ரணில் விக்கிரமசிங்க

வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

"

எமது நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 37 பில்லியன். எனினும் இந்த நபர் (சமூக ஊடகத்தில் பதிவிட்டவர்) தவறான பெறுமதியைக் குறிப்பிடுகிறார்… (அவர்) கடந்த இரண்டாண்டுகளில் நாங்கள் (ஐ.அ.டொ 71 பில்லியனில் இருந்து) (ஐ.அ.டொ) 100 பில்லியன் வரை கடனாகப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். எனினும் கடன்களைத்

பாராளுமன்ற YouTube பக்கம் | ஜூலை 2, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 71 பில்லியனில் இருந்து ஐ.அ.டொ 100 பில்லியனாக அதிகரித்துள்ளது என சமூக ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளித்த அவர், (1) மொத்த வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 37 பில்லியன், ஐ.அ.டொ 100 பில்லியன் அல்ல (2) இலங்கை கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் இலங்கைக்கு கடன்களை வழங்க எந்தவொரு நாட்டிற்கும் சட்டரீதியான உரிமை இல்லை எனவும் அதனால் இலங்கை வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கு எந்த வழியும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, நிதி அமைச்சின் ஆண்டறிக்கைகள், அரையாண்டு அறிக்கைகள் மற்றும் பொதுப் படுகடன் திரட்டுக்களை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: மார்ச் 2024 இல் மொத்த வெளிநாட்டுக் கடன் ஐ.அ.டொ 37 பில்லியன் என்பதை பொதுப் படுகடன் திரட்டு வெளிப்படுத்துகிறது. இது ஜனாதிபதி மேற்கோள் காட்டிய பெறுமதியுடன் பொருந்துகிறது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). சமூக ஊடகப் பதிவில் மொத்தப் பொதுப்படுகடனின் பெறுமதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதில் உள்நாட்டுக் கடன்களும் அடங்கும். மொத்தப் பொதுப்படுகடன் ஐ.அ.டொ 70.9 பில்லியனாக (உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்கள் தவிர்த்து) செப்டெம்பர் 2022 ஆம் ஆண்டு காணப்பட்டது. இது மார்ச் 2024 இல் ஐ.அ.டொ 100.1 பில்லியனாக (உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்கள் உட்பட) உயர்ந்தது.

கூற்று 2: கடன் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியாமல் போன பின்னரும் (இந்தியாவின் கிரடிட் லைன் தவிர்த்து, இது குறித்து ஜனாதிபதி தனது பதிலில் தனியாகக் குறிப்பிட்டுள்ளார்) இலங்கையால் இரண்டு மூலங்களிலிருந்து வெளிநாட்டுக் கடன்களைப் பெற முடிந்தது: பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நாடுகள். பெறப்பட்ட மொத்தத் தொகை (இந்தியாவைத் தவிர்த்து) சுமார் ஐ.அ.டொ 3.4 பில்லியன் ஆகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). அதில் ஐ.அ.டொ 104 மில்லியன் கடந்த மற்றும் புதிய கடன்களின் இருதரப்பு வழங்கல்களிலிருந்து கிடைக்கப்பெற்றது. குறைந்தது ஐ.அ.டொ 10 மில்லியன் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்திடமிருந்து கிடைக்கப்பெற்ற புதிய கடன்கள் ஆகும்.

மொத்தத்தில், மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 37 பில்லியன் என்பதை ஜனாதிபதி சரியாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் வெளிநாட்டுக் கடன்களை அதிகரிக்க முடியாது என்பதுடன், அதற்குக் காரணமாக அவர் குறிப்பிடுவது இரண்டு விடயங்களில் தவறாக உள்ளது. முதலாவது, வெளிநாட்டுக் கடன்கள் பலதரப்பு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் மூலம் அதிகரித்துள்ளன. இரண்டாவது, கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னர் எந்த நாடும் இலங்கைக்குக் கடன் கொடுக்க சட்டரீதியான உரிமை இல்லை என்பது முரண்படுகிறது. இந்தியா தவிர ஏனைய நாடுகள் தொடர்ந்தும் கடன் கொடுத்ததுடன் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னர் இலங்கையுடன் புதிய கடன்களில் கைச்சாத்திட்டுள்ளன.

எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு 1: கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதன் பின்னரான காலப்பகுதியில் (ஏப்ரல் 2022 – மார்ச் 2024) இலங்கை ஐ.அ.டொ 4.1 பில்லியன் தேறிய வெளிநாட்டுக் கடன் வழங்கல்களைப் பெற்றிருக்கிறது (சர்வதேச நாணய நிதியத்தின் ஐ.அ.டொ 0.7 பில்லியன் உட்பட). மேலும் ஐ.அ.டொ 2.0 பில்லியன் கடன்களைத் திருப்பிச் செலுத்தியிருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டுக் கடன்களில் ஐ.அ.டொ 35 பில்லியனில் இருந்து ஐ.அ.டொ 37 பில்லியன் தேறிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

 

அட்டவணை 1: வெளிநாட்டுக் கடன்களின் மொத்த வழங்கல்கள்

பெறுமதிகள் ஐ.அ.டொ  மில்லியனில் இருதரப்பு பலதரப்பு மொத்தம்
மே – டிசம்பர் 2022 616

o/w India = 549

807 1,423
2023 முழு ஆண்டு 176

o/w India = 143

2,334 2,510
ஜனவரி – ஏப்ரல் 2024 3 149 153
மொத்தம் 795 3,291 4,086
இந்தியா தவிர்த்து மொத்தம் 104 3,291 3,395

 



மூலம்

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன