அஜித் நிவாட் கப்ரால்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கப்ரால் கோவிட் – 19 செலவினங்கள் தொடர்பாகத் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

கோவிட் – 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் ரூ.700 பில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டுள்ளது. இது கடந்த வருடம் நாட்டின் மொத்த வருமானத்தில் சரியாகப் பாதியளவான தொகை ரூ.1,380 பில்லியன் ஆகும்… குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்கான சமுர்த்தி கொடுப்பனவுகள

டெய்லி நியூஸ் | ஆகஸ்ட் 30, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

சமூக மற்றும் தொடர்புடைய செலவினங்களுக்கு அரசாங்கம் செலவிட்ட தொகை குறித்த விபரங்கள் மற்றும் கோவிட் – 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் நிவாரண நடவடிக்கைகளுக்காகவும் செலவிடப்பட்ட ரூ.700 பில்லியன் குறித்த தகவல்களையும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் அறிக்கை குறிப்பிடுகிறது. (டெய்லி நியூஸ் தலைப்புச் செய்தி: கோவிட்டைக் கட்டுப்படுத்த ரூ.700 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது).

கோவிட் – 19 செலவினங்களுக்கான தொகை குறித்த இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு நிதியமைச்சின் ஆண்டறிக்கையிலுள்ள தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் சமூக மற்றும் தொடர்புடைய அரச செலவினங்களின் தொகை, 2020 ஆம் ஆண்டுக்குரிய அந்தந்தப் பிரிவுகளுக்கான செலவினங்களுடன் நெருங்கிப் போகிறது (அட்டவணை 1ஐப் பார்க்கவும்). எனினும் நிதியமைச்சின் பிரகாரம் கோவிட் – 19 தொடர்பான செலவினங்களுக்கு ரூ.171 பில்லியன் (2020 ஆம் ஆண்டில் ரூ.118 பில்லியன், ஜனவரி முதல் யூன் 2021 வரை ரூ.53 பில்லியன்) மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.  முன்னாள் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் மீதமுள்ள ரூ.529 பில்லியன் அரசாங்கத்தின் வழமையான செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கோவிட் – 19 பெருந்தொற்றுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டின் அரச செலவினங்களைப் போன்றது.

அமைச்சர் வழங்கிய செலவினத் தொகைகள் ஓரளவு சரியாக இருந்தாலும் கோவிட் – 19 காரணமாக ஏற்பட்ட செலவினங்கள் ரூ.700 பில்லியன் எனக் குறிப்பிட்டது பாரிய தொகையினால் தவறாக உள்ளது. நிதியமைச்சின் உத்தியோகப்பூர்வக் கணக்குகள் இந்தச் செலவினத்தை ரூ.171 பில்லியன் என மட்டுமே குறிப்பிடுகிறது.

ஆகவே முன்னாள் இராஜாங்க அமைச்சரின் கூற்றை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

வெரிட்டே ரிசேர்ச்சின் தளங்களில் ஒன்றான PublicFinance.lk கோவிட் – 19 பெருந்தொற்றுக்காக இலங்கை செலவிட்ட தொகையையும் பிராந்திய நாடுகளுடனான ஒப்பீட்டையும் வழங்குகிறது. கூடுதல் விபரங்களுக்கு:
https://publicfinance.lk/en/topics/Sri-Lanka%E2%80%99s-Expenditure-on-COVID-19-Response-is-Much-Lower-Than-its-Regional-Peers-1630477922.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

நிதியமைச்சு, ஆண்டறிக்கை 2020, பார்வையிட: http://oldportal.treasury.gov.lk/documents/10181/12870/AnnualReport-2020/6b2a56e6-80ff-41d6-aec9-76b479f86fb9 [last accessed 15 September 2021]

நிதியமைச்சு, அரையாண்டு நிதி நிலைமை அறிக்கை – 2021, பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/70d070ac-53be-474b-bad4-d3437991176d [last accessed 15 September 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன