டலஸ் அழகப்பெரும

அமைச்சர் அழகப்பெரும: பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழிற்படையினால் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் கிடைப்பதாக மிகைப்படுத்துகின்றார்.

"

நாட்டின் பொருளாதாரத்திற்கு ஐ.அ.டொலர் 7 பில்லியன் அந்நிய செலாவணியை மிகப்பெருமளவில் பங்களிப்பவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் எமது பெண்கள். இரண்டாவது ஆடை தொழிற்துறை. அவர்கள் ஐ.அ.டொ 5.6 பில்லியனைப் பங்களிக்கின்றார்கள். இது யாருடைய கையில் உள்ளது? எமது சகோதரிகள் கையில் உள்ளது. மூன்றாவது தேயிலை

மவ்பிம | மார்ச் 8, 2021

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு இலங்கை மத்திய வங்கி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் உலக வங்கியின் தரவுகளை FactCheck ஆராய்ந்தது.

(அ) மத்திய கிழக்கில் பணிபுரியும் பணிப்பெண்களினால் ஐ.அ.டொ 7 பில்லியன் அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கின்றது (ஆ) ஆடைத்துறையினால் ஐ.அ.டொ 5.6 பில்லியனும், தேயிலைத் துறையினால் ஐ.அ.டொ 2 பில்லியன் அந்நிய செலாவணியும் கிடைக்கின்றன (இ) ஆடை மற்றும் தேயிலைத் துறை பெண்கள் தொழிற்படையினால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

(அ) முதலாவது கோரலில் அமைச்சர் குறிப்பிடும் மொத்த பணவனுப்பல்கள் சரியானது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கும் பணவனுப்பல்களின் பங்கினை மிகைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் பணவனுப்பல்கள் (சராசரியாக) 3.7 பில்லியன், அமைச்சர் குறிப்பிட்டது போன்று 7 பில்லியன் கிடையாது. அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(ஆ) இரண்டாவது கோரலில் ஆடைத்துறை மூலமாக இலங்கைக்கு கிடைக்கும் நிகர அந்நிய செலாவணி வருமானம் சராசரியாக ஐ.அ.டொ 2,431 மில்லியன். ஐ.அ.டொ 5.6 பில்லியன் வருமானத்தை ஈட்டுவதற்கு முன்னதாக இறக்குமதி காரணமாக அந்நிய செலாவணி வெளிப்பாய்ச்சல் காணப்படுகின்றது. தேயிலை ஏற்றுமதியினால் கிடைக்கும் வருமானம் சுமார் ஐ.அ.டொ 1.4 பில்லியன், இது அமைச்சர் குறிப்பிடும் ஐ.அ.டொ 2 பில்லியனை விடக் குறைவாகும்.

(இ) மூன்றாவது கோரலைப் பொறுத்தவரை, தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வருடாந்த தொழிற்துறை கணக்கெடுப்பின் பிரகாரம் ஆடைத்துறையின் தொழிற்படையில் 70 சதவீதமானவர்கள் பெண்கள். FactCheckகினால் கண்டறிய முடிந்த சமீபத்திய தரவான 2012 ஆம் ஆண்டு உலக வங்கி முன்னெடுத்த மாதிரி கணக்கெடுப்பில் தேயிலைத்துறை பணியாளர்களில் 53 சதவீதமானவர்கள் பெண்கள். ஆகவே இந்தத் துறைகளில் பெண்களின் ஆதிக்கம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிடுவது சரியானது.

தேயிலை மற்றும் ஆடைத் துறைகளில் பெண்களின் ஆதிக்கம் இருப்பதாக அமைச்சர் குறிப்பிடுவது சரியானது. ஆனால் அவரால் மூன்று சந்தர்ப்பங்களிலும் குறிப்பிடப்பட்ட இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு செலாவணி நன்மைகள் தவறாகும். இது அட்டவணை 1ல் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

தகவல்கள் கிடைப்பது கடினமாக உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிற்படையில் பெண்களின் ஆதிக்கம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. (புலம்பெயர் தரவுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகமான ஆண்கள் பணியாளர்களாக செல்வது பதிவுசெய்யப்பட்டுள்ளது).
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



Additional Note



மூலம்

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், ஏற்றுமதிகள், இறக்குமதிகள் மற்றும் வர்த்தகம், ஏற்றுமதிகள் – வருடாந்தம் (1990 இருந்து இன்று வரை) அட்டவணை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/External-Sector [last accessed 5 April 2021]

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், சுற்றுலா மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் வருமானம், தொழிலாளர் பணவனுப்பல்கள் (2009 ஜனவரியிலிருந்து இன்று வரை) அட்டவணை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/External-Sector [last accessed 5 April 2021]

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், ஏற்றுமதிகள், இறக்குமதிகள் மற்றும் வர்த்தகம், இறக்குமதிகள் – வருடாந்தம் (1990 இருந்து இன்று வரை) அட்டவணை, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/External-Sector [last accessed 5 April 2021]

இலங்கை மத்திய வங்கி, பொருளாதார மற்றும் நிதி அறிக்கைகள், ஆண்டறிக்கை 2019, புள்ளிவிபரப் பின்னிணைப்பு, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/publications/other-publications/statistical-publications/economic-and-social-statistics-of-sri-lanka [last accessed 5 April 2021]

இலங்கை மத்திய வங்கி, வெளியீடுகள், பிற வெளியீடுகள், புள்ளிவிபர வெளியீடுகள், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபர அறிக்கை – 2020, பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/publications/other-publications/statistical-publications/economic-and-social-statistics-of-sri-lanka [last accessed 11 April 2021]

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், புள்ளிவிபரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருடாந்த புள்ளிவிபர அறிக்கை – 2018, பார்வையிட: Annual Statistical Report of Foreign Employment – 2018

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், தொழிற்துறை, வருடாந்த கணக்கெடுப்புக்கள், தொழிற்துறை வருடாந்த கணக்கெடுப்பு – 2018, பார்வையிட: http://www.statistics.gov.lk/Industry/StaticalInformation/AnnualSurveys/2018 [last accessed 5 April 2021]

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், தொழிற்படை, ஆண்டறிக்கைகள், இலங்கை தொழிற்படை கணக்கெடுப்பு ஆண்டறிக்கை 2018, பார்வையிட: http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/AnnualReports/2018 [last accessed 5 April 2021]

உலக வங்கி குழுமம், தகவல் களஞ்சியம், பணிக்குத் திரும்புதல்: இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் திறன்களைக் கண்டறிதல் (2020) அறிக்கை, பார்வையிட: https://openknowledge.worldbank.org  [last accessed 27 April 2021]

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன