காமினி லக்ஷ்மன் பீரிஸ்

ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் தாக்கத்தினை அமைச்சர் பீரிஸ் தவறாகச் சித்தரிக்கின்றார்

"

19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணடிக்க வேண்டியிருக்கும்… அதனால் தான் விடுபாட்டுரிமை தேவை

அருண | செப்டம்பர் 8, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில், அரசியலமைப்பு மாற்றங்கள் காணப்படும் சூழலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 20 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமை அவசியம் என அமைச்சர் பீரிஸ் நியாயப்படுத்துகின்றார். 19 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை, ஜனாதிபதி தனது நேரத்தை நீதிமன்றங்களில் வீணாக்க வேண்டியிருக்கும் என அவர் தெரிவிக்கின்றார்.

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, 19 ஆவது திருத்தத்திற்கு முன்னரும், பின்னரும் அரசியலமைப்பின் உறுப்புரை 35 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை FactCheck ஆராய்ந்தது.

19 ஆவது திருத்தத்திற்கு முன்னரும், பின்னரும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது எந்தவொரு சாதாரண சட்ட நடவடிக்கைகளும் (குடியியல் அல்லது குற்றவியலாக இருந்தாலும்) தொடுக்கப்படவோ அல்லது தொடர்ந்து நடத்தப்படவோ முடியாது என விதிகளின் எளிய வாசிப்பு நிரூபிக்கின்றது. ஆகவே, ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட (தேர்தலுக்கு முன்னரான) சட்ட நடவடிக்கைகள் அவர் ஜனாதிபதியாக இருக்கும் போது இடைநிறுத்தப்படும்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை செயற்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட சட்ட சவால்களையே அரசியலமைப்பு அனுமதிக்கின்றது. 19 ஆவது திருத்தத்திற்கு முன்னரும், பின்னரும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கான சவால்கள் சட்டத்துறை தலைமையதிபதிக்கு எதிராகவே கொண்டுவரப்படுகின்றது. ஜனாதிபதிக்குப் பதிலாக அவரே நீதிமன்றத்தில் ஆஜராவார். ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தின் முன் ஆஜராவதற்கு அவசியம் இல்லை (உண்மையில், பிரதிவாதியாக பெயர் கூட குறிப்பிடப்படமாட்டாது).

19 ஆவது திருத்தத்திற்கு முன்னர், ஜனாதிபதியின் அமைச்சருக்கான அதிகாரங்கள் மாத்திரமே சவாலுக்கு உட்படுத்தப்பட முடியும். 19 ஆவது திருத்தத்திற்குப் பின்னர், ஜனாதிபதியின் எந்தவொரு உத்தியோகபூர்வ அதிகாரமும் (ஒரே ஒரு விதிவிலக்குடன் – யுத்தம் மற்றும் சமாதானத்தை பிரகடனப்படுத்துவதற்கான அவரது அதிகாரம்) அடிப்படை உரிமைகள் மனுக்களினால் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியும். 19 ஆவது திருத்தம் சவாலுக்கு உட்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை விரிவுபடுத்திய போதும், நீதிமன்றத்தில் ஆஜராகி நேரத்தை செலவு செய்வதற்கான தேவையில் ஜனாதிபதியின் விடுபாட்டுரிமையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 19 ஆவது திருத்தத்திற்கு முன்னரும், 19 ஆவது திருத்தத்தின் கீழும் அவர் எப்போதும் அதைச் செய்யத் தேவையில்லை. 20 ஆவது திருத்த வரைபிலும் இந்த விடயத்தில் அவரது நிலை தொடர்ந்தும் அவ்வாறே காணப்படுகின்றது.

நீதிமன்றத்தில் செலவளிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதில் ஜனாதிபதிக்கான விடுபாட்டுரிமையில் 20 ஆவது திருத்தம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரே ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், சவாலுக்கு உட்படுத்தக்கூடிய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் 19 ஆவது திருத்தத்திற்கு முன்னர் போல குறைக்கப்படுகின்றது.

ஆகவே, நாங்கள் இந்த அறிக்கையினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

**பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.மூலம்

  • இலங்கைப் பாராளுமன்றம், 19 திருத்தங்களையும் உள்ளடக்கிய இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு, உறுப்புரை 35, பார்வையிட: https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-19th.pdf.
  • இலங்கைப் பாராளுமன்றம், 18 திருத்தங்களையும் உள்ளடக்கிய இலங்கையின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பு, உறுப்புரை 35, பார்வையிட: https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-18th.pdf.