Patali Champika Ranawaka பாட்டலி சம்பிக்க ரணவக்க

எரிபொருள் தொடர்பில் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துவதால் ரணவக்க தவறான கருத்தை வெளியிடுகின்றார்

"

(அவர்கள்) எரிபொருள் விலையைக் குறைப்பார்கள், வரிகளை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் என்ற கூற்றை தேர்தல் மேடைகளில் கேட்டோம். […] உண்மையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்டேன் 92 பெற்றோல் நாட்டிற்கு ரூ.195க்கு கொண்டுவரப்பட்டது. அதேபோன்று, டீசல் சுமார் ரூ.200க்கு கொண்டுவரப்பட்டது.

டெய்லி மிரர் ஒன்லைன் | அக்டோபர் 2, 2024

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி) …புதிய விலைகளின் பிரகாரம் கணக்கிட்டால் கூட, ஒரு லீற்றர் பெற்றோலுக்கு ரூ.117 உம் ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ.83 உம் வரியாக அறவிடப்படுகின்றது.”

எரிபொருட்களின் விலைகள் மற்றும் வரிகள் குறைக்கப்படும் என தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதும் அது நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவர் தனது கூற்றுக்கு வலுச்சேர்க்க, எரிபொருட்களின் சந்தை மற்றும் இறக்குமதி விலைகளுக்கு இடையேயான வித்தியாசத்தை மேற்கோள் காட்டுவதுடன் இந்த வித்தியாசத்தை வரிகள் எனக் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, PublicFinance.lk இன் எரிபொருள் விலைக் கண்காணிப்பானை FactCheck.lk ஆராய்ந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று இரண்டு காரணங்களால் தவறாகும்.

முதலாவது, அவரது கணக்கீட்டில் சந்தை விலையிலிருந்து இறக்குமதி விலையைக் கழிப்பதன் மூலம் வரி பெறப்படுகின்றது. எனினும் இந்த இரண்டு விலைகளுக்கும் இடையிலான வேறுபாடு வரிகளை மட்டும் கொண்டிருக்கவில்லை.  சேமிப்பு, போக்குவரத்து மற்றும் சில்லறை விற்பனை உட்பட எரிபொருள் விநியோகத்துடன் தொடர்புடைய ஏனைய செலவுகளையும் கொண்டிருக்கின்றது.

 

 

 

 

2018 ஆம் ஆண்டில் நிதி அமைச்சு செலவை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தை வெளியிட்டது. இதில் ஏனைய செலவுகளும் வரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் அக்டோபர் மாதத்திற்கான உண்மையான வரிகள் பெற்றோல் மற்றும் டீசலுக்கு முறையே ரூ.124.6 மற்றும் ரூ.93.9 ஆக உள்ளது. சூத்திரத்தில் பயன்படுத்தப்பட்டதை விட அதிகமான இறக்குமதிச் செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏனைய செலவுகளைக் கவனத்தில் கொள்ளாத தனது கணக்கீட்டு முறையைப் பயன்படுத்தி, உண்மையான செலவுகளில் இருந்து கணக்கிடப்பட்ட உண்மையான வரியை விடக் குறைவான வரியைக் கணக்கிட்டுள்ளார்.

இரண்டாவது, எரிபொருள் மீதான வரிக் கட்டமைப்பு சட்டத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இது உத்தியோகபூர்வமாக மாற்றப்படவில்லை. எனினும் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் முறையே ரூ.21 மற்றும் ரூ.18 ஆல் குறைக்கப்பட்டுள்ளதை எரிபொருள் விலை கண்காணிப்பான் காட்டுகின்றது

இந்தக் குறைப்பின் ஒரு பகுதி இரண்டு வழிகளில் செலவு குறைவதால் ஏற்படுகின்றது. (1) பெற்றோல் மற்றும் டீசலுக்கான சிங்கப்பூர் பிளாட்ஸ் விலை முறையே ரூ.11.1 மற்றும் ரூ.14 ஆல் குறைக்கப்பட்டதால் இறக்குமதிச் செலவில் ஏற்பட்ட வீழ்ச்சி (2) இறக்குமதிச் செலவின் சதவீதமாக பெறுமதி சேர் வரி கணக்கிடப்படுவதால் மொத்த வரியில் ஏற்பட்ட வீழ்ச்சி. எனினும் அட்டவணை 1 இல் காட்டப்பட்டது போன்று விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்த செலவினக் குறைப்புகளின் மொத்தத்தை விட அதிகமாகும்.

ஆகவே, விலை மற்றும் வரி குறைக்கப்படவில்லை என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று இரண்டு வழிகளில் தவறானதாகும். முதலாவது, செலவில் ஏற்பட்ட குறைப்பை விட அதிகமாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, குறைக்கப்பட்ட இறக்குமதிச் செலவு மீதான குறைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மூலம் வரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதிச் செலவு என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகளின் அடிப்படையிலான வரிகள் தொடர்பான அவரது கணக்கீடும் தவறானது.

எனவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகின்றோம்.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: செப்டெம்பர் 2024 முதல் அக்டோபர் 2024 வரை எரிபொருள் விலையில் ஏற்பட்ட மாற்றம்



மூலம்

எரிபொருள் விலைக் கண்காணிப்பான், PublicFinance.lk, வெரிட்டே ரிசர்ச்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன