அனுர பிரியதர்சன யாப்பா

பாராளுமன்ற உறுப்பினர் யாப்பா வனப்பரப்பு தொடர்பில் சரியாகத் தெரிவிக்கின்றார்

"

இலங்கையின் வனப்பரப்பு 29.2% சதவீதம் மாத்திரமே.

லங்காதீப | டிசம்பர் 9, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இலங்கையில் காடுகளின் பரப்பு 29.2% என தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, வன பாதுகாப்பு திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிபரங்களை FactCheck ஆராய்ந்தது. துரதிர்ஷ்டவசமாக கிடைக்கப்பெற்ற சமீபத்திய உத்தியோகபூர்வத் தரவுகள் 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டவை (அட்டவணை 1).

‘வனப்பரப்பு’ என்பதற்கான வரையறை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலுள்ள எஸ்டேட் மற்றும் பிற அரச நிலங்கள், ஆற்றங்கரை மற்றும் வழிபாட்டுத்தலங்கள், தோட்டங்கள் உள்ளிட்ட தனியாருக்குச் சொந்தமான பாரிய நிலப்பரப்புகள், சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கையான காடுகளையும் உள்ளடக்கியது. அதன் பிரகாரம் 2012 ஆம் ஆண்டு அறிக்கையிடப்பட்டதன் படி இலங்கையின் வனப்பரப்பு 29.7% ஆகும். இந்த சதவீதமானது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டதுடன் பொருந்திப் போகின்றது. நில அளவைப் பொறுத்தவரை 0.5% வித்தியாசமானது 32,000 ஹெக்டேருக்கும் அதிகமாகும், இது சுமாராக கொழும்பு மாவட்டத்தின் அளவில் பாதியாகும்.

எனினும், சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் மற்றும் வரவிருக்கும் வன பாதுகாப்பு திணைக்களத்தின் தொகுதி 40 வெளியீட்டில் வனப்பரப்பு தொடர்பான புள்ளிவிபரம் குறைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் சதவீதமானது கிடைக்கும் சமீபத்திய தரவான 2012 ஆம் ஆண்டின் தரவுடன் ஓரளவு பொருந்திப் போகின்றது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் வனப்பரப்பில் சிறியளவான வீழ்ச்சி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் சதவீதத்துடன் மேலும் பொருந்திப் போகும். ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.

புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் கிடைத்தவுடன் இந்த உண்மை சரிபார்ப்பினை FactCheck மீண்டும் சரிபார்க்கும்.



Additional Note

குறிப்பு: “வனப்பரப்பு” என்பதன் கீழ் எந்த வகையான நிலப்பரப்புக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் பலதரப்பட்டவர்களிடம் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) காடு என்பதனை “10 சதவீதத்திற்கும் அதிகமான மரங்களின் அடர்த்தியினால் மூடப்பட்ட நிலப்பரப்பு (அல்லது அதற்கு சமமான இருப்புநிலை) மற்றும் 0.5 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு என வரையறுக்கின்றது. மரங்கள் முதிர்ச்சியடையும் போது குறைந்தது 5 மீற்றர் உயரத்தை எட்ட வேண்டும். காடுகள் மேலும் தோட்டங்கள் மற்றும் இயற்கையான காடுகள் என பிரிக்கப்படுகின்றன.” இந்த வரையறை, தோட்டங்கள்/ வணிக ரீதியான காடுகள் மற்றும் இறப்பர் தோட்டங்களை உள்ளடக்க அனுமதிக்கின்றது. இதன் பிரகாரம், இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் வனப்பரப்பு 31.4 சதவீதமாக அதிகரிக்கின்றது.


மூலம்

எதிரிசிங்க.ஈ, ஆரியதாச.கே மற்றும் சாந்தனி.ஆர், இலங்கையின் வனப்பரப்பு மதிப்பீடு”, The Sri Lanka Forester (The Ceylon Forester), தொகுதி 34, ISSN 0258-624X (2012). பக்கம் 1 – 12.