ஹர்ஷ டி சில்வா

தேசிய கணக்கு மோசடியை பா.உ ஹர்ஷ டி சில்வா வெளிப்படுத்துகின்றார்

"

2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 11% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அது 14 சதவீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.

ஹர்ஷ டி சில்வாவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | மே 1, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான நிதியமைச்சின் ஆண்டறிக்கையை FactCheck ஆராய்ந்தது.

“2019 ஆம் ஆண்டிலிருந்து கசிவு செய்யப்பட்ட நிலுவையிலுள்ள கொடுப்பனவுகளை செலுத்துவதனைக் கருத்திற்கொண்டு நிதி அமைச்சானது ரூ.422.6 பில்லியன் தொகையினை 2019 இற்கு நகர்த்துவதன் ஊடாக 2020ம் ஆண்டிற்கான அரச செலவினங்கள் மற்றும் தேறிய கடன்வழங்கலினை சீராக்கியிருந்தது” (.160) என மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கை குறிப்பிடுகின்றது.

கணக்குகளை சமர்ப்பிப்பதில் இந்த மாற்றமானது நிகழ்வு அடிப்படை கணக்கீட்டு முறைமையில் (Accrual Accounting) மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. இந்த கணக்கீட்டு முறைமையில், பணத்தைச் செலுத்தும் போது அல்லது பெற்றுக்கொள்ளும் போது பதிவு செய்வதற்கு மாறாக பரிவர்த்தனை நடக்கும் போதே செலவினம் அல்லது வருமானம் பதிவு செய்யப்படும். எனினும்:

() இலங்கையின் தேசியக் கணக்கியல் முறைமைமேம்படுத்தப்பட்ட காசு அடிப்படையிலான கணக்கீட்டு கொள்கையைபயன்படுத்துவதாக நிதியமைச்சின் 2019 ஆண்டறிக்கை குறிப்பிடுகின்றது (.194). இந்த முறைமையின் கீழ் பணத்தைச் செலுத்தும் போது அல்லது பெற்றுக்கொள்ளும் போது மாத்திரமே செலவினம் அல்லது வருமானம் அடையாளம் காணப்படுகின்றது. அத்துடன் செலவிடப்படாத வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் நிதியாண்டின் இறுதியில் இரத்துச் செய்யப்படும்.

() நிகழ்வு அடிப்படை கணக்கீட்டு முறைமை பயன்படுத்தப்பட்டாலும் கூட, வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைக் கணக்கிடுவதற்கு வருமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட அதே கணக்கீட்டு முறைமை செலவினத்திற்கும் பயன்படுத்துவது அவசியமாகும். எனினும் 2019க்கான வருமானம் 2020 கணக்குகளில் மாற்றப்படவில்லை. நிகழ்வு அடிப்படை கணக்கீட்டு முறைமை செலவினத்திற்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் வருமானத்துக்கு பயன்படுத்தப்படவில்லை.

() மற்றும் () கருத்தில் கொள்ளும் போது, 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ.422.6 பில்லியன் செலவினத்தை 2019 ஆம் ஆண்டின் கணக்குகளுக்கு நகர்த்துவதை கணக்கியல் தரம் ஒன்றினால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே பா. தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது போன்று இந்த தவறான பயன்பாடு கணக்கியல் மோசடி என்பதுடன் சரியாகப் பொருந்துகின்றது.

2019 ஆம் ஆண்டின் கணக்குகளுக்கு தவறாக நகர்த்தப்பட்ட ரூ.422.6 பில்லியனை 2020 ஆம் ஆண்டின் செலவினங்களுடன் சேர்த்து FactCheck கணக்கிட்டது. அவ்வாறு சேர்க்கப்படும் போது வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ.2,091 பில்லியனாக உயர்வதுடன், இது 2020 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14 சதவீதமாகும்.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினைசரியானதுஎன வகைப்படுத்துகின்றோம்.

மேலதிகக் குறிப்பு: நிதி நிலைமையைத் தவறாகக் காட்டுவதற்காக நிதி அறிக்கைகளை வேண்டுமென்றே மாற்றுதல் கணக்கியல் மோசடி என வரையறுக்கப்படுகின்றது. 2020 இல் மேற்கொள்ளப்பட்ட காசுக் கொடுப்பனவுகள் 2019 ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் என ஆண்டறிக்கையில் பதிவு செய்யப்பட்டதை திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஏற்றுக்கொண்டதைதி மோர்னிங்பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது. ”காட்சிப்படுத்தல் நோக்கங்களுக்காகசெலவினங்கள் பதிவிடப்படுவது நகர்த்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.



மூலம்

நிதியமைச்சு, ஆண்டறிக்கை 2019, பார்வையிட: http://oldportal.treasury.gov.lk/web/guest/publications/annual-report [last accessed: 12 May 2021]

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கைகள் (2019 மற்றும் 2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/ta/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D [last accessed: 12 May 2021]

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் முழுமையான ட்விட்டர் தொடர், பார்வையிட: https://twitter.com/HarshadeSilvaMP/status/1388533167460548608

கணக்கியல் மோசடி என்பதற்கான வரைவிலக்கணத்தைப் பார்க்க: https://www.investopedia.com/ask/answers/032715/what-accounting-fraud.asp

திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவின் அறிக்கையைப் பார்வையிட:

https://www.themorning.lk/treasury-rules-out-fraudulent-stats-in-central-bank-report/

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன