உடன் மத்திய வங்கி செய்துகொண்ட மீள்கொள்வனவு உடன்படிக்கை பற்றி தெளிவுபடுத்துகின்றது’, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/news/the-central-bank-clarifies-its-repurchase-agreement-with-the-federal-reserve-bank-new-york [last accessed: 19 August 2020]
 • கொலம்பியா சட்ட மீளாய்வு உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘வெளிநாட்டு மத்திய வங்கி பணப்புழக்க மாற்றங்களுக்கான பெடரல் ரிசர்வ் வங்கியின் கேள்விக்குரிய சட்ட அடிப்படைகள்’, பார்வையிட: https://columbialawreview.org/content/the-federal-reserves-questionable-legal-basis-for-foreign-central-bank-liquidity-swaps/ [last accessed: 19 August 2020]
 • பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர் குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘நிதிச் சந்தைகளின் சீரான செயற்பாட்டுக்கு உதவும் வகையில் தற்காலிக FIMA மீள்கொள்வனவு வசதியை நிறுவுவதாக பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது’, பார்வையிட: https://www.federalreserve.gov/newsevents/pressreleases/monetary20200331a.htm [last accessed: 19 August 2020]
 • பிரயன் ஹொரிகன், ‘FIMA மீள்கொள்வனவு வசதி: உலகளாவிய ஐக்கிய அமெரிக்க டொலர் நெருக்கடிக்கு பெடரல் வங்கியின் தீர்வு’, ஆலோசகர் பார்வைகள் (8 ஏப்ரல் 2020), பார்வையிட: https://www.advisorperspectives.com/commentaries/2020/04/08/the-fima-repo-facility-the-feds-solution-to-the-global-us-dollar crunch#:~:text=On%20March%2031%2C%20the%20Federal,called%20the%20FIMA%20Repo%20Facility [last accessed: 19 August 2020]
 • லிலியன் கருனுங்கன், ‘ஆசியாவின் மிகவும் துன்பகரமான இறையாண்மைக் கடன் பொருளாதாரத்தை ‘மாற்றியமைக்கக்’ கூடும்’, புளும்பேர்க் (08 ஜுன் 2020), பார்வையிட: https://www.bloomberg.com/news/articles/2020-06-07/asia-s-most-distressed-sovereign-debt-may-force-economy-reset [last accessed: 19 August 2020]
 • பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர் குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘ஐக்கிய அமெரிக்க டொலர் தற்காலிக பணப்புழக்க மாற்றம் மற்றும் வெளிநாட்டு மற்றும் சர்வதேச நாணய அதிகார சபைகளுக்கான தற்காலிக மீள்கொள்வனவு வசதியை பெடரல் ரிசர்வ் குழு 2021 மார்ச் 31 வரை நீட்டித்து அறிவித்துள்ளது’, பார்வையிட: https://www.federalreserve.gov/newsevents/pressreleases/monetary20200729b.htm [last accessed: 19 August 2020]
 • Congressional Research Service, கோவிட் – 19: வெளிநாட்டு மத்திய வங்கிகளுக்கு பெடரல் ரிசர்வ் உதவி (2020),  பார்வையிட: https://crsreports.congress.gov/product/pdf/IF/IF11498 [last accessed: 19 August 2020]
 • மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம் 30, ‘நியூயோர்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் மீள்கொள்வனவு வசதியை கோரும் சிலியின் மத்திய வங்கி’, பார்வையிட: https://www.centralbanking.com/central-banks/reserves/foreign-exchange/7554041/chilean-central-bank-requests-access-to-ny-feds-repo-facility [last accessed: 19 August 2020]
 • Cloud Y, ‘பெடரல் வங்கியின் மீள்கொள்வனவு வசதியை எவ்வாறு பயன்படுத்துவது – ஹொங்கொங்கின் நிலை’, EconReporter (29 ஏப்ரல் 2020), பார்வையிட: https://en.econreporter.com/2020/04/how-to-use-the-feds-fima-repo-case-of-hong-kong/ [last accessed: 19 August 2020]
 • அட்ரியன் வயில் அக்லஸ், ‘அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைவதால் அமெரிக்க பெடரல் வங்கியுடன் இந்தோனேசிய வங்கி 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள்கொள்வனவு வசதி ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்றது;, TheJakartaPost (08 ஏப்ரல் 2020), பார்வையிட: https://www.thejakartapost.com/news/2020/04/08/bank-indonesia-strikes-60b-repo-facility-deal-with-us-fed-as-forex-reserves-drop.html [last accessed: 19 August 2020]
 • பெடரல் ரிசர்வ் அமைப்பின் ஆளுநர் குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘வெளிநாட்டு மற்றும் சர்வதேச நாணய அதிகாரசபைகளுக்கான மீள்கொள்வனவு வசதி தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்’, பார்வையிட: https://www.federalreserve.gov/newsevents/pressreleases/fima-repo-facility-faqs.htm [last accessed: 19 August 2020]
 • ஐக்கிய அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘நாளாந்த திறைசேரி விளைவு விகிதங்கள்’, பார்வையிட: https://www.treasury.gov/resource-center/data-chart-center/interest-rates/pages/textview.aspx?data=yield [last accessed: 19 August 2020]
 • இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம், வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் (31 ஜுலை 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200731_e.pdf [last accessed: 19 August 2020]
 • இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம், வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் (24 ஜுலை 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200731_e.pdf [last accessed: 19 August 2020]
 • இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம், வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் (17 ஜுலை 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200717_e1.pdf [last accessed: 19 August 2020]
 • இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம், வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் (10 ஜுலை 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200710_e1_0.pdf [last accessed: 19 August 2020]
 • இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களம், வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் (03 ஜுலை 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20200703_e.pdf [last accessed: 19 August 2020]
 • இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கைகள், பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [last accessed: 19 August 2020]
 • ஃபிட்ச் மதிப்பீடுகள், மதிப்பீடுகளின் வரைவிலக்கண அறிக்கை (11 ஜுன் 2020), பார்வையிட: https://www.fitchratings.com/research/fund-asset-managers/rating-definitions-11-06-2020 [last accessed: 19 August 2020]