காஞ்சன விஜேசேகர

பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட நட்டத்தினால் பலனடைந்தவர்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தவறாக அடையாளம் கண்டுள்ளார்.

"

2005 - 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற பிணைமுறி பரிவர்த்தனைகள் குறித்த தடயவியல் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட 10,000 மில்லியன் ரூபா நட்டத்தில் சுமார் 96

டெய்லி நியூஸ் | ஜனவரி 30, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2020 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி வெளியான இந்த அறிக்கையில், 2002 – 2015 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி பரிவர்த்தனைகளினால் திறைசேரிக்கு ஏற்பட்ட நட்டத்தில் 96 சதவீதம் அரச நிறுவனங்களுக்கே சென்றுள்ளதாகவும், எனவே இதனால் ஏற்பட்ட இழப்பு சரிக்கட்டப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு FactCheck இலங்கை மத்திய வங்கியின் தடயவியல் தணிக்கை அறிக்கை 1 ஐ (5 அறிக்கைகளில்) ஆராய்ந்தது. 2002 ஜனவரி 1 முதல் 2015 பெப்ரவரி 28 வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்ட பிணைமுறி விநியோகம் தொடர்பில் இது விசாரணை செய்கின்றது.

‘நேரடியாக’ வழங்கப்பட்ட (ஏலங்கள் அல்ல) பிணை முறிகளினால் ஏற்பட்ட நட்டங்களை மாத்திரமே பரிவர்த்தனையில் ஈடுபட்ட எதிர்தரப்புக்கள் குறிப்பிடுகின்றன. ‘நேரடி விநியோகம்’ என்ற பதம் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பிணைமுறிகளை வழங்குவதைக் குறிக்கின்றது (அதாவது ஏலம் மூலமாக அன்றி). இவ்வாறு நேரடியாக வழங்கப்பட்ட பிணை முறிகளினால் 10,471 மில்லியன் ரூபா மொத்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதற்கு மாறாக, 10,471 மில்லியன் ரூபாவின் வெறும் 34.22 சதவீதத்திற்கு மாத்திரமே அரசாங்க நிறுவனங்கள் பரிவர்த்தனையின் எதிர்தரப்பாக இருக்கின்றன. ஊழியர் சேமலாப நிதியத்தை அரச நிறுவனமாகக் கருதி தவறாக 96 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தில் உள்ள தொகையானது வேலையில் உள்ள நபர்களின் தனியான கணக்குகளுக்கு உரியன, மாறாக அவை அரசாங்கத்திற்கு சொந்தமானவை அல்ல. இந்த நிதிகளுக்கு இலங்கை மத்திய வங்கியும், தொழில் திணைக்களமும் முறையே பாதுகாவலர் மற்றும் நிர்வாகியாக மாத்திரமே செயற்படுகின்றன.

இதன் விளைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அனைத்து நன்மைகளும், நட்டங்களும் அதன் உறுப்பினர்களினாலேயே அனுபவிக்கப்படுகின்றன, மாறாக அரசாங்கத்தினால் அல்ல. மேலும், தொழிற்படையின் பணியிலுள்ள சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே ஊழியர் சேமலாப நிதியத்தின் செயல் உறுப்பினர்களாக உள்ளனர். அதேவேளை, உறுப்பினர்கள் அல்லாதவர்களில் முறைசாரா துறை தொழிலாளர்களான முச்சக்கர வாகன சாரதிகள், கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயம், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் அடங்குவர். அத்துடன் வேலையில் இல்லாத மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இலங்கைப் பெண்கள் மற்றும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற வயதானவர்களும் இதில் அடங்குவார்கள்.

மேலும், பரிவர்த்தனைகளினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தின் 34.22 சதவீதத்தை தனியார் தரப்புக்கள் அன்றி அரச நிறுவனங்கள் மாத்திரமே பயன் பெற்றுள்ளன என்பதை (தடயவியல் தணிக்கைகளில் மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில்) ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அரச வங்கிகள் முதன்மை பரிவர்த்தனையாளர்களாக செயற்பட்டு தனியார் தரப்புக்களுக்காக கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்திருக்கலாம். உதாரணமாக, 2015 பெப்ரவரி பிணைமுறி ஊழலை விசாரணை செய்த போது, இலங்கை வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட 60 சதவீத பிணை முறி பரிவர்த்தனையின் பயனாளி தனியார் நிறுவனமான பெர்ப்பெச்சுவல் ரெசரிஸ் என்பது பாராளுமன்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவினால் கண்டறியப்பட்டது – தனியார் நிறுவனத்திற்காக இலங்கை வங்கி பிரதிநிதியாக செயற்பட்டுள்ளது.

2002 – 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற நேரடியான பிணை முறி வழங்கலில் திறைசேரிக்கு ஏற்பட்ட நட்டத்தின் 96 சதவீதம் அரச நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதனால், ஏற்பட்டுள்ள நட்டம் சமப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார். இரண்டு விடயங்களில் இது நம்பத்தகுந்த கூற்று அல்ல. முதலாவது, அரச நிறுவனங்களினால் 34.22 சதவீதம் மாத்திரமே பரிவர்த்தனை செய்யப்பட்டன (ஊழியர் சேமலாப நிதியம் அரசுக்கு சொந்தமானது அல்ல). இரண்டாவதாக, அந்த அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்காக பகுதியளவேனும் பரிவர்த்தனைகளை முன்னெடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த தகவல்களும் இல்லை.

எனவே, இந்தக் கூற்றினை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு  பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது,  ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது,  FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.

‘நேரடி வழங்கலின்’ மூலம் அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிகர இலாபம்/நட்டத்தை மதிப்பீடு செய்வது இங்கு ஆராயப்படவில்லை. இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட அறிக்கை 1 ‘நேரடி வழங்கலை’ மாத்திரமே மதிப்பீடு செய்கின்றது, இதற்காக மூன்றாம் தரப்புக்கள் அரசாங்கத்திற்கு ‘குறைவான தொகை’ செலுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிற ‘நேரடி வழங்கல்’ பரிவர்த்தனைகளுக்கு மூன்றாம் தரப்புக்கள் (பெரும்பாலும் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள்) அதிக தொகை செலுத்தியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. இவை அறிக்கை 1 இல் மதிப்பீடு செய்யப்படவில்லை. உதாரணமாக, பிணை முறிகளில் ஊழியர் சேமலாப நிதியத்தின் முதன்மை மற்றும் இரண்டாம் சந்தை பரிவர்த்தனைகள் குறித்து ஆராயும் அறிக்கை 2 இல், குறைந்த வீதத்தில் பிணைமுறிகளை வாங்கியதில் ஊழியர் சேமலாப நிதியம் 9,047 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிணைமுறியின் மதிப்பை விட அதிகமாக செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஊழியர் சேமலாப நிதியம் நேரடி வழங்கல் மூலமாக 6,417 மில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுக்கொண்ட போதும், முதன்மைச் சந்தையில் மற்றொரு நேரடி வழங்கல் மற்றும் ஏலத்தின் போது 9,047 மில்லியன் ரூபாவை இழந்துள்ளது



மூலம்

  • BDO இந்தியா, இலங்கை மத்திய வங்கி, அறிக்கை 1 – 2002  ஜனவரி 1 முதல் 2015 பெப்ரவரி 28 வரை வழங்கப்பட்ட பிணை முறிகள் தொடர்பிலான விசாரணை (நொவம்பர் 2019), பக்கம் 23,24,25,148,  click here to access the report [last accessed 4 March 2020].
  • BDO இந்தியா, இலங்கை மத்திய வங்கி, 1 ஜனவரி 2002 முதல் 28 பெப்ரவரி 2015 வரை பிணை முறிகளில் ஊழியர் சேமலாப நிதியம் முதன்மை மற்றும் இரண்டாம் சந்தையில் முன்னெடுத்த பரிவர்த்தனைகளை விசாரணை செய்யும் அறிக்கை 2 (நொவம்பர் 2019),  பக்கம் 29, click here to access the report [last accessed 4 March 2020].
  • அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை, 2015 பெப்ரவரி முதல் 2016 மே வரையான காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி முறிகள் வழங்கல் தொடர்பில் இடம்பெற்றுள்ள நிதிசார் முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கான விசேட குழுவாகச் செயலாற்றிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை, பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இல109 (ஒக்டோபர் 2016),  பக்கம் 29, பார்வையிட: https://www.parliament.lk/uploads/comreports/1478667396060758.pdf#page=1 [last accessed 4 March 2020].
  • இலங்கை பாராளுமன்றம், 1965 ஆம் ஆண்டின் 18 ஆம் இல., 1970 ஆம் ஆண்டின் 16 ஆம் இல., 1971 ஆம் ஆண்டின் 8 ஆம் இல., 1971 ஆம் ஆண்டின் 24 ஆம் இல. திருத்தங்களை உள்ளடக்கிய 1958 ஆம் ஆண்டின் 15 இல. ஊழியர் சேமலாப நிதி சட்டம், பார்வையிட: http://www.epf.lk/assets/library/amendments/act_of_1958.pdf [last accessed 4 March 2020].