ஹேஷா விதானகே

பாராளுமன்ற உறுப்பினர் விதானகே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நட்டம் தொடர்பில் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

2023 நிதியாண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டம் ரூ.609 பில்லியன் […] இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் […] ரூ.107,000 ஐச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற யூடியூப் சேனல் | மே 8, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் திரட்டப்பட்ட நட்டம் ரூ.609 பில்லியன் எனவும் இதன் காரணமாக நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சராசரியாக ரூ.107,000 நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது பாராளுமன்ற உறுப்பினர் விதானகே தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வருடாந்த அறிக்கை 2022/2023 (SLAAR) மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் குடியிருப்பாளர் வருமானம் மற்றும் செலவின அளவீடு 2019 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

குறைந்தது கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்ச்சியாக தேறிய நட்டங்களை எதிர்கொண்டுள்ளதாக SLAAR (பக்கம் 114 இல்) குறிப்பிடுகிறது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). 2023 நிதியாண்டின் இறுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் திரட்டப்பட்ட நட்டம் ரூ.612 பில்லியன் என அந்த அறிக்கையின் பக்கம் 58 குறிப்பிடுகிறது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகின்றது.

2019 குடியிருப்பாளர் வருமானம் மற்றும் செலவின அளவீட்டின் பிரகாரம் இலங்கையிலுள்ள வீட்டலகுகளின் எண்ணிக்கை 5.7 மில்லியன் ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் “குடும்பங்கள்” எனக் குறிப்பிடும்போது, அவர் வீட்டலகுகளைக் குறிப்பிடுகிறார் என FactCheck.lk புரிந்துகொள்கிறது. எனவே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் திரட்டப்பட்ட நட்டத்தை நேரடியாகவும் சமமாகவும் இலங்கையிலுள்ள ஒவ்வொரு வீட்டலகுகளுக்கும் பங்கிட்டால் ஒவ்வொரு வீட்டலகிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போன்று ரூ.107,368 கடன் சுமை ஏற்படும்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் திரட்டப்பட்ட நட்டம் மற்றும் அதனை இலங்கையின் குடும்பங்களுக்கான சராசரி கடன் சுமையாகக் குறிப்பிடுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சரியாக உள்ளார்.

எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை நேரடியாகச் செலுத்துவதில்லை. எனினும் அதிக வரிகள் மற்றும் குறைக்கப்பட்ட பொதுச் சேவைகள் போன்ற ஏனைய பல்வேறு பொருளாதார வழிகள் மூலம் குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.

அட்டவணை 1: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர இலாபம்/(நட்டம்) 2014-2023 (ரூ.பில்லியன்)

 

மூலம்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வருடாந்த அறிக்கை 2022/2023



மூலம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வருடாந்த அறிக்கை 2022/2023

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன