தெஷால் டி மெல்
தெஷால் வெரிடே ரிசர்ச்சில் ஒரு ஆராய்ச்சி இயக்குநராக உள்ளதுடன் FactCheck.lk இன் ஆலோசகராகவும் ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார். அவர் அரச, தனியார் துறை மற்றும் கல்வித்துறையில் அனுபவமுள்ள ஒரு பொருளாதார நிபுணராவார் . இவர் 2017 முதல் 2019 வரை இலங்கையின் நிதி அமைச்சின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியதுடன், வரி சீர்திருத்தங்கள் மற்றும் பிற பொது நிதி விவகாரங்களில் பணியாற்றினார். அவர் தேசிய வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினராக இருந்து, வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, சிங்கப்பூருடனான சேவைகளில் இலங்கையின் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்தார். இலங்கையின் மிகப்பெரிய பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான Hayleys குழுமத்தில் மூத்த பொருளாதார நிபுணராக முன்னர் பணியாற்றினார். தற்போது சம்பத் வங்கி, மற்றும் முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வறுமை பகுப்பாய்வு மையம் உட்பட பல பெருநிறுவன மற்றும் பெருநிறுவனங்கள் அல்லாத நிறுவனங்களின் உயர் சபைகளில் பணியாற்றியுள்ளார். இவர் 2018-2019 இல் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் இருந்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டமும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 2019 இல் உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார்.