மைத்திரிபால சிறிசேன

கொலைக்குற்றங்கள் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை உத்தியோகபூர்வ தரவுகள் ஆதரிக்கும் போதும், பாலியல் வழக்குகள் தொடர்பில் அவரின் கூற்று தவறானது.

"

2008 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகளின்; எண்ணிக்கை 1378 ஆகவும். 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 741 ஆகவும்; 2013 ஆம் ஆண்டு 586 ஆகவும், 2014 ஆம் ஆண்டு 548 ஆகவும் 2015 ஆம் ஆண்டு 476 ஆகவும் பதிவாகியுள்ளன. கடந்த வருடம், அதாவது 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 452 கொலைகள் பதிவாகியுள்ளன. 90 சதவீதமான கொல

லங்காதீப, திவயின | ஜூலை 12, 2018

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

கொலைக்குற்றங்கள் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை ஆதரிக்கின்ற உத்தியோக பூர்வ தரவுகள் பாலியல் வழக்குகள் தொடர்பிலானவற்றை ஆதரிக்கவில்லை.

2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பிலான எண்ணிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் முழுமையான அறிக்கை பின்வருமாறு. (இந்த அறிக்கையானது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அறிக்கையில 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்கள் தொடர்பிலான தரவுகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதியின் முழுமையான அறிக்கை பின்வருமாறு. (இந்த அறிக்கையானது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

2008 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற கொலைகளின்; எண்ணிக்கை 1378 ஆகவும். 2010 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 741 ஆகவூம்; 2013 ஆம் ஆண்டு 586 ஆகவும், 2014 ஆம் ஆண்டு 548 ஆகவும் 2015 ஆம் ஆண்டு 476 ஆகவும்  பதிவாகியுள்ளன. கடந்த வருடம், அதாவது 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 452 கொலைகள் பதிவாகியுள்ளன. 90 சதவீதமான கொலைகளுக்கு போதைப்பொருட்களே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் 2212 பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டில் 2008 சம்பவங்களும்  மற்றும் 2016 ஆம் ஆண்டில் 1996 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த வருடம், அதாவது 2017 ஆம் ஆண்டில் 1732 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆறு மாத காலப்பகுதியில்இ இலங்கையில் 714 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தரவுகள் பொய்யானவை அல்ல. கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் கொலைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் இணையத்தளத்தில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு ஜனாதிபதியின் அறிக்கையின் உண்மைத்தன்மையை நாங்கள் மதிப்பிட்டோம். ஜனாதிபதி தனது அறிக்கையில் மேற்கோள் காட்டிய புள்ளிவிபரங்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள இணையத்தளத்தில் கிடைக்கின்ற  தரவுகளை நாங்கள் கீழேயுள்ள அட்டவணையில் வழங்கியுள்ளோம்.

கொலைக்குற்றங்கள் தொடர்பில், 2008 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி புள்ளிவிபரங்களைக் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளின் பிரகாரம், 2008 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புள்ளி விபரங்களில் சிறு வேறுபாடு காணப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றது. எனவே, கொலைக்குற்றங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகின்றது என்ற ஜனாதிபதியின் கூற்றை உறுதிப்படுத்த முடிகின்றது.

பாலியல் பலாத்காரம் தொடர்பிலான வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஜனாதிபதி 2012 ஆம் ஆண்டு முதலே தரவுகளை குறிப்பிட்டுள்ளார். இதனை சரி பார்க்கும் போது, பொலிஸ் திணைக்களத்தின் இணையத்தளத்தில் 2012 ஆம் ஆண்டுக்கான குற்றப் புள்ளிவிபரங்கள் இல்லை என்பதனை எங்களால் கண்டறிய முடிந்தது. எனவே ஜனாதிபதியின் தரவுகளை எங்களால் உண்மையில் சரிபார்க்க முடியவில்லை. கொலைக்குற்றங்கள் தொடர்பில்  நாம் சரிபார்த்த காலப்பகுதிக்கு இசைவாக, 2008 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பாலியல் பலாத்காரம் தொடர்பிலான பொலிஸ் திணைக்களத்தின் தரவுகளை நாங்கள் சரிபார்த்தோம். 2008 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியுறும் போக்கு  எதுவும் காணப்படவில்லை என்பதனை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில், 2008 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை  அதிகரிக்கும் போக்கு காணப்படுவதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.  எனவே, கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஜனாதிபதியின் கூற்று ஆதாரம் அற்றது.

இந்த தகவல்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ளும் போது, ஜனாதிபதியின் கூற்றை “ஓரளவு உண்மை’’ என நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்