உண்மைச் சரிபார்ப்புகளும்
நாட்டின் 56 சதவீதமான மின்சாரம் தற்போது நீரின் மூலமாக உற்பத்தி செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர தெரிவிப்பதுடன் கட்டணங்களைக் குறைப்பதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார். மின் கட்டணங்களைக் குறைப்பதாக தேர்தலுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பும்போதே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.[1]
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மாதாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகளை FactCheck.lk ஆராய்ந்தது.
நீர் மின் உற்பத்தி ஒவ்வொரு மாதமும் கூடிக் குறையும். டிசம்பர் மாதத்தில் நீர் மின் உற்பத்தி பொதுவாக அதிகரித்துக் காணப்படுவதுடன் மொத்த வருடாந்திர மின் உற்பத்தியில் நீர் மின் உற்பத்தியின் சராசரி பங்களிப்பு மிகவும் குறைவாகக் காணப்படுவதை விளக்கப்படம் 1 காட்டுகின்றது. 2024 ஜனவரி முதல் நவம்பர் வரை நீர் மின் உற்பத்தியின் பங்களிப்பு சராசரியாக 32% மட்டுமே ஆகும் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).
பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 56% என்பது, 2024 டிசம்பரில் மொத்த மின்சார உற்பத்தியில் நீர் மின் உற்பத்தியின் பங்களிப்புடன் பொருந்துகின்றது. இது 59 சதவீதமாக இருந்தது (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்). எனினும் மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களால், டிசம்பர் மாதத்திற்கான சராசரி உற்பத்தியைக் கருத்தில்கொண்டு ஆண்டு முழுவதும் மின்சாரத்தை மலிவாக உற்பத்தி செய்வதற்கான திறன் உள்ளது எனப் பொதுமைப்படுத்துவது தவறாகும். பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கை, குறிப்பாக “தற்போது” என்ற வார்த்தையின் பயன்பாடு இதையே குறிக்கின்றது.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
மேலதிகக் குறிப்பு: 2024 டிசம்பருக்கான மாதாந்தப் பெறுமதிகள் இதுவரை வெளியிடப்படாத காரணத்தால் இலங்கை மத்திய வங்கியின் வாராந்தக் குறிகாட்டிகளில் உள்ள நாளாந்தப் பெறுமதிகளைக் கொண்டு அவை கணக்கிடப்பட்டுள்ளன.
விளக்கப்படம் 1: மொத்த மின் உற்பத்தியில் நீர் மின் உற்பத்தியின் மாதாந்தப் போக்குகள் (2019 – 2024)
*2024 டிசம்பருக்கான மாதாந்தப் பெறுமதிகள் இதுவரை வெளியிடப்படாத காரணத்தால் இலங்கை மத்திய வங்கியின் வாராந்தக் குறிகாட்டிகளில் உள்ள நாளாந்தப் பெறுமதிகளைக் கொண்டு அவை கணக்கிடப்பட்டுள்ளன.
அட்டவணை 2: மொத்த உற்பத்தியின் சதவீதமாக வருடாந்திர நீர்மின் உற்பத்தி (2019 – 2024)