பாட்டலி சம்பிக்க ரணவக்க

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க: இலங்கையின் சீனி மற்றும் கொழுப்பு (இறக்குமதி) உயர்ந்துள்ளதை சரியாகக் குறிப்பிடுகின்றார்.

"

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சீனி இறக்குமதி 38 சதவீதத்தினாலும், எண்ணெய் மற்றும் கொழுப்புக்களின் இறக்குமதி 237 சதவீதத்தினாலும் உயர்ந்துள்ளன.

பாராளுமன்ற ஹன்சாட் | பிப்ரவரி 11, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் 2019 மற்றும் 2020க்குரிய வருடாந்த இறக்குமதி புள்ளிவிபரங்களை FactCheck ஆராய்ந்தது. இது தற்காலிகமான இறக்குமதி தரவுகளை வழங்கும் வெளிநாட்டுத்துறை புள்ளிவிபரங்கள் மற்றும் மாதாந்த பொருளாதார குறிகாட்டிகளின் கீழ் வெளியிடப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுக்கான தரவுகளை அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலப்பகுதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒப்பிடுகின்றார் என FactCheck கருதுகின்றது – இந்த அறிக்கை வெளியான போது அந்த மாதங்களுக்கான தரவுகள் மாத்திரமே கிடைத்திருக்கும்.

சீனி மற்றும் இனிப்பு வகைகளின் இறக்குமதி 2019ல் ஐ.அ.டொலர் 179.9 மில்லியனிலிருந்து 2020ல் ஐ.அ.டொலர் 247.4 மில்லியனாக உயர்ந்துள்ளதை தரவுகள் (அட்டவணையில்) சுட்டிக்காட்டுகின்றன. இது 37.5% அதிகரிப்பாகும். எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்களின் இறக்குமதி 2019ல் ஐ.அ.டொலர் 25.7 மில்லியனிலிருந்து 2020ல் ஐ.அ.டொலர் 86.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது 237.2% அதிகரிப்பாகும். இந்த இரண்டு பெறுமதிகளும் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்திப் போகின்றன.

ஆகவே, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தகம், இறக்குமதி – ஆண்டு (1990 முதல் தற்போது வரையில்) அட்டவணை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/statistics/economic-indicators/monthly-indicators [last accessed 26 March 2021]

இலங்கை மத்திய வங்கி, பொருளாதார குறிகாட்டிகள் புள்ளிவிபரம், மாதாந்த பொருளாதார குறிகாட்டிகள், மாதாந்த பொருளாதார குறிகாட்டிகள் – டிசம்பர் 2020 அட்டவணை, பார்வையிட: https://www.cbsl.gov.lk/statistics/economic-indicators/monthly-indicators [last accessed 26 March 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன