உண்மைச் சரிபார்ப்புகளும்
2018 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் தற்காலிகமான மதிப்பீடுகளாக பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.1919.973 பில்லியன் (~ரூ.1920 பில்லியன்) அத்துடன் மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் ரூ.852.19 பில்லியன்.
பாராளுமன்ற உறுப்பினர் தனது கூற்றில் 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த வருமானத்தை சரியாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்ட மொத்த வட்டிக்கொடுப்பனவுகள் ரூ.2088 பில்லியன் என்பது உண்மையான தொகை ரூ.852 பில்லியனுடன் பொருந்தவில்லை. இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் முரண்படுவதுடன், வட்டிக்கொடுப்பனவுகள் மொத்த வருமானத்தில் இருந்து ரூ.1068 பில்லியன் குறைவாக இருக்கின்றது. மாறாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போன்று ரூ.168 பில்லியனால் அதிகரிக்கவில்லை.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினரால் குறிப்பிடப்பட்ட ரூ.2088 பில்லியன், 2018 ஆம் ஆண்டில் காணப்பட்ட கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் ரூ.1236 பில்லியனுடன், மொத்த வட்டிக்கொடுப்பனவையும் சேர்த்ததாக இருக்கலாம். எனினும், கடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் கடன்களின் முதல் தொகையை மீளச் செலுத்துதலை குறிக்கும்; இவை கடனுக்கான வட்டி செலவு அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிதிப் புள்ளிவிபர கையேட்டின் பிரிவு 4.24 வட்டிக்கொடுப்பனவு என்பது கடனின் முதல்தொகையை மீளச்செலுத்துவதில் இருந்து மாறுபட்டதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, வட்டியானது அரசாங்கத்தின் செலவீனமாக கணக்கிடப்படுகின்றது. ஆனால் கடனின் முதல் தொகையை மீளச்செலுத்துவது அவ்வாறு கருதப்படுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது வட்டிக்கொடுப்பனவு மாத்திரமே ஆகும். வட்டியும், முதலும் சேர்ந்த தொகை அல்ல. அவ்வாறு செய்ததன் மூலம் அவர் தகவல்களைத் தவறாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்
2018 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கை, அத்தியாயம் 6, அட்டவணை 6.2, 6.3, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/ta/10_Chapter_06.pdf
சர்வதேச நாணய நிதியம், 2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்க நிதிப் புள்ளிவிபர கையேடு, பக்கம் 71, பார்வையிட: https://www.imf.org/external/Pubs/FT/GFS/Manual/2014/gfsfinal.pdf