திருத்தங்கள் கொள்கை

அறிக்கை ஒன்று நியாயமற்றதாகவோ அல்லது தவறாகவோ மதிப்பிடப்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், தயவுசெய்து எங்களுக்கு அறியத் தாருங்கள். எதிர்வாதம் அல்லது மேலதிக தகவல்கள்/மாறுபட்ட ஆதாரங்களை எங்களுக்கு அளித்தால், எங்கள் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டினை மறுபரிசீலனை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். திருத்தங்களை மேற்கொள்வதில் எங்களுடைய கொள்கைகளை கீழே வழங்கியுள்ளோம்:

  1. மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிழைகள்: அறிக்கையின் மதிப்பீட்டினை அத்துடன்/அல்லது உண்மை சரிபார்ப்பின் முழுமையான பார்வையினை மாற்றக்கூடிய கடுமையான தவறு உடனடியாக சரிசெய்யப்படும். மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உரிய உண்மை சரிபார்ப்புக்களின் மேற்பகுதியில் “திருத்தம் மற்றும் புதுப்பிப்புக்கள்” எனக் குறிப்பிடப்படுவதுடன், திருத்தப்பட்ட திகதியுடன், திருத்தத்திற்கான விளக்கமும் வழங்கப்படும். தவறான உண்மைச் சரிபார்ப்பு திருத்தப்பட்ட தரவுகள்/உண்மைகளை பிரதிபலிக்கும் வகையில் மாற்றப்படுவதுடன், திருத்தப்பட்ட அடையாளத்தின் கீழ் சேர்க்கப்படும். மேலதிகமாக, எதிர்கால தேவைகளுக்காக, பழைய உண்மைச் சரிபார்ப்பின் காப்பகப்படுத்தப்பட்ட பிரதி விளக்கத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.
  2. மதிப்பீட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பிழைகள்: அறிக்கையின் மதிப்பீட்டினை அத்துடன்/அல்லது உண்மை சரிபார்ப்பின் முழுமையான பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தாத உண்மைகள் அல்லது தரவுகளில் உள்ள பிழைகள் சரிசெய்யப்படுவதுடன், உண்மைச் சரிபார்ப்பின் கீழ் “திருத்தம்” எனக் குறிப்பிட்டு, மாற்றப்பட்ட திகதியுடன், மாற்றத்துக்கான விளக்கமும் வழங்கப்படும்.
  3. செல்லுபடியாகாத உண்மைச் சரிபார்ப்புக்கள்: அறிக்கையிடுவதில் ஏற்பட்ட தவறு, அறிக்கையினை புரிந்து கொள்வதில் அல்லது விளக்குவதில் ஏற்பட்ட தவறின் வெளிப்பாட்டால், ஏற்கனவே வெளியிடப்பட்ட உண்மைச் சரிபார்ப்பு செல்லுபடியாகாமல் போனால் அது திருத்தப்படுவதுடன், “செல்லுபடியற்றது” என உரிய உண்மைச் சரிபார்ப்புக்கு மேலே வகைப்படுத்தப்படும். மேலதிகமாக, திருத்தப்பட்ட அடையாளத்தின் கீழே திகதி மற்றும் மாற்றத்துக்கான விளக்கமும் வழங்கப்படும். எதிர்காலத் தேவைகளுக்காக செல்லுபடியற்ற உண்மைச் சரிபார்ப்பு விளக்கத்தின் கீழே பாதுகாக்கப்படும்.
  4. இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள்: ஏதாவது இலக்கண, எழுத்து மற்றும் வேறு சிறு தவறுகள் எங்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் திருத்தங்களாகக் குறிப்பிடாமல் உடனடியாக அவை சரிசெய்யப்படும்.
  5. புதுப்பிப்புக்கள் மற்றும் விளக்கக் குறிப்புக்கள்: காலத்துக்கு காலம், உண்மைச் சரிபார்ப்புடன் தொடர்புடைய சமீபத்திய தரவுகள் அல்லது உண்மைகளை பிரதிபலிக்கும் வகையில் FactCheck குழு புதுப்பிப்பதுடன், விளக்கக் குறிப்புக்களையும் வழங்கும். அவ்வாறான ஏதாவது மாற்றங்கள் “புதுப்பிப்புக்கள்” என்பதின் கீழ் வகைப்படுத்தப்படுவதுடன், விளக்கம் மற்றும் மாற்றப்பட்ட திகதியுடன் உண்மைச் சரிபார்ப்பின் கீழ் பகுதியில் இடம்பெறும்.

உங்களிடம் ஏதாவது கேள்விகள் அல்லது பொருத்தமான தகவல்கள் இருந்தால், தயவுசெய்து அவற்றை factcheck@veriteresearch.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.

This post is also available in: English සිංහල தமிழ்