உதய கம்மன்பில

எரிபொருள் இறக்குமதி செலவினம் குறித்து எரிசக்தி அமைச்சர் கம்மன்பில சரியாகத் தெரிவிக்கிறார்

"

மொத்த இறக்குமதி செலவினத்தில் எரிபொருள் முதன்மையானதாக இருப்பதுடன் அதற்காக 20 சதவீதத்திற்கும் அதிகமாகச் செலவிடப்படுகிறது.

தினமின | அக்டோபர் 1, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் இறக்குமதி தரவை FactCheck.lk ஆராய்ந்தது. எரிபொருள் இறக்குமதி செலவினம் நுகர்வில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. ஏற்ற இறக்கமாக இருக்கும் சர்வதேச விலைகளிலும் தங்கியுள்ளது. ஆகவே 2010 முதல் 2020 வரையான சராசரி எரிபொருள் செலவினத்தை FactCheck.lk கருத்தில் கொண்டது.

2010 முதல் 2020 வரையான சராசரி எரிபொருள் (பெற்றோலியம் மற்றும் நிலக்கரி) இறக்குமதி செலவினம் ஐ.அ.டொ 3,725 மில்லியன் என இலங்கை மத்திய வங்கியின் தரவு சுட்டிக்காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டு தவிர இந்தக் காலப்பகுதியில், வேறு எந்த இறக்குமதி செலவினங்களையும் விட எரிபொருள் இறக்குமதி செலவினம் அதிகமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் புடவை, இயந்திரம் மற்றும் உபகரணம் ஆகியவற்றுக்கான செலவினம் ஐ.அ.டொ 200 முதல் ஐ.அ.டொ 300 மில்லியனுக்கு இடையில் அதிகமாக இருந்தன.

2010 முதல் 2020 வரையில் சராசரி எரிபொருள் செலவினம் மொத்த இறக்குமதி செலவினத்தில் 20% என்பதையும் தரவு காட்டுகிறது. (குறிப்பு: எரிபொருளுக்கான இறக்குமதி செலவினத்தின் பங்கு காலப்போக்கில் குறைந்துள்ளது. 2010 முதல் 2014 வரையில் சராசரி 24% மற்றும் 2015 முதல் 2020 வரையில் 16%).

இலங்கையின் இறக்குமதிகளில் (கடந்த தசாப்தத்தில் பல்வேறு வருடங்களில்) முதன்மையானது எரிபொருள் மற்றும் 2010 ஆம் ஆண்டு முதல் சராசரியைக் கருத்தில் கொள்ளும்போது மொத்த இறக்குமதிகளில் எரிபொருளுக்கான செலவினம் சுமார் 20% என்பதை அமைச்சர் சரியாகத் தெரிவித்துள்ளார். ஆகவே அவரது கூற்றை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.மூலம்

இலங்கை மத்திய வங்கி, வருடாந்த இறக்குமதிகள் தரவு, பார்வையிட, https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector [last accessed 4 November 2021].

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது