தேசிய சுதந்திர முன்னணி

தேசிய சுதந்திர முன்னணி:  முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில்  கணக்காய்வாளர் நாயகத்தின்  அதிகாரம்  குறைக்கப்படுவதை சரியாகத்  தெரிவித்துள்ளது

"

(முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில்) கம்பெனிகள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் நிறுவனங்களில், அரசாங்கம் பெரும்பான்மை பங்குதாரராக இருந்தால் கணக்காய்வாளர்

தேசிய சுதந்திர முன்னணியினால் வெளியிடப்பட்ட அறிக்கை | அக்டோபர் 2, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

தேசிய சுதந்திர முன்னணிமுன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் குறைக்கப்படுவதை சரியாகத் தெரிவித்துள்ளது

FactCheck இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, 19 ஆவது திருத்தம் அதாவது தற்போதைய அரசியலமைப்பு மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தத்தில் உறுப்புரை 154(1) இன் மொழி மற்றும் நோக்கத்தை ஆராய்கின்றது.

தற்போதைய அரசியலமைப்பில், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வின் கீழ் வரும் அரசியலமைப்பின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் வகைகளை உறுப்புரை 154(1) நிரல்படுத்துகின்றது. “2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டதும் அல்லது பதிவுசெய்யப்பட்டதாகக் கருதப்பட்டதுமான கம்பெனிகளில் ஐம்பது சதவீதமான அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை அரசாங்கம் அல்லது பகிரங்க கூட்டுத்தாபனம் அல்லது உள்ளூராட்சி சபை வைத்திருக்கும் கம்பெனிகள்” என அது குறிப்பாக சுட்டிக்காட்டுகின்றது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம், பிற விடயங்களுடன், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வின் கீழ் வரக்கூடிய நிறுவனங்களின் வகைகளில் அவ்வாறான கம்பெனிகளை குறிப்பாக நீக்கியுள்ளது. உதாரணமாக, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை தனியார் மின்சார நிறுவனம் (லெகோ), லங்கா சதொச மற்றும் லிற்ரோ காஸ் லங்கா போன்ற நிறுவனங்கள் அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வில் இருந்து குறிப்பாக விடுபட்டுள்ளன.

ஆகவே, நாங்கள் தேசிய சுதந்திர முன்னணியின் அறிக்கையினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.Additional Note

மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களின் வகைகளை நீக்கியதுடன் மேலதிகமாக, முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தில் உறுப்புரை 154(1) இல் “கணக்காய்வு” என்னும் வார்த்தைக்கு அடுத்து “கணக்குகள்” என்ற மட்டுப்படுத்தும் உட்பிரிவை சேர்த்துள்ளதன் மூலம் கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அரசாங்க நிறுவனங்களின் “கணக்குகளுடன்” மாத்திரம் கணக்காய்வு மட்டுப்படுத்தப்படும், முறைகேடு மற்றும் ஊழலுடன் தொடர்புடைய உதாரணமாக, சட்டம், விதிமுறைகள், கொள்கைகள், நடைமுறைகள் போன்றவற்றுக்கு இணங்குதல் தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இவ்வாறான பல கணக்காய்வுகள் கடந்த காலங்களில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன, அரசாங்கத்தின் நிறைவேற்று பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு இவ்வாறான அறிக்கைகளை பாராளுமன்றம் பயன்படுத்தியுள்ளது


மூலம்

  • அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம்: இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை திருத்துவதற்கானதொரு சட்டமூலம், உட்பிரிவு 40, பார்வையிட: https://www.dgi.gov.lk/images/pdf/2020/PL_011963_Gazette_suppleiment_T.pdf