அசோக் அபேசிங்ஹ

பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்ட நிறுவனங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்க கருத்து தெரிவித்துள்ளார்

"

இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் (2020-22) பொருளாதார நெருக்கடி காரணமாக 237,143 சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கை பாராளுமன்ற யூடியூப் சனல் | மே 7, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2020 முதல் 2022 வரையான காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 237,143 சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SME) மூடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க பாராளுமன்ற உரையொன்றின் போது குறிப்பிட்டுள்ளார். நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகள் (MSME) தொடர்பான விவாதத்தின்போது அவர் இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக MSMEகளில் ஏற்பட்ட தாக்கம் தொடர்பான அறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.

இந்த அறிக்கையின் பிரகாரம், ஜனவரி 2019 முதல் 2022 இறுதி வரையில் சுமார் 263,100 MSMEகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 90.1% (சுமார் 237,000) 2020 முதல் 2022க்குள் மூடப்பட்டுள்ளன (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதியுடன் ஓரளவு பொருந்துகிறது. எனினும், ஜனவரி 2019 ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்ட மொத்த நிறுவனங்களில் 97% நுண்பாக தொழில்முயற்சிகள் (Micro Enterprises) ஆகும் (இதில் நான்குக்கும் குறைவானவர்கள் ஈடுபடுவார்கள்). பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிட்டுள்ளதுடன் MSMEகளுக்குப் பதிலாக SMEகள் எனக் குறிப்பிட்டுள்ளார் என்பதை இது காட்டுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகள் நுண்பாக தொழில்முயற்சிகளை உள்ளடக்கியது என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், மூடப்பட்ட மொத்த நிறுவனங்களில் பாதிக்கும் குறைவானவை (41%) அதாவது சுமார் 108,100 MSMEகள், பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளதை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை காட்டுகிறது. ஏனெனில் மூடப்பட்டதற்கான காரணத்தையும் அந்தக் கணக்கெடுப்பு கேட்டறிந்திருந்தது (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). அதன் பிரகாரம், கோவிட் – 19 பெருந்தொற்று உட்பட பொருளாதார நெருக்கடி அல்லாத காரணிகள் பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டமைக்குப் பங்களித்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று நுண்பாக தொழில்முயற்சிகளையும் உள்ளடக்கியது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் அவர் குறிப்பிடுவதைப் போன்று SMEகளை மட்டுமல்லாது MSMEகளையும் கவனத்தில் கொள்ளும்போது அவர் குறிப்பிடும் பெறுமதி சரியாக உள்ளது. எனினும் நிறுவனங்கள் மூடப்பட்டதற்கு பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டுவதில் அவர் தரவுகளில் முக்கிய விபரத்தைக் கவனிக்கவில்லை எனத் தெரிகிறது. கணக்கெடுப்பில் நிறுவனங்கள் மூடப்பட்டமைக்கான காரணங்கள் கேட்கப்பட்டதுடன் பாதிக்கும் குறைவான நிறுவனங்கள் மூடப்பட்டமைக்கு (2019 ஆம் ஆண்டு முதல்) மட்டுமே பொருளாதார நெருக்கடி காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: MSME மூடல்கள்



மூலம்

பொருளாதார நெருக்கடி காரணமாக MSMEகளில் ஏற்பட்ட தாக்கம் 2022, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், http://www.statistics.gov.lk/Industry/StaticalInformation/OtherTablesReports/MSMEs_Report

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன