கஞ்சன விஜேசேகர

அமைச்சர் விஜேசேகர: ஏற்கனவே மிகைமதிப்பிடப்பட்ட இலங்கை மின்சார சபை நட்டத்தை எதிர்கொண்ட அதி கூடிய நிலைமைகளில் ஒன்றை அமைச்சர் இன்னும் மிகை மதிப்பிடுகிறார்

"

மழை இல்லை எனும் சூழ்நிலையில் எங்களுக்குத் தேவையான நிலக்கரி அனைத்தையும் ஏப்ரல் மாதத்திற்குள் பெற்றுக்கொள்ள முடிந்தால் 24 மணிநேரமும் எந்தவித தடையும் இன்றி எங்களால் மின்சாரத்தை வழங்க முடியும்… அதாவது ஒட்டுமொத்தமாக எங்கள் உற்பத்திச் செலவு ரூ.889 பில்லியன்.

பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 25, 2022

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2022 ஆகஸ்ட்டில் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டபோதும், 2023ம் ஆண்டில் இலங்கை மின்சார சபையின் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையே சுமார் ரூ.489 பில்லியன் பற்றாக்குறை காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக் கொள்கிறது.

இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான எரிசக்தி உற்பத்தித் தேவையை FactCheck.lk ஆராய்ந்தது.

இலங்கை மின்சார சபையின் முன்மொழிவு 12 நிலைமைகளுக்கான மதிப்பீடுகளைச் சமர்ப்பித்துள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). பல்வேறு காரணிகளுடன் இந்த நிலைமைகள் பின்வரும் காரணிகளாலும் வேறுபடுகின்றன அ) மழை வீழ்ச்சியின் அளவு (நீர்மின் உற்பத்திக்கு உதவுகிறது) ஆ) மரபு சாரா மீள்புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு இ) மின்வெட்டின் கால அளவு. இவை அனைத்தும் நட்டத்தையே எதிர்வுகூறுகின்றன.

ஒவ்வொரு நிலைமைகளின் போதும் எதிர்வுகூறப்பட்டுள்ள நட்டம் ரூ.247.8 பில்லியன் முதல் ரூ.423.5 பில்லியன் வரை வேறுபடுகின்றன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). அமைச்சரின் கூற்று நிலைமை A யுடன் ஓரளவு பொருந்திவருகிறது. அதாவது நீர் மின்உற்பத்தி நிலையங்கள், மரபுசாரா மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் ஆகியவற்றின் குறைந்தளவான பங்களிப்புடன் 2023ல் எந்தவித மின்வெட்டும் இன்றி மொத்த தேவையையும் பூர்த்திசெய்ய முடியும்.

இந்த நிலைமைக்காக இலங்கை மின்சார சபை எதிர்வுகூறியுள்ள நட்டத்தை விட அமைச்சர் குறிப்பிடும் நட்டமானது சுமார் 15% உயர்வாக உள்ளது. மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட அதிக நம்பிக்கையற்ற நிலைமையையே (நிகழ்வதற்கான சாத்தியம் மிகக் குறைவு) அமைச்சர் தேர்ந்தெடுத்துக் குறிப்பிடுவதால் இது மேலும் தவறாக வழி நடத்துகிறது.

அமைச்சர் அதி கூடிய நட்டத்தைக் கொண்ட மின்சார சபையின் நிலைமையைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிடுவதுடன் அதனையும் சுமார் 15% மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார். ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

குறிப்பு: இலங்கை மின்சார சபையின் கணக்கீடுகளும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கணக்கீடுகளை விட மிக உயர்வாகவே உள்ளன. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது செலவினங்கள் மற்றும் வருமானங்களின் கணிப்புகளின் துல்லியம் மற்றும் நியாயத்தன்மையை மதிப்பீடு செய்யும் ஒழுங்குபடுத்தும், அதிகாரப்பூர்வ மூலம் ஆகும். டிசம்பர் 2022ல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிக சாத்தியமுள்ள நிலைமையை வெளியிட்டது. இதன் மூலம் ரூ.15 பில்லியன் மட்டுமே இழப்பு ஏற்படும்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: நிலைமைகளின் ஆய்வுக்காக மின்சார சபையால் கருத்தில் கொள்ளப்பட்ட மாறிகள்

அட்டவணை 2: அமைச்சரின் கூற்று Vs. மின்சார சபையின் நிதி கணிப்புகளுக்காக நிலைமைகளின் ஆய்வு

 Additional Note

இலங்கை மின்சார சபையின் கணக்கீடுகளும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கணக்கீடுகளை விட மிக உயர்வாகவே உள்ளன. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது செலவினங்கள் மற்றும் வருமானங்களின் கணிப்புகளின் துல்லியம் மற்றும் நியாயத்தன்மையை மதிப்பீடு செய்யும் ஒழுங்குபடுத்தும், அதிகாரப்பூர்வ மூலம் ஆகும். டிசம்பர் 2022ல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதிக சாத்தியமுள்ள நிலைமையை வெளியிட்டது. இதன் மூலம் ரூ.15 பில்லியன் மட்டுமே இழப்பு ஏற்படும்.


மூலம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சாரக் கட்டண எதிர்வுகூறல் 2023 (டிசம்பர் 21, 2022), பார்வையிட: https://mcusercontent.com/7dec08f7f8b599c6b421dfd10/files/93a36d81-a134-61dd-dba9-9fd8b054cf22/PUCSL.pdf

இலங்கை மின்சார சபை, 2023ம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட உற்பத்தித் தேவை (நவம்பர் 18, 2022), பார்வையிட: https://mcusercontent.com/7dec08f7f8b599c6b421dfd10/files/fb13861f-9819-f047-0580-4137fb3cbf68/Generation_Requirement_for_2023_18.11.2022_R3_CEB.pdf.

பாராளுமன்றத்தில் கஞ்சனவின் உரை:

https://parliament.lk/uploads/documents/hansard/1671428031046367.pdf (பக்கம் 23) https://youtu.be/zG4TgvyK8OY?t=6499

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன