FactCheck.lk ஆனது அதன் நன்கு ஆய்வு செய்யப்பட்ட உண்மைச் சரிபார்ப்புகளை செய்வதற்கு, ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய ஒரு பெரிய குழுவுடன் இணைந்து செயல்படுகிறது. எங்கள் குழுவின் முக்கிய உறுப்பினர்கள்:
This post is also available in: English සිංහල தமிழ்

நிஷான் டி மெல்
தலைமை ஆசிரியர்
நிஷான் வெரிடே ரிசர்ச்சின் நிர்வாக இயக்குநராக இருப்பதுடன் FactCheck.lk க்கு இறுதி அனுமதியை வழங்குகிறார். இவர் கல்வி, கொள்கை மற்றும் தனியார் துறை தொடர்பில் விசாலமான அனுபவம் கொண்ட ஒரு பொருளாதார நிபுணராவார். நிஷான் ஓக்ஸ்போர்ட் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் கற்பித்ததுடன் ஆராய்ச்சி செய்தார். 1990 களில், அவர் இலங்கையில் பல ஜனாதிபதி செயலணிகளில் பங்கேற்று, சுகாதாரத் துறை சீர்திருத்தம், சமூக பாதுகாப்பு மற்றும் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய கொள்கைகளை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்கை வகித்தார். இனக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் மற்றும் இலங்கை அறக்கட்டளை நிறுவனம் ஆகியவற்றின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் பல தனியார் துறை அவைகளில் பங்கேற்பதுடன் பிராந்தியத்தின் சில பெரிய நிறுவனங்களுக்கு ஒரு மூலோபாயவாதியாக தொடர்ந்து ஆலோசனை வழங்குகின்றார்.

தெஷால் டி மெல்
சிரேஷ்ட ஆசிரியர் மற்றும் ஆய்வாளர்
தெஷால் வெரிடே ரிசர்ச்சில் ஒரு ஆராய்ச்சி இயக்குநராக உள்ளதுடன் FactCheck.lk இன் ஆலோசகராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். அவர் அரச, தனியார் துறை மற்றும் கல்வித்துறையில் அனுபவமுள்ள ஒரு பொருளாதார நிபுணராவார் . இவர் 2017 முதல் 2019 வரை இலங்கையின் நிதி அமைச்சின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியதுடன், வரி சீர்திருத்தங்கள் மற்றும் பிற பொது நிதி விவகாரங்களில் பணியாற்றினார். அவர் தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினராக இருந்து, வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, சிங்கப்பூருடனான சேவைகளில் இலங்கையின் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்தார். இலங்கையின் மிகப்பெரிய பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Hayleys குழுமத்தில் மூத்த பொருளாதார நிபுணராக முன்னர் பணியாற்றினார். தற்போது சம்பத் வங்கி, மற்றும் முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வறுமை பகுப்பாய்வு மையம் உட்பட பல பெருநிறுவன மற்றும் பெருநிறுவனங்கள் அல்லாத நிறுவனங்களின் உயர் சபைகளில் பணியாற்றியுள்ளார். இவர் 2018-2019 இல் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் இருந்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டமும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2019 இல் உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.

விரான் கொரியா
சட்ட ஆலோசகர்
விளக்கம்: விரான் கொரியா வெரிடே ரிசர்ச் நிறுவனத்தில் ஒரு ஆராய்ச்சி பங்காளியாக மற்றும் FactCheck.lk க்கான சட்ட அறிக்கைகளை பகுப்பாய்வு செய்வதற்கான ஆலோசகராக பணியாற்றுகிறார். முக்கியமாக இலங்கையின் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் அவருக்கு விரிவான வழக்கு அனுபவம் உள்ளது. விரான் பொதுச் சட்டம், அரசியலமைப்பு சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர், மேலும் இத்துறைகளில் பல முக்கிய வழக்குகளில் தோன்றியுள்ளார். விரான் சட்ட நிபுணராக பொதுத்துறை அனுபவத்தைக் கொண்டவர், பல வருடங்களாக இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாகப் பணியாற்றியுள்ளார். அவர் அரச நிறுவனங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கும், தனியார் துறையினருக்கும் வழக்குகளில் ஆலோசனை வழங்கியதுடன் பிரதிநிதித்துவம் செய்துள்ளார். விரான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.எம். பட்டங்களைப் பெற்றுள்ளது ஒரு சட்டத்தரணியாவார்.

தீபாஞ்சலி அபேவர்தன
சிரேஷ்ட நிர்வாகி
விளக்கம்: தீபாஞ்சலி வெரிடே ரிசர்ச்சின் ஊடக ஆய்வுக் குழுவின் தலைவராக உள்ளதுடன் FactCheck.lk குழுவின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகிறார். ஊடக நெறிமுறைகள், ஊடக நடத்தை மற்றும் ஊடகங்கள் மற்றும் பெண்கள் ஆகியவற்றில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. அத்துடன், இவர், அவர் நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் ஃப்ரிபர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்புகளின் மூலம் முரண்பாடு- தீர்வு மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் அனுபவம் பெற்றவர். தீபாஞ்சலி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் கலைமாணி (BA) பட்டமும், இந்தியாவின் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தெற்காசியக் கற்கைகளில் முதுகலைமாணி (MA) பட்டமும் பெற்றார். இவர், அங்கு மதன்ஜீத் சிங் புலமைப்பரிசில் முதுகலைமாணி படிப்பை மேற்கொண்ட முதல் இரண்டு இலங்கையர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீபாஞ்சலி, இலங்கை ஊடகங்கள், ஊடக உரிமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதில், ஊடகங்களின் பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் பரந்த அளவிலான உள்ளூர் மற்றும் சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் ஊடக பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மஹோஷதி பீரிஸ்
முகாமையாளர்
FactCheck.lk இன் நிர்வாகக் குழுவை மஹோஷதி வழிநடத்துகிறார். இவர், ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகப் பணிகள் உட்பட உண்மைச் சரிபார்ப்பு செயல்முறையை மேற்பார்வையிட்டு நிர்வகிக்கின்றார். வெரிடே ரிசர்ச்சில் ஊடகக் குழுவில் ஆய்வாளராகப் பணிபுரிகிறார். FactCheck.lk இன் தயாரிப்பு உரிமையாளராக இருப்பதுடன், சிங்கள மொழிப் பத்திரிகைகளில் ஒவ்வொரு வாரமும் விவாதிக்கப்படும் முக்கியமான சமூக-அரசியல் பிரச்சினைகளின் சுருக்கமான பகுப்பாய்வு மற்றும், ஊடகப் பகுப்பாய்விற்கு இவர் பங்களிப்துடன், இலங்கையில் வன்முறை மற்றும் போலித் தகவல் தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொள்கின்றார். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் (மேல்) பிரிவில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

ரத்திகா பெர்னாண்டோ
உதவி முகாமையாளர்
விளக்கம்: நிர்வாக வேலை, தகவல் தொடர்பு மற்றும் சிங்கள உள்ளடக்கத்தை மேற்பார்வை செய்தல், உள்ளடங்கலாக FactCheck.lk செயல்முறையை மேற்பார்வையிடுவதற்கும் நிர்வகிப்பதற்கும் ரத்திகா பங்களிப்புச் செய்கின்றார். வெரிடே ரிசர்ச்சில் ஆராய்ச்சி முகாமையாளராகப் பணிபுரிகிறார். ரத்திகா பல பணிகள் மற்றும் ஆய்வுகளுக்கு தலைமை தாங்கியுள்ளார், மேலும் வெரிட்டேயில் ஊடகம் தொடர்பான ஆராய்ச்சிக்கு பங்களிக்கிறார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியலில் B.Sc (Hons) பட்டம் பெற்றுள்ளார்.

மதிஷ அரங்கல
ஆய்வாளர்
மதிஷ, வெரிடே ரிசர்ச்சின் பொருளாதார குழுவில் ஒரு ஆய்வாளராக இருப்பதுடன் FactCheck.lk இல் ஆய்வாளராக பணியாற்றுகிறார். வெரிடே ரிசர்ச்சில் இவர் வர்த்தக வசதி, வர்த்தகக் கொள்கை சீர்திருத்தம், ஏற்பாட்டியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பகுதிகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். மலேசியா மொனாஷ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், வங்கியியல் மற்றும் நிதியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளதுடன், சர்வதேச உறவுகளுக்கான பண்டாரநாயக்க நிறுவனத்தில் (BCIS) சர்வதேச உறவுகளில் உயர் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார்.

ஹஸ்னா முனாஸ்
ஆய்வாளர்
ஹஸ்னா வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தில் முன்னாள் சிரேஷ்ட ஆய்வாளராகப் பணியாற்றியதுடன் தற்போது FactCheck.lk இன் ஆய்வாளராக பணியாற்றுகிறார். அவர் தற்போது சிங்கப்பூரில் உள்ள லீ குவான் யூ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பொலிசியில் பொதுக் கொள்கையில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். வெரிட்டே இல், இவர் இலங்கையின் வர்த்தகம், அரசியல் மற்றும் பேரண்டப் பொருளாதாரம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய பல தலைப்புகளில் தலைமை தாங்கி ஆய்வுகளை நடத்தியுள்ளார். இவர் இளங்கலை மட்டத்தில் புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் பற்றிய படிப்புகளையும் கற்பித்துள்ளார். ஹஸ்னா LSE இலிருந்து கணிதம் மற்றும் பொருளாதாரத்தில் BSc பட்டம் பெற்றவர்.

அனிஷா டயஸ் பண்டாரநாயக்க
ஆய்வாளர்
விளக்கம்: அனிஷா வெரிடே ரிசர்ச் நிறுவனத்தில் முன்னாள் உதவி ஆய்வாளராகாப் பணியாற்றியதுடன் தற்போது FactCheck.lk இன் ஆய்வாளராக பணியாற்றுகிறார். அவர் தற்போது நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைக் கற்கை நெறியைப் படித்து வருகிறார். வெரிட்டேயில், ஊடக கருத்துப்போக்கு மற்றும் தவறான தகவல் உட்பட ஊடகம் தொடர்பான ஆராய்ச்சியின் பல பகுதிகளில் அவர் தலைமை தாங்கி ஆராய்ச்சி நடத்தியுள்ளார். அவர் பிரவுன் பல்கலைக்கழகத்தின் கௌரவத்துடன் மொழியியல் மற்றும் இலக்கியக் கலைகளில் கலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார்.

புமுதிகா அமரசேகர
ஆய்வாளர்
விளக்கம்: புமுதிகா வெரிடே ரிசர்ச்சில் பொருளாதாரக் குழுவில் ஒரு ஆய்வாளராகவும் FackCheck.lk இல் பகுப்பாய்வாளராகவும் பணியாற்றுகிறார். அவர் தற்போது இலங்கையில் பொது நிதி தொடர்பான தகவல்களுக்கான தளமான வெரிடே ரிசர்ச் ஆல் நிர்வகிக்கப்படும் PublicFinance.lk தளத்தின் ஆராய்ச்சி தலைவராக பணியாற்றுகிறார். அவர் இதற்கு முன்னர் இலங்கையின் Asiri Hospital Holdings மற்றும் Softlogic BPO, இலங்கையில் வணிக நுண்ணறிவு மற்றும் இணக்கம் ஆகியவற்றில் உதவி முகாமையாளராகவும், இலங்கையின் Durdans Hospitals இல் துணை குழு முகாமைத்துவ கணக்காளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் பிரித்தானியாவின் ரொபர்ட் கோர்டன் பல்கலைக்கழகத்தில் வணிக பகுப்பாய்வுகளில் MSc பட்டமும், பிரித்தானியாவின் ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் வேல்ஸில் இருந்து வணிக முகாமைத்துவப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் CGMA (பட்டய உலகளாவிய முகாமைத்துவ கணக்காளர்) மற்றும் ACMA (இணைப்பட்ட பட்டய முகாமைத்துவ கணக்காளர்) உறுப்பினராக உள்ளார்.

உவீன் ஜெயசிங்க
ஆய்வாளர்
விளக்கம்: உவீன் ஒரு வழக்கறிஞர். இவர் வெரிட்டே ரிசர்ச் இல் ஒரு ஆய்வாளராகவும் FactCheck.lk இன் சட்ட ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். பொதுச் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகிய துறைகளில் ஆலோசகராகவும் வழக்கறிஞராகவும் இவர் நடைமுறையில் உள்ளார். இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல் தொடர்பான இடர்/இடைவெளி பகுப்பாய்வு, ஒழுங்குமுறை அதிகாரிகளுடனான பொது ஈடுபாடு, நீதிக்கான அணுகல், சுற்றுச்சூழல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கம் மற்றும் வர்த்தகம்/முதலீட்டாளர் நட்புறவு போன்ற பல்வேறு சட்ட மற்றும் கொள்கைப் பணிகளில் அவர் பணியாற்றியுள்ளார். உவீன், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்தில் சட்டப் கலைமாணி பட்டம் பெற்றவர்.