தினேஷ் குணவர்த்தன

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது குறித்து தினேஷ் குணவர்த்தன சரியாக தெரிவிக்கின்றார்.

"

2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைத்த வருமானம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இது அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9% ஆகும்.

திவயின | ஜூன் 9, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியத்தை அமைப்பது தொடர்பில், 2020 ஜுன் 09 ஆம் திகதி திறன்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளார். இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு FactCheck இலங்கை மத்திய வங்கியின் 2019 ஆண்டறிக்கையில் உள்ள 2015 – 2019 காலப்பகுதிக்குரிய வெளிநாட்டுப் பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிதி தொடர்பான தரவினை ஆராய்ந்தது.

கோவிட் – 19 பெருந்தொற்றினை அடுத்து குறிப்பிடத்தக்க எணணிக்கையிலான பணியாளர்கள் வெளிநாடுகளிலிருந்து முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் பின்னணியில் குணவர்த்தன இந்தக் கூற்றினை தெரிவித்துள்ளார்.  2015 – 2019 காலப்பகுதியில் பணியாளர்களினால் அனுப்பப்பட்ட நிதியில் 50 வீதத்திற்கும் அதிகமானவை மத்திய கிழக்கில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்பட்டது என்பதை இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2018 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14,366,103 மில்லியன் ரூபா ஆகும். பணியாளர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட நிதியான 1,138,124 மில்லியன் ரூபா (7,015 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9 வீதமாகும் (அட்டவணை 1). இது 2015 முதல் 2019 வரையான தரவுகளுடன் ஒத்துப்போகின்றது. இந்தக் காலப்பகுதியில் அனுப்பிவைக்கப்பட்ட நிதியானது 950,000 மில்லியன் ரூபா முதல் 1,200,000 மில்லியன் ரூபா வரை உள்ளதுடன், அந்தக் காலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.9% முதல் 8.8% வரை காணப்படுகின்றது.

எனவே நாங்கள் அமைச்சரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

  • இலங்கை மத்திய வங்கி, 2019 ஆண்டறிக்கை, புள்ளிவிபர பின்னிணைப்பு, அட்டவணை 93, சிறப்பு புள்ளிவிபர பின்னிணைப்பு, அட்டவணை 2
  • இலங்கை மத்திய வங்கி, 2019 ஆண்டறிக்கை, புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 93