உண்மைச் சரிபார்ப்புகளும்
இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்காக, துறை வாரியான வேலை வாய்ப்பு மதிப்பீடுகளை வழங்கும், கிடைக்கக்கூடிய சமீபத்திய தொழிற்படை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை (LFS) FactCheck ஆராய்ந்தது. 2014 - 2018 காலப்பகுதியில் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்ட சராசரி தொழிற்படை 27.3% ஆகும். 2018 ஆம் ஆண்டில் 25.5 சதவீதமாகவும், 2014 ஆம் ஆண்டில் 28.9% என்ற உயர்வுடனும் காணப்படுகின்றது. இந்த சதவீதத்தில் முறைசாரா துறையைச் சார்ந்த தொழிலாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 40 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 27.3% என்பது மிகவும் குறைவாகும்.குறித்த காலப்பகுதியில் விவசாயத்தை இரண்டாம் நிலை தொழிலாக 2.5 சதவீதமானவர்கள் கொண்டுள்ளதாக தொழிற்படை கணக்கெடுப்பு புள்ளிவிபரம் குறிப்பிடுகின்றது. ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொழில்களைக் குறிப்பிடுவதாக இருந்தாலும், விவசாயப் பணியில் உள்ளவர்களின் ஐந்தாண்டுக்கான சராசரி 29.8% மாத்திரமே ஆகும் - இது அவர் குறிப்பிடும் 40 சதவீதத்தை விடக் குறைவாகும்.
ஆகவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோ